web counter

உதவாக்கரை
எலந்தை ஜூஸ் ( ?????, ???? 7, 2005 )

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுறுசுறுப்பாக சீக்கிரமாகவே எழுந்து விட்டேன் (மதியம் 2:30க்கு என்று அறிக). பிறகு குளித்து, சாப்பிட்டு எல்லாம் முடித்ததும் ஊர் சுற்றுதல், தெருப்பொறுக்குதல் போன்ற உன்னதமான பணிகள் செய்யத் தலைப்பட்டேன்.

எனவே, பள்ளிக்கரனை வரை சென்று ஒரு நண்பரைப் பார்க்கப் புறப்பட்டேன்.

சைதையிலிருந்து கிளம்பி பள்ளிக்கரனையில் இறங்கி சாலையோரமாக நண்பரின் வீடுவரை நடக்க ஆரம்பித்தேனா... அப்பொழுதுதான் சாலையோரம் இருந்த ஒரு கடையில் அந்த பண்டம் கண்ணில் பட்டது.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலங்களில், மன்னிக்கவும், பள்ளிக்கூடத்திற்குச் சென்ற காலங்களில் இது மிக மிகப் ப்ரபலாமான ஒன்று. இந்த தலைமுறையினர் எப்படி அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நானும், என்னுடன் பள்ளியில் படித்த சக மாணவர்களுக்கும், மன்னிக்கவும், என்னுடன் பள்ளியில் இருந்த சக மாணவர்களுக்கும் இதை 'இலந்தை ஜூஸ்' என்று சொல்வோம்.

'டேய்! எனக்கு இந்த தடவை கண்டிப்பா கணக்குல 30 தாண்டாதுடா'

'பொய் சொல்லாத. இப்படிதான் சொல்லுவ. ஆனா கடைசில 80, 85ன்னு வாங்கி நிப்ப'

'டேய்! என்னைப் போய் இப்படி சொல்றயே! வேணும்னா பேப்பர் திருத்திக் குடுத்ததும் நீயே பாரு.'

'பாப்போமா? என்ன பெட்டு?'

'ஒரு எலந்த ஜூசு'


இப்படி 'பெட்' கட்டவும்...


அந்த அது இதுதான்!


'டேய். குடிக்க கொஞ்சம் தண்ணி குடுடா'

'அதான் ஹெட்மாஸ்டர் ரூம்கிட்ட வாட்டர் ட்ரம் இருக்கே. அதுல போய் குடிச்சுக்கோ.'

'டேய், டேய். அவ்ளோ தூரம் போகணும். ப்ளீஸ்டா. நான் மெத்யாணம் லஞ்ச்ல எலந்த ஜூசு வாங்கித் தரேண்டா.'

'ரெண்டு வேணும்.'

'சரி.'


இப்படி பள்ளிக்குள்ளேயே பண்டமாற்றுச் சந்தையில் ஈடு படவும்...

இன்னும் பிறவற்றுக்கும் பயன்பட்ட ஒரு உன்னத வஸ்து இது. தேவாம்ருதம் இதுவரை அருந்தி இருக்காதவர்கள் இதை ஒரு முறை சுவைப்பது மிக மிக அவசியம். இலந்தைப் பழம் பதப்படுத்தப்பட்டு, என்னன்னவோ ஜிகிரிஜிக்கா எல்லாம் சேர்க்கப்பட்டு ஒரு சிறு பாக்கெட்டில் விற்கப்படும். இதுதான் இலந்தை ஜூஸ். திரவ வடிவத்தில் எல்லாம் இருக்காது, ஒரு மாதிரி ஸ்வீட் பீடா என்று வைத்துக்கொள்ளலாம்.

5 காசிலிருந்து, நான் 10வது முடிக்கும் முன் 10 காசு, 15 காசு என்று பங்குச்சந்தை கணக்கில் பெட்டிக்கடைகளில் இதன் ரேட்டும் ஏறியது.

அதெல்லாம் ஒரு மண்டே டைம் (நிலாக்காலம்னு சொல்ல வந்தேன்). பிறகு காலச்சக்கரத்தில் எனக்கும் எலந்தை ஜூசுக்குமான தொடர்பு தொலைதூர நட்சத்திரமாக மாறி, பிறகு எனக்கும் கணக்குக்கும் உள்ள தொடர்பாக ஆகி மறைந்தே போனது.

அப்படியாகப்பட்ட அந்த இலந்தை ஜூஸ் மீண்டும் காணக்கிடைத்தது. முதலில் எப்படி கடையில் போய் கேட்பது இதைப் போய் என்று சம்பந்தமே இல்லாமல் என் உயரத்தையும் வயசையும் யோசித்தேன். ஆனால் 'லட்சிய புருஷர்களுக்கு வெட்கமும் பயமுமே சத்ருக்கள்' என்ற விஷயம் நினைவுக்கு வந்த்து.

எனவே துணிந்து ஒரு இரண்டு ரூபாய்க்கு இலைந்தை ஜூஸ் வாங்கினேன்.

நெஜமாதான் சொல்றேன்,
இதோ பாருங்க.


விலை இப்பொழுது கொஞ்சம் ஏறித்தான் இருந்தது. 25 காசுகள். ஆனால் அதே சுவை, அதே நிரை. விண்டு வாயில் போட்டதும் 'நின்னை நினைத்தேன், உலகை மறந்தேன்' அற்புதம்!

நண்பரின் வீட்டுக்குள் போவதற்குள் எட்டு பாக்கெட்டுகளுமே காலி.

உங்களில் யாருக்கவது இந்த எலந்தை ஜூஸ் வேண்டுமானாலும் கடிதம் எழுதுங்கள், வாங்கி அனுப்புகிறேன். கடிதத்துடன், 25 காசுகள் தவறாமல் அனுப்பவும். உள்ளூர் 'ருசி'கர்களுக்குத் தபால் செலவு இலவசம். வெளியூர் 'ருசி'கர்களுக்கு இரண்டு பாக்கெட்டுகளுக்கு மேல் அனுப்பப்பட மாட்டா.

ஆமாம், இந்த இலந்தைப் பழக்கொட்டையைத் தின்னுட்டா வயத்துல மரம் வளருமாமே, உண்மையாகவா? மரம் நன்றாக வளர என்ன உரம் போட வேண்டும். ஒருவர் ஒரு மரம் மட்டும்தான் வளர்க்கலாமா அல்லது இரண்டு கூட வளர்க்கலாமா? வயிறுக்குள் மரம் வளர்க்க உரிமம் ஏதேனும் வாங்கவேண்டுமா?



15 dharma adigal

இது ஏதும் டுபாக்கூர் நியூஸா. அல்லது உண்மையிலேயே இப்படி கிடைக்குதா. எலந்தை ஜூஸ் பத்தி இது வரைக்கும் கேள்வி பட்டதே இல்லை???
3/7/2005 1:13:53 PM      195.92.67.69    


எங்க ஊர் பக்கம் இத எலந்த ஜாம்னு சொல்லுவோம். (ஜொள் விடுற மாதிரி ஏதாவது ஸ்மைலி குறியீடு இருந்தா இங்க போட்டுக்கலாம்). இன்னொண்ணு.. எலந்த பொடின்னு பாக்கெட்ல அடைச்சி விப்பாங்க. ஒருமாதிரி இனிப்பா இருக்கும். சரம் சரமா வாங்கி, பையில் ஒளித்து வைத்துக்கொண்டு சாப்பிடுவோம்.

ஸ்கூல் பக்கத்தில இருக்க பெட்டிக்கடைகளில் மட்டும் கிடைக்கக் கூடிய ஜவ்வு மிட்டாய், கெலாக்காய், சின்ன சின்ன, மிளகாய்ப்பொடி தூவப்பட்ட மாங்காய்கள், மலை நெல்லிக்காய்(சாப்பிட்டு தண்ணி குடிச்சா இனிப்பா இருக்கும்), நவாப்பழம்ன்னு சில தின்பண்டங்கள் உண்டு. அதை வாங்கி டவுசர் பாக்கெட்டில் போட்டு வைத்துக் கொண்டு(எக்ஷ்செப்ட் ஜவ்வு மிட்டாய்) சாப்பிட்டு திரிந்த அந்த நாட்கள்..

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! க்ருபா :-)

3/7/2005 1:17:22 PM      ராஜா     Email    Home Page


:)
3/7/2005 4:42:32 PM      தங்கமணி    


இது என்ன "ஞாபகம் வருதே" வாரமா?
3/7/2005 5:10:09 PM      shreya    


கரும்பு ஜூஸ், இலந்தை ஜூஸுன்னுட்டு அளும்பு தாங்கல :) இதக் கேட்டதும் எலந்த வடையோட ஞாபகமும் வந்துருச்சு ராசா. இப்படி வாயில எச்சய ஊற வச்சுட்டு...ம்....நல்லா இருக்க... :)
3/7/2005 5:16:53 PM      இராதாகிருஷ்ணன்     Email    Home Page


யோவ் ஷ்ருபா... (அது ஒன்னுமில்ல.. வாயில உமிழ்நீர்!!!). நின்னைச் சரணடைந்தேன். எனக்கு 10 பாக்கெட்டு பார்சல்!

அப்புறம் வயித்துல மரமெல்லாம் வளராது. ஒன்னும் பயப்படாதீங்க.. கக்கா போகும்போது வெளியாய்டும்!

3/7/2005 8:59:00 PM      மூர்த்தி     Email    Home Page


நாங்க இதை எலந்த வடை என்போம்.நல்ல ஒரு ரூபாய் நாணய அளவில் கிடைக்கும்,கிருபா படம் காட்டியபடியும் கிடைக்கும்.

ராஜா உங்க ஊர் பக்கத்து ஆனைமலை மிளகாய் தொக்கு சாப்பிட்டு இருக்கீங்களா? தயிர் சாதத்துக்கு சரியான சொம்பினடிஒன். நான் அப்படியே சாப்பிடுவேன் !

சு.செந்தில் நாதன்.

3/8/2005 2:19:34 AM      210.56.134.69    


Ennappa Kirukku , combination -nu english la adichen athum uru maaruthe?
3/8/2005 2:21:53 AM      210.56.134.68    


195.92.67.69, எலந்தை ஜூஸ் பத்திக் கேள்விப் படாத நீர் அடுத்த ஜென்மத்தில் இலைன்ந்தைத் தோட்டத்திலேயே பிறக்கக் கடவது!

ராஜா, நீங்க சொன்ன எல்லா ஐட்டமும் என் ரத்தத்திலும் கலந்திருக்கிறது... எலந்தப் பொடியைத் தவிர. அது எப்படி இருக்கும்? முடிந்தால் பார்சல் அனுப்பி வைக்கவும், கேள்வியேப் பட்டதில்லை.

இந்த ஜவ்வு மிட்டாய் ஒரு முழுப் பாக்கெட்டும் வாங்கி நானும் என் தம்பியும் அடிக்கடி பங்கு போட்டுக்கொள்வோம். இப்போதான் அது எல்லாம் போச்சு. :-( நீங்களும் நானும் பங்கிட்டுண்டாதான் உண்டு. :-)

ஷ்ரேயா!!! ஞாபகம் வருதே வாரமா? மகோன்னதமான எலந்தை ஜூசு உங்க ஊர்ல சாப்டதில்லை? அடடா! இது நினைவுகள் ஞாபகம் வருதே இல்லை, உணவுகள் ஞாபகம் வருதே விஷயம்.

3/8/2005 1:21:04 PM      S Krupa Shankar     Email    Home Page


ஆ, ஆ, ஆ, ஆ! ராதாகிருஷ்ணன், அதேதான். எலந்தை வடை. அதைத்தான் ரொம்ப நாளா தேடறேன். கூடியவிரைவில் கண்டுபுடிச்சு ஃபோட்டோ போட்டுடறேன். செந்தில், அந்த ஒருரூபாய் அளவு இருக்கறதுதான் இலந்தை வடை. இலந்தை ஜூசு வேற. இலந்தை வடை கொஞ்சம் காரசாரமா இருக்கும். இலந்தை ஜூசு அப்பழுக்கற்ற இனிப்பு மட்டும்.

(ஆமாம், காம்பினேஷன்-ன்னு இங்க்லீஷ்ல இருக்கறது அதுக்கு சொன்னாதான். "தங்க்லீஷ்"னு இருக்கறதை டிக் பண்ணாம இருக்கணும் அதுக்கு. இல்லாட்டி தட்டச்சடிக்கறது எல்லாமே தமிழ்ல மாத்திடும் சர்வர்.

மூர்த்தி, சிங்கையில் இருந்தால் வெளிநாட்டுக் கோட்டா. ரெண்டு பாக்கெட்டுதான். சரி, விரும்பிக் கேட்டுட்டீங்க. அனுப்பறேன். வீட்டு முகவரியுடன் 2.50 காசுகள் அனுப்பி வைக்கவும் (தபால் செலவு முற்றிலும் இலவசம்).


3/8/2005 1:36:02 PM      S Krupa Shankar     Email    Home Page


ம் அருமைதான்
பிரிய....

3/11/2005 5:04:05 AM      195.93.60.84    


எங்க ஊர்ல அது 'எலந்தப் பழ ஊறுகாய்".. பாக்கெட் 5 காசு. ரொம்பவும் பிடித்த வஸ்து. பாக்கெட் ஓரத்துல கடிச்சு கொஞ்ச கொஞ்சமா நகர்த்தி...வாய் ஊறித் தொலைக்குது.:)
3/14/2005 1:06:04 PM      சுந்தரவடிவேல்     Email    Home Page


எலந்த ஊறுகாயா? இந்த பேருகூட நல்லாதான் இருக்கு.

எலந்த ஊறுகாய், எலந்த ஜூசு, எலந்த வடை, எலந்த ஜாம், எலந்தப்பொடி... ம்ம்ம்! பரமாத்மா ஒன்றே, ஞானிகள் அதைப் பலவாறு அழைக்கிறார்கள்!

3/14/2005 1:19:27 PM      S Krupa Shankar     Email    Home Page


// எலந்தை ஜூஸ் பத்திக் கேள்விப் படாத நீர் அடுத்த ஜென்மத்தில் இலைன்ந்தைத் தோட்டத்திலேயே பிறக்கக் கடவது!//

ஆஹா தன்யனானேன். சாபத்துக்கு நன்றி. :)

-
நவன் பகவதி

3/14/2005 3:34:09 PM      195.92.67.69    


அச்சச்சோ! நீங்கதானா அது? டேய், அந்த chair இங்க கொண்டு வா!

வாங்க வாங்க, ஒக்காருங்க. IP மட்டும் இருக்கே, பேர் காணோமே, ராம்கி, ஷங்கர், மீனாக்ஸ மாதிரி ஏதோ பசங்கன்னு அப்படி சொல்லிட்டேன். சரி, சரி. a4 x c6.

3/14/2005 3:54:12 PM      S Krupa Shankar     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)