web counter

உதவாக்கரை
சென்னாகரா falls - பயணக்கட்டுரை ( ???வா?, ??? 29, 2004 )



பணியகத்திலிருந்து நேற்று சீக்கிரமாகவே வந்துட்டேன். அதான் சரி எங்கயாவது ஒரு சுற்றுலா போகலாம்னு முடிவு பண்ணினேன். நான் திட்டம் போட்டது நயாகரா falls போகறதுக்குதான். இது வரைக்கும் ஒரு தடவை கூட போனதில்லை. ஆனால் மறுநாள் பணியகம் போகணும்ங்கறதாலயும், 12/13 மணிநேரங்களுக்குள் அமெரிக்கா போய்விட்டுத் திரும்பிவிடக்கூடிய தொழில்நுட்பம் எல்லாம் இன்னும் வசப்படவில்லை என்பதாலும் என் பயணத்திட்டத்தை மாற்றும்படி நேர்ந்து விட்டது.

சரி ஒரு மணி நேரத்துல போய்ட்டு வர மாதிரி ஏதாவது இடம் இருக்கிறதா என்று என் காரியதரிசியை (அதுவும் நானேதான்) விசாரித்த பொழுது ரெண்டு தெரு தள்ளி காரணீŠவரர் கோவில் குளம் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. எனவே என் அத்யந்த நண்பர்களான கை, காது, மூக்கு, கண், கால்கள் (வழக்கம் போல் அறிவு மட்டும் missing) ஆகியவற்றுடன் கிளம்பினேன்.

பயணதிற்கு சிறப்பாக வாகனவசதியும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அதிநவீன TVS Champ, 1995 Model. உற்சாகமாக பயணிகள் அனைவரும் கிளம்பிய நொடியில் அந்த உண்மை தெரியவந்தது. எரிபொருள் அதில் இல்லவே இல்லை. சரி, ஆனது ஆகட்டும் என்று அந்த சொகுசு வாகனத்தை விட்டுவிட்டு எல்லோரும் நடந்தே சுற்றுலாவுக்குக் கிளம்பினோம்.

நாங்கள் சென்னை நகர fallsஐ நோக்கி சாலையில் நடக்க ஆரம்பித்தோம். வழிநெடுக இந்நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக (இரண்டொருவர் கொண்ட கூட்டம்) அங்கங்கே குழுமியிருந்தனர். பக்கத்துத் தெருவை அடைந்ததும் எங்களிலிருந்து சற்றே கலாச்சாரத்தில் மாறுபட்டிருந்தனர். அவர்கள் மொழியில் சில வித்யாசங்கள் இருந்தது.

குறிப்பாக தமிழ் அகராதியில் அச்சிடப்படாத/அச்சிட முடியாத வார்த்தைகள் நிறைய அவர்கள் பேச்சில் கலந்திருந்தது. பயணத்திற்குத் தலைமை தாங்கியிருந்த நான் ஒரு ஆட்டோ சாலையைக் கடக்கும் வேளையில் குறுக்கே சென்றேன். அதனால் நானும் அவ்வாறான ஒரு வார்த்தையை ஆட்டோ ஓட்டுனரின் வாயாலிருந்தே கேட்கும் பேறு பெற்றேன்.

ஒரு தெரு கடந்ததுமே சகபயணிகளான வலக்காலன் மற்றும் இடக்காலனுக்கு வலியெடுத்தது. எனவே கொஞ்சம் ஓய்வெடுக்க ஏதேனும் ஐந்து நட்சத்திர விடுதி அருகில் இருக்கிறதா என்று தேடினோம். பேட்டையருகில் ஒன்றும் காணக்கிடைக்காது போகவே, சரி குழந்தைப் பயணிகள் நாக்கு மற்றும் வயிருகளுக்கு ஏதேனும் விளையாட வாங்கிக்கொடுக்க எல்லோரும் நினைத்தோம்.

அப்பொழுதுதான் மாந்தோப்புப் பள்ளியருகில் தெருமுனையில் ஐந்துநட்சத்திர §†¡ட்டல்களியும் மிஞ்சி சகல வசதிகளுடனும் இருக்கும் ஒரு பானிப்பூரி கடையை நாங்கள் பார்த்தோம்.

paanipoori_paani

அங்கே ரூ.9-க்கு அமிர்தரசப் பூரிகள் அருந்திவிட்டு கடைக்காரனுக்கு ஓரளவு தமிழ் கற்றுக் கொடுத்தும் மகிழ்ந்தோம். எனினும் கடைக்காரர் அதிலெல்லாம் த்ருப்தியடையாததால் அவருக்கு கடைசியில் ஒரு பத்து ரூபாய்த் தாளைக் கொடுத்து விட்டு மீதம் சில்லரை ரூ. 1 மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது.

பிறகு §ƒ¡ன்Š ரோடிலிருந்து நேராகச் செல்லாமல் சைதைக்கே பெருமை சேர்க்கும் sub-way/bridgeயும் பார்த்து வர எண்ணினோம். நான் தினமும் வீட்டிலிருந்து தூங்குமிடம் செல்வது (பணியகம்) இந்த வழியாகத்தான் என்பதால் அதை மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியே உண்டானது.
உள்ளே!வெளியே!
saidai_subway_inside

பாலத்தின் உள்ளே!
saidai_subway_slope
சப்-வேக்குள்ள எறங்கி....


பாலத்தின் உள்ளே, வெளியே, மேலே, கீழே என்று எங்கும் வ்யாபாரிகள் ஆக்கிரமித்து நாட்டு மக்களுக்கு சேவை
செய்யக் காத்திருந்தனர். சிலர் பாலத்தையே காவல் காக்கும் சேவை போன்று ஈடுபட்டு இரவானதும் அங்கேயே படுத்து உறங்கியும் விடுகின்றனர்.


karumbu_joose


பாலத்தைக் கடந்ததும் ப்ரதான சாலையிலிருக்கும் ஓர் உ.பா [கரும்புச்சாறு (எ) உல்லாச பானம்] கடை.


ஒருவாராக பாலத்தைப் பார்த்து விட்டு Boys புகழ் Fallsக்கு வந்தோம். அங்கே வந்ததும்தான் தெரிந்தது, நம் பயண வழிகாட்டி (அதுவும் நானேதான்) எவ்வளவு ஏமாற்றி விட்டார் என்பது. அங்கே வெறும் குளம் மட்டுமே இருந்தது. சென்னாகரா Falls என்று சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. ஏமாற்றமடைந்த பயணிகளின் கோபப்பார்வையில் (†¢, †¢... அதுவும் சா‡¡த் நானேதான்) நடுங்கிய கைடு, எல்லோரையும் அமைதிப் படுத்த ஓரு தகவல் சொன்னார்.


kaaraneechcharam_kulam
'மாரோ மாரோ'


"இது சாதாரண குளம் இல்லை..." என்று ஆரம்பித்தார் வழிகாட்டி.

"தெரியும், தெப்பக்குளம்." என்றார் வயதான ஒரு சகபயணி.

"அதுவும்தான். ஆனா அது மட்டும் இல்லை."

"பின்ன?"

"ட்ரம்Š அடிக்கப்பட்ட தடம்
„ங்கரால் இயக்கப்பட்ட ƒடம்
Boys படம் எடுக்கப்பட்ட இடம்."

"என்ன இது? ஒன்னுமே புரியலை. கவிதை வடிவுல பேசறீங்களே!" என்றார் ஓர் இலக்கியவாதிப் பயணி.

"புரியலையா? அப்போ அது கவிதைதான். அதாவது, 'மாரோ மாரோ'ன்னு ஒரு பாட்டு வருமே பாய்Š படத்துல. அந்தப் பாடலில் வரும் பல காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டது. ஒரு சில காட்சிகள் மட்டுமே சேப்பாக்கம் சிதம்பரம் Stadium போன்றவற்றில் எடுக்கப்பட்டன." என்று விளக்கினார் வழிகாட்டி.

"ஆ, அந்தப் பாட்டுல நெƒம் Šடேடியம் மாதிரியே இருந்ததே? கொஞ்சம் கூட தண்ணி இருந்த மாதிரியே தெரியலை?" என்று க்ராமத்தான் போலத் தோற்றமளித்த கூட வந்த ஓர் பயணி கேட்டார்.

"அட நாலேட்ˆ ஃப்ரூட்டே! சைதாப்பேட்டைல என்னிக்கு தண்ணி இருந்துருக்கு. இந்த ஊர் Šபெ„¡லிட்டியே barல கடைக்கற தண்ணி கூட boreல கடைக்காதாங்கறதுதான்!" என்று சைதை மண்ணின் மைந்தர் பெருமையாகத் தெரிவித்தார் (இதுவும் நானேதான்).

சரி, கன்னிக்கும் தண்ணிக்கும் நமக்கு ராசியே இல்லை என்று நான் வீட்டை நோக்கி நடையைக் கட்டினேன்.

க்ருபா



25 dharma adigal

கன்னிக்கு ராசியில்லைன்னு புதுசா ஒரு பிட்டு வந்து விழுந்திருக்கே.. என்னாப்பா இது, மைலை சங்கரனார் கூட ரொம்ப சேராதேன்னு இதுக்குத் தான் அடிச்சுக்கிட்டேன்.
6/29/2004 9:30:11 AM      Meenaks    


ஊங்அல்லுக்கு சரிய தான் பெர் வஷிருகாரு Kஉப்புசாம்ய்




6/29/2004 12:47:13 PM      Uma    


உங்களுக்கு சரியாத் தான் பேரு வஷ்ஷிருக்காரு குப்புசாமி.

பி.கு. இந்த தங்க்லீஷ் கன்வர்ஷ்ன் எல்லாம் வேணும்னு யாராவது உங்களை கேட்டாங்களா?

6/29/2004 1:01:16 PM      By the one who messed up the previous comment:(    


"சைதை வாசியான நம் பேட்டை மக்கள்காள்! குளத்தண்ணிக்கும் குடம் கொண்டு வரும் கன்னிக்கும் ராசிப்பொருத்தமே இல்லைன்னு சொன்னேன். இதுல என்ன புது பிட்டு இருக்கு?"

அப்டின்னு எல்லாம் கேட்டா ரொம்ப ஓவரா சமாளிக்கற மாதிரி இருக்கும் இல்லையா மீனாக்ஸ்? ;-)

(ஐயோ, ஐயோ போச்! இப்படிக் கூட முறைப்பீங்களா மீனாக்ஸ் இதைப் படிச்சுட்டு?)


குப்புசாமி பொருந்தத்தான் பெயர் வைப்பார் என்பது நாடு அறிந்ததே உமா மகேஸ்வரித்தாயாரே! அப்படியே யாராவது ஒரு டாக்டர் பட்டமோ, கலெக்டர் பட்டமோ, அல்லது பொறியாளர் பட்டமோவும் குடுங்களேன், மாஞ்சா & பெரு சங்கிலி செலவை நானே பாத்துக்கறேன்.

"By the one who messed up the previous comment:(", இந்த தங்க்லீஷ் கன்வர்ஷன் எல்லாம் போய் வேணும்னு யாராவது என்னைக் கேப்பாங்களா?

க்ருபா

6/29/2004 2:19:15 PM      S Krupa Shankar     Email    Home Page


உமா மாதிரி பரிதாபத்துக்கு உரியவங்க தப்பு தப்பா அடிக்கறது செம ரகளை கிருபா! கன்னிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் மேனாக்ஸ்? நான் நல்ல புள்ளை இல்லையோ!! ஒரு டிஜிட்டல் கேமரா வந்தாலும் வந்தது, நம்ம பேட்டை பன்ற லொள்ளு தாங்அ முடியலப்பா!!
6/29/2004 2:32:45 PM      shankar    


ஹை! ஜோடியா கமெண்ட் போட்டிருக்கோமே!!
6/29/2004 2:34:13 PM      shankar    


திருட்டு விசிடி-லேர்ந்து உருவினா மாதிரி இருக்கு :-)

அலோ, காளியப்பா ஆஸ்பிடல் பார்ட்டி: என்ன ஒரு டெவலப்மெண்ட்டும் இருக்கா மாதிரி தெரியலியே. வார்த்தைச் சிக்கலா? :-)

அலோ, தண்ணிக்காக ஃபீலிங் வுடுற பார்ட்டி: இப்டி யாத்திரை போனா ராசி வராது. அததுக்குன்னு எடம் இருக்குல்லியா? ஸ்பென்சர், நுங்கைல லாண்ட்மார்க்குக்கு எதுத்தாப்ல ஒண்ணு இருக்குமே அங்கெல்லாம் யாத்திரை போவணும் :-)

6/29/2004 2:55:03 PM      Pari     Email    Home Page


தங்லீஸ்ல்லாம் நான் நம்மரதில்லை உமா! . ஒரு preview இருந்தா try பண்ணலாம்..எ-கலப்பையும் *கடல மிட்டாய்+ பு.போ* போட்டிக்காக நடக்கமாட்டுங்கிறது..
ஹும்..பக்கத்து வீட்டு கிச்சால்லாம்(கன்னிக்கு ராசியில்லைன்னு) உனக்கு போட்டியா வந்துட்டான் அமுல் ! ஜாக்கிரதை !
மீனாக்ஸுக்கு குஷி தான்!

6/29/2004 2:56:53 PM      raviaa     Email   


அட, ஆமாம் „ங்கர்! இப்போதான் பாக்கறேன். ஒரே சமயம் கமெண்ட் போட்டோம், ஒரே chess tournament-ல §ƒ¡டிய செலக்ட்டும் ஆகாமலும் போனோமே. :-))

பரி, திருட்டு வி.சி.டி.யா? டிƒ¢ட்டல் cameraன்னு நெனச்சு வாங்கினேன் ஒரு webcam! :-((

பரி & ரவியா! இருங்க, இருங்க. என் சோகக்கதையே வேற!! „ங்கர்க்கு நடந்த மறுநாளே சொல்லிட்டேன், உங்களுக்கும் இதோ சொல்லிடறேன். "கன்னி ராசி"க்கதை வந்து, பொண்ணு பாக்க ஏற்பாடு நடந்ததா, பொண்ணோட அம்மா photo கேட்டாங்களா, பொண்ணுக்கு மின்னஞ்சல்ல அனுப்ப சொன்னாங்களா, நானும் அனுப்பினேனா, "நல்லா இருக்கு, close-upல இன்னொரு photo அனுப்புங்க, ரகசியமா"ன்னு பொண்ணுகிட்ட இருந்து மின்னஞ்சல் வந்ததா, "நிச்சயம் ஆற வரைக்கும் நாம பேசிக்க வேண்டாம். அப்பறம் fix ஆகாட்டி ரெண்டு பேருக்குமே க‰டம்"னு advise எல்லாம் பண்ணி அனுப்பினேனா...fanaal!!!! ரெண்டு நாள் கழிச்சு "ƒ¡தகம் சரியில்லை"ன்னு சொல்லிட்டாங்க பொண்ணு வீட்டுல. கன்னிராசிக்கும் தண்ணிராசிக்கும் தொடர்பு இதுதான் பராபரமே!

6/29/2004 3:29:32 PM      S Krupa Shankar     Email    Home Page


இது ஏற்கனவே கேட்ட கதைதானே :P
6/29/2004 4:47:05 PM      Pari     Email    Home Page


திருப்பியும் சொதப்பிடாம இருக்கணுமேன்னு பயந்துகிட்டே தான் எழுதுறேன், ரவியா சொல்ற மாதிரி ப்ரிவியு வசதி செஞ்ஷிங்கன்னா என்னை மாதிரி 'பரிதாபத்துக்கு' உரியவுங்களுக்கு உதவியா இருக்கும்!
6/29/2004 7:14:34 PM      Fingers crossed that I get it right this time    


அடப்போப்பா, முதலிரவில மனைவி கிட்ட பேசற மாதிரி கதை எழுதினதுக்கே என்னைக் கண்டபடி கைமா பண்ணினாங்க. உனக்கு எதுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த வேலையெல்லாம்??
6/30/2004 7:50:00 AM      Meenaks    


நானும் உமவை வழி மொழிஹிரென்...முடிஞ கொஞம் சொல்லி குடுங்அப்ப!!!
6/30/2004 9:08:40 AM      adhithya     Email   


அட அட அட.என்னலெயெ தாங்அ முடியலை..கசி மதிரி கேல ஒரு பொட்டி குடுப்ப சொர்ரெச்ட் பன்னிகிரொம்
6/30/2004 9:11:16 AM      adhithya    


காசி கிழே
6/30/2004 9:12:03 AM      66.30.23.207    


ஐயோஓஓஒ ரவியா!!!! அது என்ன கடலமிட்டாய்+பு.போ போட்டி? ஒன்னுமே புரியலையே!

இப்போ preview try பண்ணிப் பாருங்க. :-)

பாத்து, ரொம்ப மடக்கி fingers சுளுக்கிக்கப் போகிறது உமா. :-)) கீழே போட்டுட்டேன்.

அட ஆமாம் மீனான்க்Š! "அந்த" கதை வி„யத்தை மறந்துட்டேனே!. சரி, சரி., „ங்கர் கடக்கட்டும் „ங்கர். நீங்களே எனக்குத் தக்க ஆசானாக இருந்து உதவுங்கள். ;-)

ஆதித்யா, அந்த commentboxல englishல அடிச்சுட்டு, கீழ இருக்கற "Preview" சுட்டியை க்ளிக் பண்ணிப் பாருங்க. popupல வரும் preview.

ஆனா உங்களுக்கெல்லாம் தெரியாதது இல்ல, freeserverல bandwidth/datatansfer limitation, script execution time எல்லாம் இருக்கு. முழுதும் ƒ¡வாŠக்ரிப்டையும் நம்ப முடியாது இங்க எல்லாம். hosting company கூடவே அனுப்பற ƒ¡வாச்ரிப்ட் காலை வாரி விட்டுடும். அதான் எந்த clientside Šகிரிப்ட்டும் பயன்படுத்தவே பயமா இருக்கு. ஏதோ தற்காலிகமா முடிஞ்சதைப் பண்ணி வெச்சுருக்கேன். நேரமாச்சா, நல்லா இப்போ தூங்கி practice பண்ணினாதான் காத்தால பணியகம் போயும் தூங்க வசதியா இருக்கும். ;-)

6/30/2004 2:43:37 PM      S Krupa Shankar     Email    Home Page


எனக்கென்னவோ கல்யாணம் தடைப்பட்டது நீங்கள் சொன்ன புத்திமதிக்காக இருக்காது உங்கள் படத்தைக் கொஞ்சம் கவனமாகப் பார்த்திருப்பார் உண்மைகள் புலப்பட்டிருக்கும் அட கல்யாண வயசாச்சா உங்களுக்கு கிருபா அண்ணா
7/1/2004 9:16:58 AM      ஈழநாதன்     Email    Home Page


என்னது, கல்யாணம் தட்டைப்பட்டதா? அட க‰டகாலமே! அச்சச்சோ, ஈழநாதன் எங்கயாவது போய் சொல்லிகில்லி வெச்சுடாதீங்க. ƒ¡(சா)தகம் பொருந்தவில்லை, அவ்வளவுதான்.

ச்சே ச்சே, புத்திமதினால எல்லாம் தடைப்பட்டுருக்காது. புத்திமதி சொன்னாதான் யாருமே இந்த காலத்துல காதுலயே வாங்கிக்க மாட்டாங்களே (என்னை மாதிரி). ;-)

ஆனா புகைப்பட வி„யம்... இருக்கும் இருக்கும். மொதல்ல சரின்னு சொல்லிட்டு அப்பறம் ரொம்ப கவனமா பார்த்துட்டாங்கன்னுதான் நெனக்கறேன். இனிமேல் யாருக்கும் புகைப்படமே அனுப்பக்கூடாது. நீங்களும் அனுப்பாதீங்க. ;-)

ஆமாம் ஈழநாதன் தம்பி, எனக்கு 26 பிராயம் ஆச்சாக்கும். தலைமுடியை இந்த தடவை நல்லா ஆய்த எழுத்து மாதவன் மாதிரி வெட்டிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் "ஆள்" மாதிரி இருக்கறதா நிறைய பேர் சொல்கிறார்கள். இனிமேல் இதையே maintain பண்ணனும்.

7/1/2004 10:09:57 AM      S Krupa Shankar     Email    Home Page


Room kitta vanthuttu..ennai pakkama poittiye...raza!
7/1/2004 12:25:16 PM      J. Rajni Ramki     Email    Home Page


;-)

நாமா வேணும்னா ஒரு மினி வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடத்துவோமா? :-?

தெனம் ரெண்டு தடவயாவது அந்த தெருப்பக்கம் வரேன். வீட்லேர்ந்து களம்பி, கொத்தவால் சாவடி தெரு வழியா போய் ஹாஸ்பிடல் ரோடுக்குப் போய் திரும்பி ஆலந்தூர் சாலை வந்து, காரனீச்சரம் கோவில் வழியா ஜோன்ஸ் ரோடு வந்து, குளம் வழியா மாந்தோப்பு பள்ளி வந்து, ஜெயராஜ் தேட்டர் போய், பெருமாள் கோவில் தெரு போய்....அப்பாடி, திருப்பியும் மசூதி தெரு. :-) இப்படி ஒரு ரெண்டு ரௌண்டாவது தெனமும் சுத்துவேன் ராத்திரி. "தொல்லை" பேசி எண் குடுங்களேன், நாளைக்கு நகர் வலத்தில் உங்கள் அரண்மனையைக்கு வரேன்.

(எங்கள் நாட்டின் வழியாgஅ தாங்கள் விஜயம் செய்வதில்லையா?)

7/1/2004 1:15:59 PM      S Krupa Shankar     Email    Home Page


quoting Krupa here: //எனக்கு 26 பிராயம் ஆச்சாக்கும். தலைமுடியை இந்த தடவை நல்லா ஆய்த எழுத்து மாதவன் மாதிரி வெட்டிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் "ஆள்" மாதிரி இருக்கறதா நிறைய பேர் சொல்கிறார்கள். இனிமேல் இதையே maintain பண்ணனும்.//

நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கிறது என்று ஒரு பழ மொழி தெரியுமா உங்களுக்கு? =O)


7/2/2004 12:45:43 AM      Shreya     Email    Home Page


இரீவியொ டெச்ட் பா
7/2/2004 7:41:13 AM      raviaa     Email   


பிழைப்பாலே கூட நினைப்பு கெட்டு விடுகிர நிகழ் மொழி தெரியாதா உங்களுக்கு ஷ்ரேயா? ;-)

ரவியா, முயற்சி பலிதமாகும். தொடர்ந்து போராடவும்.

7/2/2004 10:55:30 PM      S Krupa Shankar     Email    Home Page


ஆனாலும் உங்க ரவுசு பெரிய ரவுசா இருக்கப்பா. லோக்கல் சைதைக்கு போய்ட்டு வந்ததையே இவ்ளோ விமரிசையா எளுதுனா, நெசமாவே (உடம்பு சகிதமா) நயாகரா பால்Š போய்ட்டு வந்தா புŠதகமே போட்ருவீயளோ!
7/10/2004 2:12:32 AM      Silandhi    


நெசமான நயாகராக்கெல்லாம் எங்கேர்ந்து போறது. நம்ப சங்கரனார் வசிக்கும் கபாலீŠவரர் "falls"க்குதான் போய்ட்டு வந்து எழுதணும் அடுத்த தடவை.
7/12/2004 2:42:38 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)