web counter

உதவாக்கரை
செல்பேசியில் தமிழ்வலைப்பதிவுகள் ( ???ளி, ??????ரி 25, 2005 )

GPRS, WAP தொழில்சுட்பம் எல்லாம் மற்ற நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை. இந்தியாவில் சல்லிசாகக் கிடைக்கிறது. வேகமும் பரவாயில்லை (Hutchல்). அமெரிக்காவில் அவ்வளவு மலிவு இல்லையாம், அதோடு வேகமும் படு கம்மியாம் என்று பரி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

என்னதான் மலிவாக இருந்தாலும் இந்திய மொழிகளில் எவ்வளவு mobileக்கான தளங்கள் இருக்கிறது என்று தெரியவில்லை. இருந்தாலும் ஜாவா, ஜாங்கிரி, ஜிலேபியெல்லாம் செல்பேசியில் இருக்கவேண்டுமோ என்னவோ. தமிழுக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.

இதற்கிடையில் நேறு முழுதாக இரண்டு மணிநேரம் கிடைத்தது. எனவே, புதிதாகப் பதிக்கப்பட்ட தமிழ் வலைப்பூக்களின் தலைப்பு/பதித்தவரின் பெயர் ஆகியவைகளை செல்பேசிக்கு அனுப்ப ஒரு நிரலி எழுதினேன்.

அதன் சுட்டி: http://www4.brinkster.com/shankarkrupa/blog/rsscell.asp

ஜாவா, ஜக்கு எதுவும் இக்லாத செல்பேசியிலும் இது தெரியும். ஆனால், ஆனால், வந்து, வந்து... தமிழில் அல்ல, Thanglishஇல். ;-) தங்க்லீஷ் சகித்துக்கொள்ளக் கூடியது என்றால், எல்லா வலைப்பூக்களையும் செல்பேசியிலேயே படிக்கவும் முடியும்.

குற்றுலாவியில் இருந்துதான் இச்சுட்டியைப் பார்க்கவேண்டும். கணிப்பொறி உலாவியில் இருந்து பார்த்தால், "இன்னா மாமே, அப்டியே தொறக்கட்டா இல்லாங்காட்டி ஜிப்பாக்குள்ளப் போட்டுக்கறியா" என்று கேட்கும்.

நான் அவ்வப்பொழுது இப்பொழுது செல்பேசியைலிருந்து புதியபதிவு என்ன வந்திருக்கிறது என்று பார்த்து வருகிறேன். ஆங்கிலத்தில் இருக்கும் தலைப்புகள் thanglish-க்கு மாறும்போது ஏற்படும் சிரிப்பு விதமே தனி. :-)

வேற யார்னாச்சியும் wapபு, கீப்பு வெசருந்தா இத்த கண்டுனு சர்யா தெர்தா தெர்லயான்னு ஒரு கொர்லு வுட்றீங்களா?

பி.கு: செய்தியோடைகளைத் திரட்டுவது காசிதான், திருடுவதுதான் நான்.6 dharma adigal

நல்லாவே தெரியுது மாமே!!
2/25/2005 2:03:12 AM      Meenaks    


படா ஆளுப்பா நீயி... என்கிட்ட அமைதியா இரு(பிகாம்) படிச்சிருக்கேன்னு சொல்லிட்டு புச்சு புச்சா பொராக்கிராமெல்லாம் எலுதறீங்க... இத்தானே வானாங்கறது!

உம்மையா சொல்லு தோஸ்த்து. நீங்க கம்பிபிட்டர்தானே படிச்சுகோறீங்கோ???

2/25/2005 2:27:43 AM      மூர்த்தி     Email    Home Page


மூர்த்தி,

கிருபா கம்பிபிட்டர் படிக்கலே... கம்பிபிட்டர்தான் இனிமே கிருபாவை பத்தி படிக்கணும்... இந்த ஜில்லு போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா?

2/25/2005 2:50:10 AM      J. Rajni Ramki    


மீனாக்Š, நல்லா தெரிஞ்சதா? சரி, சரி. இதோட அப்படியே போய்டாதீங்க. wap தளத்துல போடற மாதிரி நாலு "குத்துவிளக்கு"ப் படம் அனுப்பி வைங்களேன்.:-)

மூர்த்தி, 1999-ல் வணிகவியல் முடித்தேன். பிறகு கொஞ்சநாட்களாக படிப்பைத் தொடர முடியவில்லை. பிறகு 2000ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, MCA முடித்து (மார்க் அதிகமில்லை, 85% தான்), 2003ல் சென்னைப் பல்களைக் கழகத்தில் PhD சேர்ந்த கடந்த வருட இறுதியில் டாக்டரேட் முடித்து...விடவேண்டும் என்று நினைத்தேன். எங்க, பி.காம்-க்கே உம்பாடு எம்பாடு பாட்லோடுன்னு இருந்தது போராட்டமா. :-))

ராம்கி, கடலோரக்கவிதைகள்ல பாரதிராƒ¡ சொல்ற மாதிரி இருக்கு. இன்று இரவு இப்படி சொன்னதுக்காக கேரட் பக்கோடாவோட வரலாம்னு இருந்தேன் ரூமுக்கு. அதான் ஊருக்குப் போய்ட்டீங்களே. நானே சாப்டுக்கறேன்.

2/25/2005 10:58:48 AM      S Krupa Shankar     Email    Home Page


கிருபா இது ஞாயமா, ASP la மட்டும் இந்த புரோகிராம எழுதிட்டீங்க.

Freesoftware ஆளுங்களுக்காக பி.ஹச்.பி லயும் இந்த நிரல மாத்திகுடுப்பா.

4/8/2005 9:18:31 AM      முகுந்த்     Home Page


பி.ஹெச்.பிலயுமா? என்னைத்தவிர யாருமே இதைப் பயன்படுத்தலைன்னு நெனச்சு அப்பறமா டெவலப் பண்ணாம விட்டுட்டேன். நீங்க கைத்தொலைபேசியில இதைப் பாத்தீங்களா? சரியா வந்ததா?
4/10/2005 4:04:44 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)