web counter

உதவாக்கரை
சரித்திரம் பழகு அழகு ( ?னி, ???? 3, 2004 )

பொன்னியின்செல்வன் யாஹு மடற்குழுவைப் பற்றி தெரிஞ்சுருக்கும். பொ.செ. குழு உறுப்பினர்கள் சொல்லிவிட்டும் சொல்லிக்கொள்ளாமலும் அடிக்கடி மேற்கொள்ளூம் "யாத்திரைக"ளும் தெரின்ந்திருக்கும்.

சிற்சில அவ்வாறான யாத்திரைகளின் பயணக்கட்டுரைகள் அவ்வப்பொழுது பொ.செ. குழுவினின்றும் வெளி உலகின் கண் மாட்டி விடுவதும் உண்டு. அப்படியான எங்கள் "முதல் யாத்திரையி"ன் அனுபவக்குறிப்பு/பயணக் கட்டுரையைக் கூட இந்த இடத்தில் படிக்கலாம். எழுதியது? பவித்ரா! ஆமாம், அதே அதே அதே பவித்ராதான்.

பொன்னியின்செல்வனில் வரும் இடங்கள் எல்லாவற்றையும் நேரில் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று ஒரு ஆர்வத்தில்தான் மொதல்ல ஆரம்பிச்சோம். பிறகு இப்பொழுது சரித்திரப்பித்து எல்லாம் பிடித்துத் திரிவதற்கு முதல் யாத்திரையில் எங்களுக்கு "அவர்" போட்டுக் கொடுத்த வரைபடத்திட்டமும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அவர்? இதோ அவர் பொ.செ. உறுப்பினர்களுக்காகப் பேசியதிலிருந்து ஒரு சின்ன சாம்பிள்:
அதே போன்ற சுவையான பயனக்கட்டுரைகளை எல்லாம் பவித்ராவின் வலைப்பதிவில் படிச்சுருப்போம். போறாது, இன்னுமும் வேணும்ங்கறவங்க கொஞ்சம் காத்திருக்கவும். அப்படியே எதற்கும் இந்த மாதம் ஒரு 12, 13 தேதி வாக்கில் பவித்ராவின் வலைப்பதிவின் மேல் ஒரு "ஷ்ட்ராங்"கான கண் வைத்திருப்பது நன்மை பயக்கும். ;-)7 dharma adigal

பாவி பாவி...கொஞ்சமா பேச்சைப் போட்டு ஆசை காட்டியதற்கு தண்டனையாக அனலடிக்கும் வெய்யிலில் ஐஸ்கிறீமோ இளநீரோ கிடைக்காமல் நீர் அலையக் கடவது.
7/6/2004 7:10:28 AM      Shreya     Email    Home Page


அந்த சோகக்கதையை ஏன் கேக்கறீங்க ‰ரேயா. ஆடியோ எல்லாம் ஆயத்தப்படுத்தி, எல்லாம் எழுதி கிழுதி வெச்சுருந்தேன் இந்த நாள் பதிவுக்காக. கடைசில இணையத்தில் இணையும் தருணம் கணிப்பொறி "படக்"னு சிலிர்த்துக்கொண்டு சிணுங்கி பழுதாகிவிட்டது. அப்பறம் இணைய உலா மையத்துல கடகடன்னு கைக்கு வந்ததை தட்டச்சடிச்சுப் போட்டதுல இப்படியே வந்தது. :-((

பாலகுமாரன் சொன்னதை முழுசா அப்பறமா வலையேத்தணும் இன்னொரு நாள்தான்

7/6/2004 2:03:16 PM      S Krupa Shankar     Email    Home Page


நீங்க செய்ற(செய்யாத?) வேலைக்கெல்லாம் கணிணி மேல் பழி போட வேண்டியது!! கெதியா வலையேத்துங்க...கேட்க ஆசையாக இருக்கு. வலையேறினாத்தான் சாப விமோசனம் கிடைக்கும்! =ஓ)
7/7/2004 5:47:34 AM      Shreya     Email    Home Page


தற்போதைக்கு பழிபோட கணினி மட்டும்தான் சாத்தியம். கூடிய விரைவில் கண்ட பேர்களையெல்லாம் விண்டு விண்டு பழிபோடுகிறேன்.

"கெதியா"ன்னா என்ன? "சீக்கிரமா"வா?

ஆனா தெரியுமா வி„யம்? உங்கள் சாபம் கிடைத்த நல்ல முகூர்த்தமோ என்னவோ, நேற்று வெய்யிலுக்கு நான் தாகசாந்தி பண்ணிக்க "கொறித்த" ஐட்டங்கள்:

லெமன் சால்ட் சோடா = 1 டம்ப்ளர் (Rs. 2 only)
சாக்கோ பார் = 1 (Rs. 15 only)
கரும்புச்சாறு = 1 க்ளாசு (Rs. 5 only)

எல்லாம் ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே செய்த சாதனை. ;-)

7/8/2004 8:13:58 AM      S Krupa Shankar     Email    Home Page


அருஞ்சொல் விளக்கம்: கெதியா=சீக்கிரமா / விரைவா.
7/8/2004 10:37:56 PM      Shreya     Email    Home Page


இரைப்பையா உரப்பையா? இவ்ளோ உள்ள தள்ளியிருக்கிறீங்களே!! ;)
7/8/2004 10:39:59 PM      Shreya     Email    Home Page


வீட்ல அம்மாட்ட சொல்லி சுத்திப் போடச் சொல்லுங்க..கண் பட்டுவிட்டது..நீங்க வழமை போல கடைக்காரர்களுக்கு லாபம் கொடுக்க கடவுளை வேண்டுகிறேன் =)
7/8/2004 10:42:55 PM      Shreya     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)