web counter

உதவாக்கரை
நிமிர்த்த முடியாதது ( ???ளி, ʺ??? 24, 2004 )

பேனாவெல்லாம் காசு கொடுத்து வாங்கி, எழுதி பல வருடங்கள் ஆகி விட்டன. இப்பொழுதுதான் கடையில் ஒரு புது பேனா வாங்கிக்கொண்டு வந்து இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இத்துப்போன என் கணிப்பொறி மீண்டும் செத்துப்போனது. செத்துப்பிழைக்கும் வாழ்க்கை என் கணிப்பொறிக்குப் பழக்கம். என் பழக்கம் இன்னமும் செத்துப் போகாததால் இத்துப்போயும் எழுதிக்கொண்டிருக்கிறேன், புதுப்பேனாவால். (வந்து.. புதுப்பேனா வசனம். கண்டுக்காதீங்க)

எழுதுகோல், பென் எல்லாம் சரிதான். ஆனாலும் சின்ன வயதில் சொல்லிப் பழகிய 'பேனா' உயிரில் கலந்த சொல். நெருக்கம் அதிகம், காத்து மாதிரி. ஒரு நிமிஷம், உப்புக்கடலை தீர்ந்துவிட்டது. உள்ளே போய் கொறிக்க இன்னும் கொஞ்சம் எடுத்து வருகிறேன்.

....
ம்ம்..back.
Welcome Back.

சில வருடங்கள் முன்பு Dean Koontzன் நாவல் ஒன்றில் கதாநாயகன் ஒரு எழுத்தாளன். இதிலென்ன புது விஷயம்? கணிப்பொறி பயன்படுத்தி எழுதும் எழுத்தாளன்! அவ்வளவு வருடங்கள் முன்பு கணிப்பொறியை இவ்விஷயத்திற்குப் பயன்படுத்தும் வகையே வியப்பாக இருந்தது எனக்கு. அதிலும் கணினியில் கதை எழுதும் வர்ணனைகளைப் பார்த்து, 'ம்ம்ம்... தட்டச்சு எப்படியாவது கற்றுக்கொண்டு நாமளும் தமிழ்ல எழுதணும்'னு செனச்சுப்பேன் அடிக்கடி. eKalappai/அஞ்சல் layout க்கு நன்றி.

.........

ஏதோ 10 ரூபாய், 15 ரூபாய் இருக்கும்னு நெனச்சேன். ஆனா இந்த Microtip பேனா 24 ரூபாயாம். யப்பா! காலம் எவ்வளவு மாறியிருக்கு.

இப்போதிருக்கும் சூழ்நிலையில் வலைவலம் வரும் பெரும்பாலோர்க்கும் பேனா சகவாசம் அவ்வளவு இருகாது என்றே நினைக்கிறேன் (மீனாக்ஸ் மன்னிக்க). நானும் பணியக வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுவதோடு சரி சில வருடங்களாக.

என் கையெழுத்து மிக அருமையாக இருக்கும். பள்ளி ஆசிரியர்கள் பலரின் பாராட்டைப் (முதுகிலும் கன்னத்திலும்) பெற்றுள்ளேன். ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, ஸம்ஸ்க்ருதம் என்று ஓரவஞ்சனை இல்லாமல் எல்லா எழுத்திலும் எனக்கும் கோழிக்குமான நெருக்கம் வெளிப்பட்டுவிடும். அது புரியாமல் என்னவோ கோழியே வந்து கிறுக்கியதாக சிலர் நினைத்துக்கொள்வார்கள்.

நான் டாக்டருக்குப் படித்திருக்க வேண்டியது. Just miss. ஒரு தமிழ் ஆசிரியர் என்னை மனம் திறந்து பாராட்டியுள்ளார்:


"கிருபா சங்கரு, ஒரு கட்டை எறும்பைப் புடி. அத இங்க் பாட்டில்ல தோச்சு எடு. இங்க் சொட்டச்சொட்ட அந்த கட்டை எறும்பை அப்படியே வெள்ளைப் பேப்பர்ல விடு. அது அங்க இங்கன்னு ஓடி இங்க்கோட தடம் இருக்கும். நீ எழுதி இருக்கறதையும் அந்த பேப்பரையும் பக்கத்துப்பக்கத்துல வெச்சுப் பாரு. ரெண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும்."


கிட்டத்திட்ட ஒன்றரைப் பக்கம் இப்போழுது எழுதிவிட்டேன் பேனாவாலேயே. அப்பாடி! என் கையெழுத்துத் திறனில் (?!) ஒரு இம்மியளவும் பிசகில்லை. கோழிக்கும் நாய்க்கும் ஏதோ தொடர்பு இருக்கிறதோ என்னவோ. நாய் என்பதை விட, நாயின் வால் என்பதே சரி.9 dharma adigal

ஹி...ஹி நம்ம ஜாதியா? என் கையெழுத்தை பார்த்தா கோழியே தலையை தரையிலடிச்சுக்குமாக்கும்!
12/24/2004 4:46:15 AM      J. Rajni Ramki     Email    Home Page


ஹி...ஹி நம்ம ஜாதியா? என் கையெழுத்தை பார்த்தா கோழியே தலையை தரையிலடிச்சுக்குமாக்கும்!
12/24/2004 4:46:34 AM      J. Rajni Ramki     Email    Home Page


"அது புரியாமல் என்னவோ கோழியே வந்து கிறுக்கியதாக சிலர் நினைத்துக்கொள்வார்கள்." ஹா, ஹா :)) ஆமா, இதனால்தானா அப்பப்ப சில பேரு உங்களை கிறுக்கு சங்கருன்னு சொல்றாங்க? (ஐயோ கோவிச்சுக்காதீங்க, சும்மா ஒரு தமாசுக்கு)
12/24/2004 3:04:16 PM      ராதா     Home Page


மெய்யாலுமா ராம்கி? நம்பவே முடியலையே. வாசகர் கடித சாதனை எல்லாம் வெச்சு கிளிக்கையெழுத்து(?!)ன்னு நெனச்சேனே? சரி, சரி. ஏதோ ஒரு துணை கடைச்சா சரி.

ராஜாக்ருஷ்ணன், தமாஷா? வரேன், வரேன் ஒரு நாளைக்கு. அடுத்த ஜென்மத்தில் எனக்கு ஆசிரியராகும்படிக்கு சபிக்கட்டுமா? ;-)

12/26/2004 6:46:02 AM      S Krupa Shankar     Email    Home Page


கையெழுத்து நல்லா இல்லாட்டி என்ன தலை எழுத்து நல்லா இருந்த்தா சரிதான்!!!
12/29/2004 6:16:01 PM      203.221.176.3    


அது நாந்தான் மேலே இருக்கிற பொன்மொழி சொன்னது!!
12/29/2004 6:16:47 PM      shreya    


அட ஷ்ரேயா! வருக, வருக.

நல்ல வேளை, நல்ல வேலை. எழுதற வேலை இல்லை. இருந்தா, இன்க்ரிமெண்ட் கூட கடைச்சு இருக்காது. தப்பிச்சேன், கணிப்பொறி வாழியவே!

12/30/2004 11:47:13 AM      S Krupa Shankar     Email    Home Page


இத்துப்போன பேனாவில்
செத்துப்பொகவில்லை எலுத்து
கட்டுக்கொண்ட கனனியில் கன்னியமான
வடிவம்
பிரிய

2/8/2005 1:13:22 PM      195.93.60.84    


நெஜமாவா? ரொம்ப நன்றி.

ஆனா நீங்க கவிதையும் நல்லா எழுதறீங்களே?

2/9/2005 5:27:45 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)