web counter

உதவாக்கரை
ப்ரத்யேக வலை முகவரி ( வியா??, ???? 8, 2004 )

இலவசமாக டொமெய்ன் நேம் வாங்க, விற்க, மறுஅடகு வைக்க இவ்விடம் அணுகவும்:


blogspot, blogdrive போன்ற இலவச வலைப்பூ சேவைகளைப் பயன்படுத்தினாலும் சரி, geocities, brinkster போன்ற வலைத்தள சேவைகளைப் பயன்படுத்தினா சேவைகளில் ஒன்றும் குறையிருக்காது. ஆனா என்னடா இது, பெரிய வலை முகவரியா இருக்கேன்னு எப்போவாவது நெனைக்கத் தோணலாம்? இல்லாட்டி என்னடா இது, நம்ப வலைத்தளத்துக்குப் போய் எதுக்கு இப்படி நடுவுல blogspot, geocitiesன்னு இடைச்செருகல் எல்லாம்னு எப்போவாவது தோணலாம். அதுக்குப் பதிலா நம்ப பேர்லயே (அல்லது நாம விரும்பின மாதிரியே) ஒரு வலை முகவரி இருந்தா?

புதுசா ஒரு வலைத்தளம், வலைப்பூ கட்டினா நினைவில்லாமல் பழசுக்குப் போய் ஏமாறுபவர்களும் நிறைய இருக்கலாம். ஒவ்வொரு தடவையும் வலையை மாற்றும்போதும் எல்லாருக்கும் பிட் நோட்டீசு வேற போடணும். ஏனென்றால் ஒவ்வொரு சேவையாளர்களும் அவரவர்களின் கம்பனி முகவரியையும் நம்ப user IDயோட சேர்த்து இருப்பாங்க. சரி, இதுக்குப் பதிலா நமக்குன்னே ஒரு முகவரி தனிப்பட்டதா இருந்தா?

எத்தனையோ வலைப்பக்கங்கள் நம் தளத்தில் இருக்கலாம். ஒவ்வொரு பக்கத்துக்கும் தனித்தனி முகவரி கொடுத்து வலைமுகவரி இன்னும் இன்னும் பெருசா ஆக்கிக்கொண்டே போகும். அதுக்குப் பதிலா நம்பளோட ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு வலைமுகவரி, அதுவும் சின்னதா இருந்தா?

எல்லாம் சரி. இப்படி இருக்கறதுக்கு நாமளே ஒரு டொமெய்ன் நேம் பதிவு பண்ணிக்கணும். உதாரணமா http://www.yourame.comன்னு பதிவு பண்ணிக்கொண்டால் அதை நாம பயன்படுத்திக்கலாம். எப்படின்னா, இப்போ நம்பளோட வலைப்பதிவு முகவரி வந்து myname.blogspot.comன்னு வெச்சுப்போம். http://www.yourame.comன்னு அடிச்சா, தானாவே myname.blogspot.comக்கு கொண்டு போய்ச் சேர்க்கும்படி பண்ணிடலாம். அதே மாதிரி http://www.geocities.com/mynameன்னு இருந்தா, நாம ரெƒ¢Šடர் பண்ணின பெயரை இந்த முகவரிக்குத் திருப்பிடலாம். ஆனா இதுக்கெல்லாம் காசு செலவாகும். ;-)

ஆனால் அப்படியாப்பட்ட டொமென் நேமையும் வாரி வழங்கும் சில வள்ளல்களும் இணையத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். உதாரணமாக, http://my.dot.tk. இங்க போய் நம்ப பேருக்கு ஒரு கணக்கு திறந்துக்கணும். கேக்கற ரெண்டு மூணு மேட்டருக்கு பதில் சொல்லிட்டா, அவ்வளவுதான். அப்பறம் விரும்பிய வலைமுகவரியைத் தேர்ந்தெடுத்துக்க வேண்டியதுதான் பாக்கி. தேர்ந்தெடுத்த வலை முகவரி எந்தப் பக்கத்தைச் சுட்டணும்னும் அதுலயே சொல்லிடணும்.

(அங்கங்கே இந்த மாதிரி இலவச டொமெய்ன் நேம் சேவையாளர்கள் இருக்காங்க இணையத்துல. ஆனால் நான் மனமுவந்து பயன்படுத்திக்கறது http://my.dot.tk. காரணம்? அந்த தளத்துக்குப் போய்ப் பாத்தாலே புரியும். ரொம்ப டச்சிங்க், டச்சிங்க். இவர்களின் நோக்கத்திற்காக சின்னதாக வரும் popup விளம்பரத்தையும் சகித்துக்கொள்ளலாம்.)

உதாரணமா, என் வலைப்பூவின் உண்மையான முகவரி வந்து http://www4.brinkster.com/shankarkrupa/blogதான். ஆனா நான் வந்து http://www.shankarkrupa.tkன்னு ஒன்னு பதிவு பண்ணி இருக்கேன். அதனால இந்த புது முகவரியை அடிச்சா, என்னோட வலைப்பூவுக்கு தானாவே வந்துடலாம். பாக்கறதுக்கும் ஏதோ தனியா எனக்கு ஒரு டொமெய்ன் நேம் இருக்கற மாதிரி இருக்கும். :-)

அப்பறம் என்ன, கசட்டு மேனிக்கு ஒவ்வொரு பதிவுக்கும் வேணும்னாலும் கூட ஒரு முகவரியைக் குடுத்துக்கலாம். யார் நம்பளைக் கேக்கறதுன்னேன்!7 dharma adigal

க்ருபா, நல்ல தகவல்.

.த்K டொமைன் இலவசமாக்கப்பட்டவுடனே, ரஜப்லொக்.ட்க் என்று நானும் டொமைன் உருவாக்கியிருந்தேன். ஆனால் எனக்கு இலவச வலைப்பதிவு வசதி யாழ்.நெற் கொடுத்திருப்பதால் அதை மறைத்து இதைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் இத்தகைய இலவச டொமைன் கிடைப்பது அரிது. அனைவரும் சீக்கிரமே தமக்கு என்று ஒன்று உருவாக்கி கொள்வது நல்லது.

//அங்கங்கே இந்த மாதிரி இலவச டொமெய்ன் நேம் சேவையாளர்கள் இருக்காங்க இணையத்துல//

இவ்வளவு சின்ன யு.ஆர்.எல் வேறு யாரும் கொடுக்கிறதா எனக்கு தெரியலை. தெரிந்தால் சொல்லவும்

7/9/2004 4:48:53 AM      ராஜா     Email    Home Page


அந்த இடத்தில பதிவு பண்ணும் போது "எங்களைப் பற்றி உங்களுக்கு அறிவித்தவர் யார்?"னு கேட்டு எதனா கொஞ்சம் கெடைக்குமாப்பா ஒனக்கு? 50:50 ஓக்கேவா?
7/9/2004 9:04:02 AM      Meenaks    


அடடே, ராƒ¡? அப்படியா வி„யம்? நான் இனிமேல் rajablog.tkக்குதான் போகப்போறேன்.

யாழ்.netஐப் பொறுத்தவரை அது மேலும் உறுப்பினர்களைச் சேர்க்கவோ அல்லது விளம்பரத்த்தைச் சேகரிக்கவோ ஏற்படுத்தப்பட்ட ஒரு சேவையில்லைன்னுதான் தோன்றுகிறது. அப்படின்னா, அதன் முகவரி மறைக்கப்படுவதில் ஆட்சேபம் இருக்குமா என்று தெரியவில்லை. எதுக்கும் சுரதாகிட்டயே இதப்பத்தி கேட்டுட்டா போச்சு!

blogspot ஒப்பந்தம்தான் எனக்கு நினைவே இல்லை. ஆனா அதுலதான் லோகோ, விளம்பரம்ன்னு நிறைய இருக்கே?

சரி, இல்லாட்டி ஒரு சின்ன javascript வெச்சு முழுமுகவரிக்கு redirect பண்ணிட்ட போச்சு?

my.dot.tk தரும் மூன்று முகவரிகளில் இன்னொன்னு.. உங்களுக்குப் பிடிக்காத ஒரு எழுத்தாளர் சம்பந்தமான தளத்துக்காகப் பதிவு பண்ணி வெச்சுருக்கேன் ராƒ¡. ;-) அதாவது ponniyinselvan.tk. /www.ponniyinselvan.net தளத்தின் ஒரு சோதனைக்களம் மாதிரி வெச்சுக்கறதுக்கு. ஆனா ரெண்டுமே இன்னும் கட்டி முடிக்கலை. :-(

மீனாக்Š, ஆமாம்.. 50:50 என்னன்னா, தூதுவர் pointsதான். அதை வேணும்னா முழுசாவே தரேன், அது என்ன பாதிப்பாதி. :-)) பாத்தீங்களா அந்த சேவைத்தளத்தை? நல்லா இருக்கு இல்ல? ம்ம்ம்ம்.... அது கூட நல்ல மார்க்கெட்டிங் யுக்தி இல்ல?

7/9/2004 3:07:25 PM      S Krupa Shankar     Email    Home Page


நல்ல மட்டரு... இன்னிக்கெ துண்டு பொட்டு விஷுடுரென்
7/9/2004 3:39:14 PM      J. Rajni Ramki     Home Page


பயனுள்ள முதற் தகவல்(ஹா,ஹா,ஹா)
7/12/2004 12:52:19 AM      Eelanathan     Email    Home Page


ச்சே! என்ன ஒரு அவமானம். இந்த வலைப்பூல பயனுள்ள தகவல்களா? தப்பு தப்பு. ப்ராயச்சித்தமா இன்றைய என்ட்ரி பார்க்கவும். :-))
7/12/2004 2:44:06 PM      S Krupa Shankar     Email    Home Page


ரொம்ப தேங்க்ஸ்பா... இப்போ குப்பை.ட்க் ன்னு அடிச்சாலே என்னோட குப்பை வந்து கொட்டுது...
7/16/2004 2:54:49 AM      அன்பு     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)