web counter

உதவாக்கரை
எம்.எஸ். ஆக்சஸ் கொண்டு மை எஸ்க்யூஎல் பயன்படுத்த... ( ??யி?, ???? 27, 2005 )

இது கொஞ்சம் தொழில்நுட்பம் பற்றிய பதிவு. அதனால MS Access, MySQL போன்ற பதங்களைப் பற்றி அறிமுகம் இல்லாதவர்களுக்கு எதுவும் புரியாமல் இருக்கும். அப்படி இருப்பவர்கள் நேரம் வீணாகியதாக என்னைத் திட்டும் சாத்தியம் இருப்பதால், இப்பதிவின் கடைசியில் இடம் பெற்றிருக்கும் 'கடி'யைமட்டும் படித்துவிட்டு, இயன்றால் ஏதேணும் இரண்டொரு தர்ம அடிகள் கொடுத்து விட்டு தப்பிச்செல்லவும்.

MySQL என்ற தரவுத்தளத்தை நிர்வகிப்பதற்கு phpMyAdmin பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் ஒரு செயலி. என்ன இருந்தாலும் Enterprise Manager, MS Access interface தனிச்சுவை என்று பழகி இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், என்னை மாதிரி.

சரி, MS Access வழியாக MySQL தரவுத்தளத்தை நிர்வகிப்பதில் ஆர்வம் இருப்பவர்கள் மற்றும் அறிய விரும்புபவர்களுக்காக வழிமுறைகள்:

Control Panel வழியாக ODBC Datasource Administrator திரையை முதலில் வரவழைத்த பிறகு ஒவ்வொரு மேட்டரா இதோ, இதோ.


1) Datasource Administrator திரையில் Add பொத்தானை அழுத்த்தினா, கீழ இருக்கற மாதிரி ஒரு சாளரம் வரும்.



அதில் இருக்கும் Mysql ODBCஐத் தேர்ந்தெடுத்து "Finish" க்ளிக் பண்ண வேண்டும். MySQL ODBC அங்க இல்லாட்டி உங்க கணிப்பொறியில் அது நிறுவப்படவில்லை என்றூ பொருள். எனவே, அதை முதலில் நிறுவிவிட கீழ்க்காணும் சுட்டியில் Windows இயங்குதளத்துக்கான mysql driverஐப் பதிவிறக்கிக்கொள்ள வேண்டும்:

http://dev.mysql.com/get/Downloads/MyODBC3/MyODBC-3.51.11-1-win.exe/from/pick


2) அடுத்ததாக, இந்த data sourceக்கு ஒரு பேரு தரணும்.



நான் mysqltest என்று கொடுத்து இருக்கிறேன். அதே போல் MySQL சர்வரின் பெயர் localhostன்னு குடுத்து இருக்கேன். இதுவும், கடவுச்சொல், பயனர்ப்பெயர் போன்றவைகளை உங்கள் சரியாக குடுத்துடுங்க.


3) இப்போ, MS Access திறந்து, ஒரு புது database கோப்பு உருவாக்கிக்கணும். அப்பறம், File menuவில் Get External data என்பதைத் தேர்ந்தெடுத்து Link Tables என்பதை க்ளிக் பண்ணனும்.




4) இப்போ ஒரு dialogue box வரும். அதுல Files of Type என்பதில் ODBC Databases என்பதைத் தேர்ந்தெடுக்கணும்.




5) இப்போ வந்த windowல Machine Data Sources என்பதில் மொதல்ல உருவாக்கின MySQL Datasource Name வரும். (நான் குடுத்த அதே mysqltest பெயரைத் தேர்ந்தெடுத்து இருக்கேன்).



Ok க்ளிக் பண்ணனும். ஆச்சூ!!!


6) இப்போ MYSQL Databaseல இருக்கற எல்லா tablesஉம் காண்பிக்கப்படும். வேண்டிய tablesஐத் தேர்ந்தெடுத்து 'சரி'ன்னு சொல்லணும். நான் சும்மா ஒரு மாதிரிக்காக ('நான் சும்மா ஒரு மாதிரி' என்று புரிஞ்சுக்காதீங்க) ஐந்து டேபிள்களை மட்டும் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்.




7) இப்போ தேர்ந்தெடுத்த அந்த அஞ்சு டேபிள்களும் MS Access-ல் ஆஜர்!




8) ஒரு டேபிளைத் திறந்து பார்க்கலாமா?



ம்ம்ம், MS Accessஇலிருந்து MySQLஐ நிர்வகிப்பது என்பதை விட பயன்படுத்துவது என்று சொல்றதுதான் ரொம்ப பொருத்தமா இருக்கும்.

சரி, கடி(க்க முயற்சி)க்கறேன்:

கேள்வி: Tentக்குள்ள இருக்கற கார் வாகனத்துக்கு கால் இல்லாட்டி என்னன்னு சொல்வாங்க?
விடை: டெண்டுள்கர்

ஆஹா, என்னைத் திட்டும்போதும் நீங்க அழகா இருக்கீங்க.



32 dharma adigal

நறநறநறநறநரற.....
3/28/2005 12:03:18 AM      சீனியர் கோ.சாமி    


என்ன ஆச்சு.. போட்டோவெல்லாம் மாத்திட்டீங்க? சந்தனப்பொட்டு, ஒரு மாதிரியில்லாம நேரான லுக்கு...வீட்ல பொண்ணு ஏதும் பேசி முடிச்சுட்டாங்களா? என்ன இருந்தாலும் பழைய போட்டோ..போட்டோதான் ..†¢..†¢..
3/29/2005 5:13:06 PM      ºÃŽý     Home Page


எம் எஸ் ஆக்ஸஸ் $150.00 (பணக்காரங்க சமாசாரம்)

மைஎஸ்க்யூஎல் கன்ட்ரோல் சென்ட்டர் இலவசம்.

மெனக்கெட்டு ஸோP போட்டிருக்கிங்க. அதுக்காக ஒரு ஷொட்டு.

3/29/2005 6:16:09 PM      sathyarajkumar     Email   


மொழிபெயர்ப்புக்காக என்னிடம் எம் எஸ் ஆக்சஸ் கோப்புகள் வருவதுண்டு. அதில் உள்ள அட்டவணையில் இரண்டு பத்திகள் உண்டு. இடது பக்கப் பத்தியில் ஜெர்மனில் இருப்பதை வலது பத்தியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். இடது பக்க ஜெர்மன் பதிவை நகலெடுக்க இயலும் ஆனால் அழிக்க முடியாது. நகலெடுத்து வலது பக்கத்தில் ஒட்டிப் பிறகு அதை எடிட் செய்து ஆஙில மொழிபெயர்ப்பைக் கொடுப்போம். நான் என்ன செய்வேன் என்றால் மொத்தமாக இடது பத்தியை வலது பக்கத்தில் நகல் - ஒட்டல் செய்து விடுவேன்.
என்னிடம் வந்தவை பி.டி.எஃப் கேடலாக்குகள், ஆக்செஸ்ஸில் ஏற்றப் பட்டவை. நான் அனுப்பும் மொழிபெயர்ப்பை அப்படியே திருப்பி பி.டி.எஃபில் ஏறி விடுவராம். நான் அதை செய்வதில்லை. என் வேலை மொழிபெயர்ப்பதோடு முடிந்தது.
என் கேள்விகள்:
1. இம்மாதிரிச் செய்வதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
2. இவ்வாறு செய்வதற்கு ஏதேனும் மென் பொருள் உண்டா?
3. இதைத் தவிர ஆக்சஸ் கோப்புகளின் உபயோகம் என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/29/2005 10:16:49 PM      Dondu     Email    Home Page


மொழிபெயர்ப்புக்காக என்னிடம் எம் எஸ் ஆக்சஸ் கோப்புகள் வருவதுண்டு. அதில் உள்ள அட்டவணையில் இரண்டு பத்திகள் உண்டு. இடது பக்கப் பத்தியில் ஜெர்மனில் இருப்பதை வலது பத்தியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். இடது பக்க ஜெர்மன் பதிவை நகலெடுக்க இயலும் ஆனால் அழிக்க முடியாது. நகலெடுத்து வலது பக்கத்தில் ஒட்டிப் பிறகு அதை எடிட் செய்து ஆஙில மொழிபெயர்ப்பைக் கொடுப்போம். நான் என்ன செய்வேன் என்றால் மொத்தமாக இடது பத்தியை வலது பக்கத்தில் நகல் - ஒட்டல் செய்து விடுவேன்.
என்னிடம் வந்தவை பி.டி.எஃப் கேடலாக்குகள், ஆக்செஸ்ஸில் ஏற்றப் பட்டவை. நான் அனுப்பும் மொழிபெயர்ப்பை அப்படியே திருப்பி பி.டி.எஃபில் ஏறி விடுவராம். நான் அதை செய்வதில்லை. என் வேலை மொழிபெயர்ப்பதோடு முடிந்தது.
என் கேள்விகள்:
1. இம்மாதிரிச் செய்வதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
2. இவ்வாறு செய்வதற்கு ஏதேனும் மென் பொருள் உண்டா?
3. இதைத் தவிர ஆக்சஸ் கோப்புகளின் உபயோகம் என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/29/2005 10:43:11 PM      Dondu     Email    Home Page


சரவணன், உண்மைய சொல்லிடுங்க. பொண்ணு பாத்த விஷயம் சும்மா குத்துமதிப்பாதான் கேட்டீங்களா?

இங்க பரி கல்யாண வரவேற்புக்குப் போய் இருந்தேன். நான் ஃபோட்டோல பாத்த மாதிரியே இல்லேண்ட்டார். அதான் இனிமேல் மாசாமாசம் புகைப்பட update பண்ணிடணும்னு இருக்கேன்.

3/30/2005 4:57:38 AM      S Krupa Shankar     Email    Home Page


சத்யராஜ்குமார்:

என்ன இருந்தாலும் MS Access தெரிஞ்ச பிசாசாச்சே. :-)

முன்பு ஒரு முறை பணியகத்தில் இந்த 'விஷ பரீட்சை'யில் ஈடுபட்ட போதே இதை வலையிலும் பதிக்கணும்ன்னு நெனச்சேன். அப்பறம் நேரமில்லாம போச்சு. அப்பறம் பணிநிமித்தமாக இன்னொரு முறை சோதித்துப் பார்க்கும்போது அப்படியே screenshotம் எடுத்து போட்டுட்டேன்.

நீங்க கண்ட்ரோல் செண்டர்தான் பயன் படுத்தறீங்களா? phymyadmin வசதியா இருக்கும்போல பட்டது. எனக்கு Enterprise Managerஐ விடவும் MS Accesதான் அதிக பழக்கம். :-(

3/30/2005 5:03:43 AM      S Krupa Shankar     Email    Home Page


டோண்டு ராகவன்:
எம்மாதிரி செய்வது பற்றி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை [ஞானசூன்யம் :-((]. எனவே இரண்டுக்கும் சேர்த்தே சொல்கிறேன்.

மொழிபெயர்ப்பு பொருத்தவரை நான் கூகிள் தமிழ்ப்படுத்தும் முகப்பைப் பார்த்து இருக்கிறேன். மற்றபடி accessஇல் முகப்பு ஒருவாக்குவது நம் விருப்பம் போல் செய்துகொள்ளலாம்.

நீங்கள் குறிப்பிடுவது access கோப்பில் இருந்து pdf கோப்பு உருவாக்குவுது பற்றி என்றால்...

நான் இதுவரை அப்படி முயன்றதில்லை. இப்பொழுதுதான் செய்து பார்த்தேன்.

இதற்கு மென்பொருட்கள் உள்ளன. உங்களிடம் ஓப்பன் ஆஃபீஸ் இருந்தால் Access கோப்பில் உள்ளதை அப்படியே படி எடுத்து openofficeஇல் இட்டு, pdf கோப்பாக சேமிக்கலாம். அல்லது நேரடியாகவே Accessஇல் இருந்து pdf கோப்பாக்கவேண்டும் என்றால், cutepdf [ÍðÊ] என்ற மென்பொருளைப் பதிவிறக்கி சுலபமாக உருவாக்கிவிடலாம். இதை நிறுவிக்கொண்ட பின்னர், Accessஇல் ஒரு டேபிளைத் திறந்து File->Print என்று கொடுத்தால் printer name பட்டியலில் cutepdf writer என்ற பெயர் தெரியும். அதைத் தேர்வு செய்ததும் pdf கோப்பின் பெயர் ஒன்று கொடுத்து சேமித்து விடலாம்.

ஹலோ, எங்க ஓடறீங்க! இருங்க, உங்கள் கடைசிக்கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி விடுகிறேன்.

ஆக்ஸஸ் கோப்புகள் இலவசமாகப் பயன்படுத்தலாம், விநியோகிக்கலாம். ஆக்ஸஸ் கோப்பைக்கான இடைமுகபான MS Access தான் காசு கொடுத்து வாங்கவேண்டும் (ஆமாம், Word, Excel போன்று இதுவும் pirated copyதான் நிறைய). ஆனால் MS Access இல்லாமலும் ஆக்ஸஸ் கோப்பைப் பயன்படுத்தலாம்.

Access கோப்பு என்பது தகவல் சேமித்து வைக்கும் லாஜிக். நிரல்கள் எழுதும்போது தகவல் கிடங்காக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வெறும் சாதாரண text fileஐ விட Accessஆக சேமித்து வைப்பது சாலச்சிறந்தது. தேடுதலுக்கும் சுலபம். வலைத்தளங்க, வலைப்பூ எல்லாம் கட்டலாம் இதைக்கொண்டு. இந்த வலைத்தளமும் Access கோப்பை மையமாகக்கொண்டுதான் இயங்குகிறது. நான் எழுதியவை, நீங்கள் எழுதியவை எல்லாம் ஒரே ஒரு Access கோப்பில் இருக்கும் data மட்டுமே. dataவை வைத்து நன்கு (என்னைப் போல் இல்லாமல்) பயனுற உபயோகிப்பது நம் கையில்தான் இருக்கிறது.

இவ்வளவு பெரிய கமெண்ட்டை பொறுமையாக படித்ததற்கு நன்றி.

3/30/2005 5:47:31 AM      S Krupa Shankar     Email    Home Page


test comment
3/30/2005 6:14:40 AM      S Krupa Shankar     Email    Home Page


என்ன ஆச்சு.. போட்டோவெல்லாம் மாத்திட்டீங்க?
கடி திட்ட வேனும் தான் வேண்டாம்
பிரிய


3/30/2005 7:14:30 AM      195.93.66.24    


Let me explain in English. A product catalog is in PDF. using a software, the sentences to be translated are converted to so many strings and given in an Access file. The table in access has got two columns, "Source Language" and "Target Language" (in my case Quellspra?? and ?? elspra?? respectively). The former column is copiable but not editable. The second column is meant for typing the translations of the respective rows. proceeding from one row to the one below is done by using tab and not toner arrow.

the translated strings are transposed to the original PDF file, whereby the German sentenses get replaced by the corresponding English sentences. In that way you will get the catalog in English with all diagrams intact. Remember, I am not talking of converting the access file to PDF.
சொதப்பின பின்னூட்டம் என்னால் (க்ருபா) மாற்றப்பட்டதால் sentences என்பது sentensesஆக வந்து விட்டது. மற்றபடி இட்ட பின்னூட்டம் சிதைந்த பின்னூட்டம் மீட்டெடுக்கப்பட்டுவிட்டது

3/30/2005 8:46:50 AM      Dondu     Email    Home Page


ஆங்கிலத்தில் விவரிக்க நினைத்தேன் முடியவில்லை. பி.டி.எஃப் கோப்பிலிருந்து மொழி பெயர்க்க வேண்டிய வாக்கியங்கள் ஸ்ட்ரிங்குகளாக அக்ஸெச்சில் வர, அதை மொழி பெயர்த்து பழைய பி.டி.எஃப் கோப்பில் ஏற்றுவதைப் பற்றிப் பேசினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

3/30/2005 9:21:26 AM      Dondu     Email    Home Page


மேலே "தங்க்லீஷ்" டிக் செய்யப்பட்டு இருந்தால் ஆங்கிலம்-தமிழ் transliteration சர்வரில் நடைபெறும். எனவே ஆங்கிலத்தில் தட்டச்சடித்தால் அந்த "டிக்"ககை எடுத்து விடவேண்டும்..

நீங்கள் சொன்னதில் இருந்து எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நிரலி ஒன்று ஒரு pdf கோப்பை மூலமொழி சொற்சரம் ஒன்றில் உருவாகுகிறது. பிறகு accessல் உள்ள tableஇல் இருக்கும் மாற்றப்பட்ட சொற்சரங்களைக்கொண்டு இன்னொரு மொழி ஆவணம் தயாரிக்கப்படுகிறது. எனவே நிரலி மொழிவாரியாக சொற்சரங்களைத் தேர்ந்தெடுத்து pdகோப்பை உருவாக்குகிறது.

எனவே, பழைய கோப்பு திருத்தி அமைக்கப்படுவதற்கு பதிலாக புதிய கோப்பு வேறு மொழியில் உருவாகுகிறது என்று தோன்றுகிறது.

நேரடியாக pdf கோப்பில் திருத்தம் செய்யும் செயலி எதையும் நான் இதுவரை பயன்படுத்தியது இல்லை.

3/30/2005 11:11:03 AM      S Krupa Shankar     Email    Home Page


பிரியா, திட்டாமல் (நீங்களும்) தப்பியதற்கு நன்றி.

ஆமாம் ஏன் உங்க மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் மடல்கள் எனக்கே திரும்பித்திரும்பி வருகின்றன? ரொம்பி வழிகிறதா உங்கள் அஞ்சல் பெட்டி?

3/30/2005 11:18:04 AM      S Krupa Shankar     Email    Home Page


ஏல்லாரும் கேக்குற அத்தே கேள்வி தான், என்ன போட்டொ மாத்திருக்கீங்க?

பிகு: இந்த தங்லிஷ் டைப்பிங் ரொம்ப கஷ்டமா இருக்கு :(

4/10/2005 9:22:40 AM      Uma    


ஒரு நண்பர் ஃபோடோல பாக்கற மாதிரி நேர்ல இல்லைனு நெனைச்சதா சொல்லிட்டார் உமா. அதான் இனிமேல் மாசாமாசம் ஃபோட்டோ மாத்தலாம்னு சபதத்துல இருக்ககேன். :-))

தங்க்லீஷ் டைப்பிங்க் கஷ்டமா இருக்கா? இந்த பின்னூட்டப்பெட்டிக்கு மேல "தங்க்லீஷ்" அப்டீன்னு போட்டு ஒரு checkbox இருக்கா? அதுல இருக்கற tickmarkஐ எடுத்து விட்டுட்டு தமிழ்ல அடிச்சா அப்படியே வரும். தமிழ் தட்டச்சு தெரியுமா?

4/10/2005 4:07:32 PM      S Krupa Shankar     Email    Home Page


machi, i like this tangaleesh conversion thingie.. i want to use it in my web site too.. can u please spend 20 seconds of ur time and drop me an email to mexicomeat@gmail.com on how to do this?

idhai mattum senje naa, en varungala kudumbam kuttis (ellam innime than varanum) ellam un photovai pournami anniki kumbittu un perai solli vazhthum

4/14/2005 11:27:39 AM      mexicomeat     Email    Home Page


நல்ல இருக்குப்பா உன் ச்ய்ய்டெஊ, வாழ்ஹ்க வளமுடன் (ச.ச ஷண்டிரன் ச்ட்ய்லெ லெ சொல்லனும் ந நல்ல இருண்டு நாசம பொ )
4/14/2005 11:38:08 AM      211.26.114.153    


i meant to say "nalla irukkupa un siteu. vazhga valamudan. ss chandran style le sollanumnaa nalla irundu nasama po :)
4/14/2005 11:39:02 AM      211.26.114.153    


ஏம்ப்பு...கலர் தெரப்பிக்கு போயாச்சா?இந்தப்பக்கமே காணோம்? எதாச்சும் "கரும்பு ஜூஸ்" ஸ்டைல்ல எழுதவும்..விரைவில்!(இல்லாட்டி..தேவதைகள் இல்லாத கனவாக வரக் கடவது!!)
4/15/2005 3:07:44 AM      shreya    


mexicomeat, 20 செகண்ட்ல அனுப்ப முடியலை, கொஞ்சம் அதிக நேரம் ஆகிவிட்டது.

அது சரி, குடும்பம் குட்டி கிடக்கட்டும், வெப்சைட்டயே இப்படி அம்போன்னு வெச்சுருக்கயே? ஒன்னும் எண்ட்ரி எல்லாம் போடற ஐடியாவே இல்லையா?

211.26.114.153, இது பாராட்டா திட்டான்னு புரியாட்டியும் இந்த வெய்யிலுக்கு இப்படி குழப்பி சந்தோஷப்படுத்தினதுக்கு நல்லா இருந்து நாசமாப்போ. :-)

ஷ்ரேயா, கொஞ்சம் பணியக மாற்றங்கள் நிகழவேண்டி இருப்பதால் இணைய உலகில் அடிக்கடி சஞ்சரிக்க முடியவில்லை. மற்றபடி நான் கலர் தெரப்பிக்குப் போகறதுக்குள்ள வீட்லயே ட்ரீட்மெண்ட்கு ஏற்பாடு பண்றாங்க. :-))

4/17/2005 2:36:19 PM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


ஹெ ஹெ...சொர்ர்ய் இ அம் பிட் லழ்ய், டுடெ...இ ஹவெ அட்டெட் 2 மொரெ பொச்ட்ச் டொ ம்ய் ப்லொக் நொந் :)

"211.26.114.153" -- தட்ச் மெ. அது பராடு தன் நன்ப..ப்ட்ந் இச் ஹ்ட்ட்ப்://கிருப.சொம் உர் சிடெ?

P.ஸ்: ஸொர்ர்ய், ஈ அம் நொட் என்திரெல்ய் சொம்fஒர்டப்லெ நித் தெ டமிங்லேஷ் ட்ரன்ச்லடொர். Hஎன்செ, ப்லெஅசெ fஒர்கிவெ ம்ய் லங்உஅகெ.. த்ஹிருமவலவன் கன்னக்க பொரட்டம் கேரட்டம் நடத பொரேங்அ

4/20/2005 12:01:07 PM      mexicomeat     Email    Home Page


Sorry dude, please delete my previous post :(... This is what I meant to say:

He He...Sorry I am bit lazy,dude. I have added 2 more posts to my blog now :)

"211.26.114.153" -- thats me. adhu paraatu than nanbaa, btw http://kiruba.com un sitea?

P.S: sorry, i am not enitrely comfortable with the tamingleesh translator. Thirumavalavan kannakka porattam keerattam nadathatheenga.. next post le irundhu 'tamingleesh' le post panren

4/20/2005 12:04:38 PM      mexicomeat     Email    Home Page


Bத்ஞ், ரெகர்டிங் திச் பொச்ட் அபொஉட் உசிங் Mஸ் ஆச்செச்ச் டொ மனகெ அ Mய்ஸ்Qள் டடபசெ... ஹெரெ அரெ ம்ய் தொஉக்ஹ்ட்ச்:

ஈ உசெ அ ஒபென் சொஉர்செ டடபசெ ச்லிஎன்த் சல்லெட் "ஸ்ஃஉஇர்ரெல் ஸ்Qள்" - ஈ லொவெ இட் fஒர் தெ fஒல்லொநிங் ரெஅசொன்ச்:

(1) ஈட் இச் ஒபென் சொஉர்செ அண்ட் இச் ந்ரிட்டென் இன் Jஅவ
(2) ஈட் சன் பெ உசெட் டொ அட்மினிச்டெர் / மனகெ அன்ய் JDBஸ்ர் சொம்ப்லைன்த் டடபசெ (தட் இன்ச்லுடெச் உர் Mய்ஸ்Qள் / Mஸ் ஸ்Qள் / Mஸ் ஆச்செச்ச் அண்ட் Mஉனியண்டிஸ்Qள் எட்ச் :) )
(3) ஈட் ஹச் அல்மொச்ட் அல்ல் fஎஅடுரெச் தட் Mஸ் ஸ்Qள் ஏன்தெர்ப்ரிசெ Mஅனகெர்/Qஉஎர்ய் ஆனல்ய்செர் அண்ட் ப்ஹ்ப்Mயாட்மின் ஒffஎர்

(4) ஈட் உசெச் ப்லுகின் மொடெல் - தெரெfஒரெ தெ fஉன்ச்டிஒனலிட்ய் ஒf திச் சன் பெ என்ஹன்செட் ப்ய் இன்ச்டல்லிங் ப்லுகின்ச், அச் உ நேட் தெம். ஞெல்ல், அச் ஒf நொந் - நெ ஹவெ அ ஹண்ட்fஉல் ஒf ப்லுகின்ச் (ஒன்ல்ய் :() fஒர் ஸ்ஃஉஇர்ரெல் ஸ்Qள். ஸொமெ ஒf தெம் இன்ச்லுடெ -

ஆஉடொசொம்ப்லெடெ (Yஎப் - யொஉ ட்ய்பெ இன் அ பர்டிஅல் சொலும்ன் நமெ / டப்லெ நமெ அண்ட் ப்ரெச்ச் ஸ்ர்ட்ர்ல்+ஸ்பசெ அண்ட் ஸ்ஃஉஇர்ரெல் சொம்ப்லெடெச் தெ டப்லெ/சொலும்ன் நமெ fஒர் யொஉ)

ஸ்ய்ன்தக்ஷ் Hஇக்ஹ்லிக்ஹ்டிங்

Fஒர்மட் ஸ்Qள்

ஸ்ர்ஒன்வெர்ட் ஸ்Qள் டொ Jஅவ சொடெ (இஎ., அட்ட் அ ஸ்ட்ரிங்Bஉffஎர் ந்ரப்பெர் அரொஉண்ட் தெ ஸ்Qள்)

(5) ஸ்ர்உச்டொமிசப்லெ ளோக் அண்ட் Fஏல்

(6) ளச்ட் புட் நொட் தெ லெஅச்ட், அதிகம டெஅ குடிகிர ஆம்பலயும் அதிகம ட்வ் பாகிர பொம்பலயும் நல்ல வழ்ஹ்தட சரிதிரம் இல்லெ, ஹ்ம்ம்ம்... நான் இன்ன சொல்ல வண்டென்?

ஹெரெ இச் தெ லின்க் ஹ்ட்ட்ப்://ச்ஃஉஇர்ரெல்-ச்ஃல்.சொஉர்செfஒர்கெ.னெட்/

நம்ம Kஉல்விர் ஸிங்ஹ் (அதன் பா, நம்ப தோல் படதுலெ விக்ரம் கிட்டெ அர்ம் ந்ரெச்ட்லிங் லெ தொது பொவரெ, ஹெ ஹெ :D) ஹச் ந்ரிட்டென் அ டுடொரிஅல் அபொஉட் திச்

ஷேர்ச்
Mஎக்ஷிசொMஎஅட்

4/20/2005 12:25:30 PM      mexicomeat     Email    Home Page


BTW, regarding this post about using MS Access to manage a MySQL database... here are my thoughts:

I use a open source database client called "Squirrel SQL" - I love it for the following reasons:

(1) It is open source and is written in Java
(2) It can be used to administer / manage any JDBC complaint database (that includes ur MySQL / MS SQL / MS Access and MuniyandiSQL etc :) )
(3) It has almost all features that MS SQL Enterprise Manager/Query Analyser and phpMyAdmin offer

(4) It uses plugin model - therefore the functionality of this can be enhanced by installing plugins, as u need them. Well, as of now - we have a handful of plugins (only :() for Squirrel SQL. Some of them include -

Autocomplete (Yep - you type in a partial column name / table name and press Ctrl+Space and Squirrel completes the table/column name for you)

Syntax Highlighting

Format SQL

Convert SQL to Java code (ie., add a StringBuffer wrapper around the SQL)

(5) Customisable Look and Feel

(6) Last but not the least, adhigama tea kudikira aambalayum adhigama tv paakira pombalayum nalla vazhthada sarithiram ille, hmmm... naan inna solla vanden?

here is the link http://squirrel-sql.sourceforge.net/

Namma Kulvir Singh (adhan paa, namba dhool padathule vikram kitte arm wrestling le thothu povare, he he :D) has written a tutorial about this

cheers
MexicoMeat

4/20/2005 12:25:50 PM      mexicomeat     Email    Home Page


BTW, regarding this post about using MS Access to manage a MySQL database... here are my thoughts:

I use a open source database client called "Squirrel SQL" - I love it for the following reasons:

(1) It is open source and is written in Java
(2) It can be used to administer / manage any JDBC complaint database (that includes ur MySQL / MS SQL / MS Access and MuniyandiSQL etc :) )
(3) It has almost all features that MS SQL Enterprise Manager/Query Analyser and phpMyAdmin offer

(4) It uses plugin model - therefore the functionality of this can be enhanced by installing plugins, as u need them. Well, as of now - we have a handful of plugins (only :() for Squirrel SQL. Some of them include -

Autocomplete (Yep - you type in a partial column name / table name and press Ctrl+Space and Squirrel completes the table/column name for you)

Syntax Highlighting

Format SQL

Convert SQL to Java code (ie., add a StringBuffer wrapper around the SQL)

(5) Customisable Look and Feel

(6) Last but not the least, adhigama tea kudikira aambalayum adhigama tv paakira pombalayum nalla vazhthada sarithiram ille, hmmm... naan inna solla vanden?

here is the link http://squirrel-sql.sourceforge.net/

Namma Kulvir Singh (adhan paa, namba dhool padathule vikram kitte arm wrestling le thothu povare, he he :D) has written a tutorial about this

cheers
MexicoMeat

4/20/2005 1:05:36 PM      mexicomeat     Email    Home Page


யப்பா தெய்வமே! இப்படி வா வா. இது மாதிரி ஒரு மேட்டருக்காகதான், குறிப்பா Mஸ் ஸ்Qள் ஸெர்வெர்க்கு ரொம்ப நாளா அலைஞ்சு திரிஞ்சேன். சிற்சில இன்தெர்fஅசெலாம் கடைச்சாலும் இப்படி ஆட்டோகம்ப்ளீஷன் எல்லாம் வெச்சு ஒன்னும் கிடைக்கலை. Mய்ஸ்Qள்க்கு வேற சப்போர்ட் இருக்குன்னு போட்டு இருக்கே. ப்ரமாதம், ப்ரமாதம். உன் ஃபோட்டோ அனுப்பினால், என் சந்ததிகளுக்கு வரும் முதல் பௌர்ணமில இருந்து உன் திருமுகத்தைத் தொழ காமிச்சுடறேன். இப்படி இண்டலிசென்ஸோட இருக்கற ஈDஏ பத்தி சொன்னதுக்கு மிக்க நன்றி.

ஆனா ஒரு ப்ரச்சனை. Fஐலெட் டொ லொஅட் Mஐன்-ஸ்ர்லச்ச் மனிfஎச்ட் அட்ட்ரிபுடெ fரொம் <பத்>ன்னு ஒரு திட்டு திட்டுது இன்ச்டல்ல் பண்ணனும்னா. கொஞ்சம் fஒரும்ச்ல தேடிப்பார்த்ததுல மைன்ச்லச்ச்ஐ என்னமோ மாத்தணும்னு போட்டு இருந்தது. ஜாவாவுக்கும் எனக்கும் உள்ள தூரம் அறிவுக்கும் க்ருபாவுக்கும் இருக்கற தூரத்தைவிட ரொம்ப அதிகம். :-((

குல்வீர் சிங், சாயா சிங் எல்லாம் யாருன்னே தெரியாது.

4/21/2005 3:31:44 AM      S Krupa Shankar     Email    Home Page


யப்பா தெய்வமே! இப்படி வா வா. இது மாதிரி ஒரு மேட்டருக்காகதான், குறிப்பா MS SQL Serverக்கு ரொம்ப நாளா அலைஞ்சு திரிஞ்சேன். சிற்சில interfaceலாம் கடைச்சாலும் இப்படி ஆட்டோகம்ப்ளீஷன் எல்லாம் வெச்சு ஒன்னும் கிடைக்கலை. MySQLக்கு வேற சப்போர்ட் இருக்குன்னு போட்டு இருக்கே. ப்ரமாதம், ப்ரமாதம். உன் ஃபோட்டோ அனுப்பினால், என் சந்ததிகளுக்கு வரும் முதல் பௌர்ணமில இருந்து உன் திருமுகத்தைத் தொழ காமிச்சுடறேன். இப்படி இண்டலிசென்ஸோட இருக்கற IDE பத்தி சொன்னதுக்கு மிக்க நன்றி.

ஆனா ஒரு ப்ரச்சனை. Failed to load Main-Class manifest attribute from ன்னு ஒரு திட்டு திட்டுது install பண்ணனும்னா. கொஞ்சம் forumsல தேடிப்பார்த்ததுல mainclassஐ என்னமோ மாத்தணும்னு போட்டு இருந்தது. ஜாவாவுக்கும் எனக்கும் உள்ள தூரம் அறிவுக்கும் க்ருபாவுக்கும் இருக்கற தூரத்தைவிட ரொம்ப அதிகம். :-((

குல்வீர் சிங், சாயா சிங் எல்லாம் யாருன்னே தெரியாது.

4/21/2005 3:33:36 AM      S Krupa Shankar     Email    Home Page


"delete my previous post"

எதுக்குன்னேன்? அப்படி சொதப்பினாதான் எனக்கும் த்ருப்தி. ஒரு சாம்ப்ளுக்கு நானும் போன கமண்ட்டுக்கு மொதல்தை சொதப்பிட்டேன், போதுமா? kiruba.com என்னோடது இல்லை, கிருபா ஷங்கர்-து. அவர் வளசரவாக்கத்துல க்கீறார், நான் பேட்டைல க்கீறேன்.

அப்பாலிக்கா இந்த தமிங்க்லீஷ் மேட்டரு. தெகிரியமா போஸ்டு பண்ணுபா. நான் பொர்ந்து, வள்ந்து, மாஞ்சு அல்லாமே தமிங்க்லீசுலதான் போனேன் நெட்டுல. தெகிரியமா போடு. தமிங்க்லீஷ் ட்ரான்ஸ்லேட்டர் சுலபமா இருக்கணும்னா, என்னென்ன keyக்கு என்னென்ன எழுத்துன்னு பிர்ஞ்சுண்ட்டா அவ்வளவுதான், ரொம்ப ஜிகாலா இர்க்கும்.

4/21/2005 3:38:01 AM      S Krupa Shankar     Email    Home Page


ஆஹா, மன்னிக்கவும், ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது.

பழக்கதோஷத்துல ஜார் file-kku பதிலா zip packageஐ download பண்ணிட்டேன். உள்ள இருக்கற build, client-src, fw-src எல்லாத்தையும் தனித்தனியா இன்ஸ்டால் பண்ணினப்பதான் எரர். அப்பாலிக்கா ஜார் file-ஐ பதிவிறக்கி இன்ஸ்டால் பண்ணிட்டேன். இப்போ சூப்பரா இருக்கு. கொஞ்சம் configuration பழகிக்கணும். ரொம்ப தண்ணி (நன்றியை விட காஸ்ட்லிபா. கண்டுக்காத...).

4/21/2005 3:47:20 AM      S Krupa Shankar     Email    Home Page


மன்னிக்கவும் கிருபா ஷன்கர் அவர்களே. தங்கிலீஷ் பெட்டியை அன்செக் செய்தாலும் ஆங்கிலத்தில் பின்னூட்டம் வரமாட்டேன் என்கிறது. சுரதாவின் இரண்டு பெட்டிகள் நிரலியை வைத்தால் நன்றாக இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

4/21/2005 8:52:04 PM      Dondu     Email    Home Page


தங்க்லீஷ் அன்செக் பண்ணினா ஆங்கிலத்தில் வரலையா பின்னூட்டம்? வருமே.... ?

புதுக்கட்டுமானப் பணியில் ஈடுபட இருப்பதால் கூடிய விரைவில் புணரமைக்கிறேன் எல்லாத்தைய்யும். சுரதாவையும் போட்டு வைச்சுடறேன்.

ஆமாம், "அவர்களே" எல்லாம் போட்டு என்னை விளித்தால் போதாது, மிஸ்டர், சார் எல்லாம் போட்ட மரியாதை இன்னும் அதிகமா இருக்கும் இல்லையா... ஹீ, ஹீ, ஹீ. :-))

4/23/2005 12:41:33 PM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)