web counter

உதவாக்கரை
Text-Align=Justify, லவ்-அவள்=rectify ( ???வா?, ?? 17, 2005 )

"ஆமா என்னடா வழக்கம் போல ஆஃபீசுல தூங்காம இன்னிக்கு இப்படி சோகமா கண்முழிச்சு இருக்க?"

"அத ஏன் கேக்கற! தமிழ்ல ஒரு லவ்லட்டர் எழுதினேன். தனியா ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சு திவ்யாகிட்ட இணையத்துல போய்ப் படின்னு URL குடுத்தேன். அவ என்னடான்னா Firefoxல பார்த்து இருக்கா. 'பேசறதும் புரியலை, எழுதறதும் புரியலைன்னாலும், கம்ப்யூட்டர்ல டைப் பண்ணினது கூடவா இப்படி புரியாம இருக்கும்'னு என்னைப் பார்த்து அதிசயப் படறா."

"ஓ, வலைப்பக்கத்துல லவ் லட்டரா! பரவாயில்லை. அது சரி யாரு அது திவ்யா? பொண்ணு எப்படி?"

"பக்கத்து வீடுடா மச்சான். செம்ம அழகு"

"அறிவு?"

"அதுவும் சூப்பர்டா. எந்தப் பிரச்சனையையும் ரெண்டு கோணத்துல இருந்து நல்லா அலசிப்பார்ப்பா."

"எதை வெச்சு சொல்ற?"

"வீட்டுக்குக் குடிவந்த புதுசுல 'மே ஐ நோ யுவர் good நேம்'னு கேட்டா. 'சிவா'ன்னு பதில் சொன்னேன். ஒடனே 'மே ஐ நோ யுவர் bad நேம்'ன்னும் கேட்ட்டா."

"கஷ்டகாலம். உன்னை நல்லா அலசித்தான் பார்த்து இருக்கா. ஒனக்கு இவதான் சரி. ரொம்ப அதிகமா bad நேம் எடுத்துட்டயோ அவகிட்ட? அத வுடு, firefox-la எப்படி தெரிஞ்சது எழுத்துக்கள்?"

"இல்லடா அப்பப்போ ஜன்னல் வழியா பார்ததா அவகிட்ட 'ஹலோ' 'ஹாய்' சொல்லுவேன். அவ்வளவுதான். இது போய் பெரிய விஷயமா?"

"நீ எதுக்கும் justify பண்ணாத. அப்போதான் ப்ரச்சனை வராது."

"இல்லடா, நெஜம்மா. வேற எதுவும் பேசினதே இல்லை."

"அத சொல்லலை. தமிழ் எழுத்துக்கள்ல லவ் லெட்டர் எழுதினா, கம்ப்யூட்டர்ல, வலைப்பதிவுல எல்லாம் text-align ப்ராப்பர்டில justify-ங்கற வார்த்தையைப் போடாதேன்னு சொன்னேன்."

"ஓ, அப்போ text-align=justifyன்னு இருந்தா firefoxல ப்ரச்சனை வருமா?"

"ம், ஆமாம். firefoxக்கு தமிழ் எழுத்துக்களை சரியா justify பண்ணத் தெரியாது. அதனால நம்ப வலைப்பக்கங்களை யாராவது firefoxல படிக்கற மாதிரி தெரிஞ்சா, text-align: justifyன்னு எங்கயுமே போடக்கூடாது. Firefoxக்கு தமிழ்ல எழுதினதை justify பண்றது புடிக்காதுன்னே வெச்சுக்கோ."

"Firefox என்ன இலக்கிய விமர்சகரா, எழுதினதை justify பண்ணினா புடிக்காதுங்கறதுக்கு? சரி போ. எனக்கு எப்படியாவது அவளை அந்த லவ்லட்டரைப் படிக்க வைக்கணும். ஆனா அவ Firefoxதான் யூஸ் பண்ணுவேன்னு ஒரு கொள்கையோடவே இருக்கா."

"அப்போ textalign=justifyஐ எடுத்து விட்டுடு. ப்ளாக் டெம்ப்ளேட் ஏதாவதை 'சுட்ட'யா? அதெல்லாம் இங்க்லீஷ் blogsக்கு பண்ணினது."

"ஆமாம், 'சுட்ட'பழம்தான். அழகா இருந்துதேன்னு சுட்டேன். ஆனா நான் Internet Explorerதான் உபயோகிப்பேன். அழகான justifyஐ விடறதுக்கு எனக்கு மனசு இல்லை. Word Document மாதிரி வலைப்பக்கத்தை பளிச்னு காமிக்கற justifyஐ விட்டுட்டு firefoxக்கு பயப்படறதாவது! சான்ஸே இல்லை."

"அப்போ ஒன்னு பண்ணு. firefox rendering engineஐ நீயே கொஞ்சம் கை வெச்சு மாத்திடு. அப்போதான் சரியாகும்."

"மவனே, என் காதல் engineஐயே சரிபண்ண முடியாம தவிக்கறேன், firefox என்ஜினாம் firefox என்ஜின். வேற எதாவது ஐடியா இருந்தா சொல்லு. மேலும், நான் அவளைப் போய் புது firefox யூஸ் பண்ணு, பழைய waterdog யூஸ் பண்ணு, பம்பரம் விடுன்னு எல்லாம் கட்டுப் படுத்த முடியாது. தெரிஞ்சா சொல்லு, என் தலைமுறையே உன்னை வாழ்த்தும்... இல்லேன்னா...."

"இல்லேன்னா....? justifyஐ leftனு மாத்திடுவியா?"

"இல்லை, எதிர்வீட்டுப் பொண்ணுக்கு மாறிடுவேன்."

"அடப்பாவி!"

"பின்ன? ஏதாவது கோடிங்க், கீடிங்க் எழுது என் காதலை வாழவைப்பேன்னு பார்த்தா...."

"சரி, இரு. என் வீட்டு மாடிப் பொண்ணுக்கு யூஸ் ஆகும்னு நானும் ஒரு ஐடியா பண்ணி வெச்சு இருக்கேன். நான் ஒரு கோடிங்க் தரேன். அதை அப்படியே உன்னோட வலைப்பதிவு டெம்ப்ளேட்ல கீழ இருக்கற lt;/body> tagக்கு மேல paste பண்ணிடு. எல்லாம் சரியாகிடும்."

"Internet Explorer-ல justified text தொலைஞ்சு போய்டாதே?"

"போகாது போகாது. அங்க அப்படியே justify பண்ணித் தெரியும். நான் ஒன்னோட பைக் கேட்டா பெட்ரோல் இல்லன்னு கூசாம பொய் சொல்லுவ. ஆனா நம்ப ஆஃபீஸ் மாலதியோட அண்ணன் கேட்டா அப்படி சொல்வியா?"

"டேய், என்னடா இப்படி திடீர்ன்னு அதையெல்லாம் சொல்ற! பைக் என்ன, காரே வாங்கித் தரேன். என் காதலுக்கு ஒரு ரோடு போட்டுக்குடுடா..."

"அதுக்கு சொல்லலை. நீ பண்ற மாதிரியே, நான் தர்ர இந்த scriptம் வலைப்பக்கம் லோட் ஆனதும் என்ன ப்ரௌசர்ன்னு மொதல்ல பார்க்கும். Internet Explorerன்னா பைக் சாவியக் குடுத்துடும். வேற ஏதாவது ப்ரௌசர்ன்னா, text-align=leftனு மாத்திடும்."

"நீ சொன்னதுல ஒன்னே ஒன்னுதாண்டா புரிஞ்சது."

"என்ன?"

"நான் ஒனக்கு பைக் தராததுல செம கடுப்புல இருக்க."

"அதெல்லாம் கவலப்படாத மாம்ஸ். நான் சொன்ன மாதிரி நான் தர்ர அந்த ஸ்க்ரிப்ட்டை உன்னோட டெம்ப்ளேட்ல சேர்த்துடு. அவ்வளவுதான். அதுவே உன்னை அந்த திவ்யாவோட சேர்த்து வெச்சுடும்."

"சரி, குடு அந்த ஸ்க்ரிப்ட்டை. அப்படியே டிக்டேட் பண்ணு, நான் டெம்ப்ளேட்ல டைப் பண்றேன்."

"நீ ஸ்கூல்ல வாத்தியார் சொல்ற நோட்ஸ் எழுதி, எழுதி ரொம்பதான் கெட்டுப்போய்ட்ட. சரி, இந்தா சொல்றேன், டைப் அடி.

<script>
function JustificationVaendaam()
{
var arTags="body,table,tr,td,th,div,p,span,ul,li,h1,h2,h3,h4,h5,h6,h7,i,b,small,strong,a"
arTags=arTags.split(",")
for(lngarStart=0;lngarStartJustifyYeduththudu(arTags[lngarStart])
}

function JustifyYeduththudu(strTagName)
{
var ob=document.getElementsByTagName(strTagName)
for(lngStart=0;lngStartob.item(lngStart).style.textAlign="left"
ob=null
}
if(navigator.appName.indexOf("Microsoft Internet Explorer")<0) JustificationVaendaam()
</script>

"

"முடிச்சுட்டேண்ட்டா மச்சான்."

"சரி, நான் களம்பறேன். வீட்டுக்குப் போகணும். மொட்டை மாடில வெய்யிலுக்கு வடாகம் போட்ருப்பா எங்க அம்மா. போய் எடுத்து வைக்கணும். ரொம்ப காஞ்சுப் போய் இருக்கும்."

"காஞ்சுப்போய்தானே மாடி வழியா மொட்டை மாடிக்குப் போகறேங்கற?"

"வேண்டாம், நீ ஓவராப் பேசற..."

"கோச்சுக்காதடா, சும்மாக் களாய்ச்சேன். சரிடா, நீ சொன்ன மாதிரியே பண்ணிட்டேன். எனக்கு ஒர்க்-அவ்ட் ஆகுமாடா?"

"எனக்கு சரியா ஆச்சு. உனக்கும் கண்டிப்பா ஆகும்."

"இருந்தாலும் டௌட்டாவே இருக்குடா."

"சரி, நான் வேணும்னா ட்ரை பண்ணிப்பார்க்கட்டுமா?"

"அடப்பாவி! மித்ர த்ரோகி!"

"டென்ஷன் ஆகாத, நான் ப்ரௌசர்ல எழுத்து சரியாத் தெரியுதான்னு ட்ரை பண்ணிப் பார்க்கட்டுமான்ன்னேன்."

"ஓ, ஹீ, ஹீ. பயந்துட்டேன் ஒரு நிமிஷம். அதானே, நீதான் ஏற்கனவே மாடிக்குப் போக ட்ரை பண்றயே. இரு, 'செல்'ல அவகிட்ட இப்போ மறுபடியும் பார்க்க சொல்றேன்."

"சரி..."

*******************

"டேய் சிவா, என்னடா ஃபோன்ல பேசிட்டு இப்படி பேயறைஞ்ச மாதிரி நிக்கற?"

"அவகிட்ட பேசிட்டேண்டா"

"என்ன சொன்னா? கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னதும் பயந்துட்டயா?"

"இல்லடா! நான் எழுதினது இப்போ ஃபயர்ஃபாக்ஸ்ல நல்லா தெரிஞ்சதாம்."

"அட, அப்படிப்போடு! அப்போ ஓக்கே சொல்லிட்டான்னு சொல்லு!"

"நீ வேற. படிச்சதும் டென்ஷனாகி கண்டபடி திட்டிட்டா!"

"அப்போ சந்தேகமே இல்லை. கண்டிப்பா சக்ஸஸ்தான். ஃபயர்ஃபாக்ஸ் வாழ்க. அந்த ப்ரைவேட் ப்ளாக்ல இன்னும் ஒரு நாலஞ்சு எண்ட்ரி போட்டுப் படிக்க சொல்லு. நான் களம்பறேன். எனக்கு நேரமாச்சு, மாடில வெய்ட் பண்ணும். அப்படிப் பார்க்காத, வடாகத்தைச் சொன்னேன்."

நீதி: நாம் justify செய்து தமிழில் எழுதியதைத் திருமணம் ஆகாத ஒரு பெண் பார்க்க நேரலாம். பார்த்ததை firefoxலும் சரியாகப் படிக்க வசதிசெய்து கொடுக்க, 'சிவா' பயன்படுத்திய scriptஐ உபயோகிக்கப்பது சாலச்சிறந்தது.



28 dharma adigal

¿ýÈ¡¸ þÕóòÐ ... !!
Å¡úòÐì¸û

5/18/2005 9:12:24 AM      V.M     Home Page


நல்ல தமாஷ் :) உலாவிக்குத் தகுந்தவாறு குணத்தை மாற்றும் பச்சோந்தி ஸ்கிரிப்டா? நல்லா இருக்கு :) பிரைவேட் ப்ளொக் வெற்றி பெற வாழ்த்துக்கள்! ஆமா, மேல ஒருத்தர் செவ்வாய் கிரக மொழியில பின்னூட்டமிட்டிருக்கிறாரே, அது புரிஞ்சதா உங்களுக்கு?
5/18/2005 1:44:59 PM      Voice on Wings     Email   


நல்ல எழுதி இருக்கீங்க க்ருபா.
5/19/2005 7:12:22 AM      Uma    


தலைவ அதுக்கு நேஎங்அ ரொம்ப கச்டபட தெவ்தெவை இல்ல .
இந்த ப்லொக் ல பொஇ ஒரொரு ஷினன fஇக்ஷ் இருக்குது டொந்ன்லொஅட் பன்னின்கொங்அ
ஹ்ட்ட்ப்://சரவன்.ப்லொக்ச்பொட்.சொம்/2005/05/மொழில்ல-புக்-270012.ஹ்ட்ம்ல்

எல்லம் ஒரு சுய விலம்பரம் தான் :)

5/20/2005 3:16:43 PM      Saravanan     Email   


my last comment messed up due to transalation.

I have fix for that.checkout my blog
http://saravan.blogspot.com/2005/05/mozilla-bug-270012.html

for more details.


Saravanan

5/20/2005 3:20:56 PM      Saravanan     Home Page


சரவணன், நீங்க 'தங்க்லீஷ்'ல சொன்னதும் புரிஞ்சது.

முதலில் கையைக் குடுங்க. சூப்பர்! நீங்க எழுதின நிரலை இன்ஸ்டால் பண்ணின அப்பறம் எல்லா தளங்களும் கலக்கலோ கலக்கல். ஆமாம் மே ரெண்டாம் தேதியே எழுதிட்டு இதப் பத்தி எங்கயுமே மூச்சு கூட விடலையா?

நான் எழுதிய நிரல் செர்வெர்சிடெ தீர்வுன்னு வெச்சுக்கலாம். அதை வலைப்பூ டெம்ப்ளேட், வலைத்தளம் போன்றவற்றில் இணைத்தால் நல்லது. அவ்வளவுதான்.

ஆனா நீங்க எழுதினது ஃபயர்ஃபாக்ஸ் பட்ஷ். அதனால தமிழா டெவலப்பர் குழுமத்தில் இதைச் சேர்த்து விட்டால் அடுத்து வரும் பொதிகளில் உள்ளினைக்கப்பட்டே வரும். எல்லா ஜஸ்டிஃபை டெக்ஷ்டும் லெஃப்ட் அலிக்னெடா மாறிடும் சர்வர் சைட்-ல எதுவும் பண்ணாமலே. ரொம்ப நல்லது.

இந்த வலைப்பதிவில் மட்டும் உங்கள் நிரலில் சுட்டியை குடுத்தா யாரையும் சென்றடையாது. நான் மட்டும்தான் பயன்படுத்தி இருப்பேன். :-(

அதனால தமிழாடெவலப்பர் குழு போன்றவற்றிலும் குடுத்துடுங்கறீங்களா இதைப் பத்தின விவரம்?. நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் இது பற்றி அறிமுகப்படுத்திடறேன்.

5/21/2005 2:28:59 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


வி.எம். நன்றி. உமா பாராட்டுக்கு உங்களுக்கும் நன்றி.

வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ், அந்த செவ்வாய்க்ரக பாஷை 'டிஸ்கி'ல இருக்கு... 'நன்றாக இருந்தது, வாழ்த்துகள்'ன்னு. ப்ரைவேட் ப்ளாக் எல்லாம் ரெடியாதான் இருக்கு, பொண்ணுதான் கிடைக்கலை. :-((

5/21/2005 2:31:27 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


சரவணன், ஒரு சந்தேகம்.

இந்த ஸ்க்ரிப்டை க்ரீஸ்மங்கி இன்ஸ்டால் பண்ணாமலேயே ஒவ்வொரு வெப்பேஜ் லோட் ஆனப்பறமும் தானாவே எக்ஸிக்யூட் பண்ண ஏதாவது வழி இருக்குமா? ஃபயர்ஃபாக்ஸ்ல ஏதாவது செட்டிங்ஸ்ல இந்த ஸ்க்ரிப்ட் இருக்கற எடத்தைச் சொல்லிட்டா தானாவே ஒவ்வொரு வெப் பேஜ் லோட் ஆகி முடிச்சதும் இதை எக்ஸிக்யூட் பண்ற மாதிரி பண்ண முடியுமா?

அப்படி பண்ணிட்டா எல்லா தளங்களின் யூ.ஆர்.எல்-லையும் அதுல சேர்க்கற ப்ரச்சனை தீரும் இல்லையா?

5/21/2005 2:46:44 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


து மாகெ ஔ து ரா க
5/21/2005 3:07:38 AM      RamachandranUsha     Email   


உஷா, அப்படின்னா?
5/21/2005 3:28:10 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


கிருபா, செவ்வாய் கிரக பாஷையே தெரியும் போது,
இதெல்லாம் ஜீ ஜீபி கண்னா!

5/21/2005 4:07:14 AM      RamachandranUsha     Email   


செவ்வாய்க்ரக பாஷை புரியும், ஆனா இலக்கியவாதி பாஷை புரியாதே. ;-)
5/21/2005 4:57:28 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


கைர் ஐஅசு அசிஅச்fன பசிஅfச் அசக்ட்ச்ன்ச்க்ஷ் எஹ்ச்ட்ன்க்ஷ் (இதுவும் செவ்வாய் பாஷை தான்.. செவ்வாயிலே கிட்டத்தட்ட 25 பாஷை இருக்காம்!)
5/21/2005 4:16:16 PM      mayavarathaan     Email    Home Page


மாயாவரத்தான்,

கசதூம கிலக்கிட்டு மிகமொகிமதல. தொருதல முடிமண்டரமட்டு அமடிதருலெய். ;-)

மிக்குமடாபி தடடனனன நனனநாநா... மாயாவரம் மரட்டவல டகுடகு டிகு டிகு டிங்கு டிங்குகு.

(இந்த செவ்வாய் கிரக கவிதையைப் படித்து பாராட்டறீங்களா மனசுக்குள்லயே, நன்றி நன்றி)

5/22/2005 3:17:10 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


yet another way to achieve the same result. just add this to your style sheet / between the tags

<style>
body, p {
text-align: justify;
}

html>body{
/* only firefox can read this. IE can't */
text-align: left;
}

html>body p{
/* only firefox can read this. IE can't */
text-align: left;
}

5/23/2005 8:08:11 AM      mexicomeat     Email    Home Page


lemme try it again.... lemme use square brackets for HTML tags so that your Quick reply HTML parser doesn't scfew up the post...

yet another way to achieve the same result. just add this to your style sheet / between the [script] tags

[style]
body, p {
text-align: justify;
}

html>body{
/* only firefox can read this. IE can't */
text-align: left;
}

html>body p{
/* only firefox can read this. IE can't */
text-align: left;
}
[/script]



5/23/2005 8:10:45 AM      mexicomeat     Email    Home Page


Kirupa I have sent you a mail regarding the greasemonkey script
5/23/2005 3:49:53 PM      Saravanan     Email    Home Page


ஹாய், மெக்சிகோ மீட், சைல்ட் செலக்டர் பத்தி இத்தனைநாளா தெரியாது. பாடியோட சைல்டா ஆங்கர் டேககியும் சேர்த்தா அருண் வைத்யநாதனோட வலைப்பூ சரியா தெரிஞ்சது. ஏதோ உன் புண்ணியத்தால சைல்ட் செலக்டர் பத்தி தெரிஞ்சுண்டேன். நன்றி.

சரவணன், மின்னஞ்சல் பார்த்தேன். இதோ பதில் அனுப்பறேன்.

5/25/2005 2:26:25 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் கிருபா!! (கொட்டிவாக்கம் கணினி பயிற்சி, பத்ரியின் வலைப்பதிவில் சொம்மென்த் போட முடியவில்லை)
..ஆதி

6/6/2005 10:04:48 AM      aadhi    


க்ருபா,

நிரல் துண்டும் அதை சொல்ல ஒரு கதையும்.. கலக்கீட்டீங்க.

கம்முனு வாத்தியார் வேலைக்கு போயிடுங்க.. உங்ககிட்ட படிக்கற பசங்க உருப்படியாயிடுவாங்க (நெசமாத்தான்...)

6/8/2005 2:05:39 AM      கோபி     Email    Home Page


கொஞ்ச நாளா ஊர்ல இல்லை. அதான் மறுமொழிகள் பாக்க முடியலை.

நன்றி ஆதி, நாளைக்கு போகப்போறோம்.

கோபி பாராட்டுங்கற அளவுல ஓக்கேதான். ஆனா என்கிட்ட படிச்சா பசங்க பி.காம்க்கு மேல தேற மாட்டாங்க. :-))

6/10/2005 1:50:33 AM      S Krupa Shankar     Email    Home Page


தூஈஊதூஉஸ்தூஈஈதூஉதூஈª தூஈ¨தூஈ©தூஉதூஈஎதூஈந தூஈ•தூஉதூஈஊதூஉதூஈªதூஈத.

தூஈக்ஷதூஈ©தூஉதூஈ©தூஈஈதூஉதூஈஈதூஉ தூஈ¨தூஈததூஈ©தூஉ தூஈஷ்தூஈஙுதூஉதூஈ• தூஈகதூஉதூஈ•தூஉதூஈஊதூஈநதூஈªதூஉதூஈŸதூஉ தூஈŸதூஉஹதூஈகதூஉதூஈŸதூஉ தூஈஞுதூஉஹதூஈஉதூஉதூஈஉதூஈஏதூஉஜ். தூஈக்ஷதூஈªதூஉதூஈªதூஉஹ்தூஈ¤தூஉஜ்தூஈ•தூஉதூஈ•தூஉ தூஈŽதூஈ©தூஉ தூஈŽதூஈஒதூஉதூஈ¤தூஉதூஈ¤தூஉதூஈ•தூஈஐதூஉஜ் justify தூஈஞுதூஉஹதூஈஉதூஉதூஈஉதூஉதூஈஈதூஉ தூஈஷ்தூஈ¤தூஉதூஈ¤தூஉக்ஷதூஈஞுதூஈஈதூஈநதூஈஏதூஉதூஈஏதூஉஜ். தூஈஹதூஈ©தூஈததூஈஏதூஉதூஈஈதூஉ தூஈ¤தூஈஈதூஈநதூஈஒதூஉ தூஈஓதூஈஏதூஉஜ்தூஈªதூஉதூஈªதூஈ¤தூஈநதூஈஓதூஈஊதூஉதூஈ•தூஈஐதூஉதூஈ•தூஉதூஈ•தூஉ தூஈஊதூஉஸ்தூஈஈதூஉதூஈª தூஈஷ்தூஈ¤தூஈஓதூஈநதூஈஉதூஈததூஈ• தூஈக்ஷதூஈஊதூஉதூஈ•தூஉதூஈ•தூஉதூஈஈதூஉ.

தூஈ¨தூஈŸதூஉதூஈஓதூஈநதூஈஏதூஉ தூஈ’தூஈஊதூஉ தூஈஓதூஈததூஈஊதூஈஈதூஉ தூஈஓதூஈஏதூஉஜ்தூஈªதூஉதூஈªதூஈ¤தூஈநதூஈஓதூஉதூஈ•தூஈஐதூஉ தூஈªதூஈ•தூஉதூஈ•தூஈஈதூஉ தூஈஓதூஈஊதூஈததூஈஈதூஈஏதூஉ தூஈக்ஷதூஈஊதூஉதூஈ¨தூஉதூஈ¤தூஈ¤தூஈநதூஈஏதூஉ தூஈக்ஷதூஈ¨தூஉதூஈ¤ தூஈªதூஈ¤தூஈநதூஈஓதூஉஜ் தூஈ¤தூஈஓதூஈஎ தூஈஓதூஈநதூஈŸதூஉதூஈŸதூஉ தூஈஓதூஈநதூஈŸதூஉதூஈŸதூஉக்ஷதூஈ©தூஉ.

தூஈக்ஷதூஈ¤தூஈ©தூஉஜ் தூஈஓதூஈஏதூஉஜ்தூஈªதூஉதூஈªதூஈ¤தூஈநதூஈஓதூஉ தூஈஓதூஈநதூஈ•தூஉதூஈ•தூஈநதூஈஉதூஈநதூஈஏதூஉ தூஈஞுதூஉக்ஷதூஈஊதூஉதூஈ¤தூஉதூஈ¤தூஉ தூஈஓதூஈநதூஈŸதூஉதூஈŸதூஉ€தூஈஊதூஉதூஈ•தூஈஐதூஈத?

6/11/2005 8:40:08 PM      நவன் பகவதி     Home Page


க்ருபா... என்னவோ நடக்குது
6/11/2005 8:41:20 PM      62.252.192.17    


The last comment is also by me. Why does it mess up if I type in Unicode from my Linux box.

Anyway, I wanted to say

"Thank you very much for the hack. I have n't tested it yet. But I am sure this will be helpful for Tamil bloggers.

BTW.. have you added this hack to the 'Tamil Bloggers Wiki'?"

6/11/2005 8:46:21 PM      Navan Bhagavathi     Home Page


தூஈŽதூஈ¤தூஉதூஈ•தூஉதூஈ•தூஉதூஈஈதூஉ தூஈக்ஷதூஈ©தூஉதூஈ©தூஉதூஈஈதூஉஸ்தூஈஊதூஉ தூஈஞுதூஉஹ்தூஈ¤தூஈ©தூஉஜ்.. தூஈகதூஈததூஈஊதூஈந தூஈ•தூஉதூஈஊதூஉதூஈªதூஈத.
6/11/2005 8:47:42 PM      நவன் பகவதி    


நவன் பகவதி, சொதப்பலுக்கு மன்னிக்கவும். என் வலைப்பூவை புனரமைக்கும் பணியைப் அரைகுறையாக நிறுத்தியதால் நிறைய ப்ரச்சனைகள். ஒரு மடக்கு கரும்புச்சாறு அதற்கு குடித்துக்கொள்கிறேன்.

இப்போதான் பார்த்தேன், விக்கியில் இன்னும் சேர்க்கவில்லையே!

6/14/2005 4:39:00 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


þÐ§Ä ±ýÉ ÒâÔÐýÉ¡, ¦À¡ñ½ ¯„¡÷ Àñ½ ¿ÁìÌ ºÃ¢Â¡ ¦¾Ã¢Â¡¾ °¼¸õ ÀÂý À¼¡Ð.
6/17/2005 10:50:09 AM      Suresh (¿Ê¸ý)     Email    Home Page


ஹா ஹா ஹா !!!
7/18/2005 4:28:24 PM      செந்தில்     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)