web counter

உதவாக்கரை
தாராசுரம் ( ?????, ???? 25, 2005 )

தஞ்சாவூர்ன்னு ஒரு ஊராம். அதுக்கிட்ட தாராசுரம்னு ஒரு எடம் இருக்காம். அங்க இருக்கற கோவில் தூண்கள், சுவர்கள்ல என்னமோ பொம்ம பொம்மயா இருந்துதாம். க்ருபா அதையெல்லாம் பாத்துண்டே வந்தானாம். கூட இருந்தவங்கள்ளாமும் பாத்துண்டே வந்தாங்களாம். 'என்னத்த அதிசயமா இப்படிப் பார்க்கறாங்க?'னு யோசனையோட க்ருபாவும் எல்லாத்தையும் பாத்தானாம்.

அப்பறம் சிற்பம் செதுக்கி இருக்காங்கன்னு க்ருபாகிட்ட எல்லாரும் சொன்னாங்களாம். ஆனா க்ருபாக்கு அந்த சிற்பிகளோட உழைப்பு புரியலையாம். எல்லாத்தையும் என்னமோ ஃபோட்டோ கேலரி மாதிரி பாத்துண்டே போனானாம். எல்லாம் சின்னச்சின்னதா அழகா இருந்துச்சாம். ஆனா அதை செதுக்கறது எல்லாம் எவ்வளவு நுணுக்கமா பண்னனும்னு க்ருபாவுக்கு உறைக்கவே இல்லையாம்.

பார்வதி ரொம்ப கோபத்தோட இருக்கும் போது சிவன் வந்து முகவாய்க்கட்டையைப் புடிச்சு சமாதானப் படுத்தறாராம். 'என் செல்லம்... என் சமத்து'ன்னு கொஞ்சிக் கொஞ்சி. அதை அப்படியே தத்ரூபமா ஒரு சிற்பி செதுக்கி இருந்தாராம் தூண்ல.




ஒரே ஒரு தூண்ல இருக்கற, அதுவும் இத்துணூண்டு எடத்துல இவ்வளவு தெளிவா ஒரு விஷயத்தை சொல்ல முடியுமான்னு க்ருபாக்கு ப்ரமிப்பா இருந்துதாம்.

ஆனா தன்னோட புகைப்படக்கருவில எடுத்தது அவ்வளவு தெளிவா இல்லையே, எப்படி வலைப்பூவுக்குப் போடறதுன்னு ரொம்ப வருத்தப்பட்டானாம்.



10 dharma adigal

அடடா...எவ்ளோ பெரீஇய்ய்..ய்ய்..ய உலா போய் வந்து இவ்ளோ சின்னதா பதிவு போடுறீங்களே? உங்களுக்கெ நியாயமாப் படுதா?
7/25/2005 7:49:52 PM      Shreya    


ஷ்ரேயா, அது பவித்ர மின்ன எழுதினதுதான். பொ.செ./வரலாறு குழுல நாங்க எல்லாரும் போன சனிக்கிழமை/ஞாயித்திக்கிழமை மாமல்லபுரம் போய்ட்டு வந்தோம்.
7/26/2005 1:36:50 AM      S Krupa Shankar     Email    Home Page


வந்துட்டங்கப்பா..வந்துட்டாங்க..அங்க போஒனோம் இங்க போனோம் அந்த சிற்பம் பாத்தோம் இந்தக் கல்வெட்டுப் பாத்தோம் என்று வயித்தெரிச்சலைக் கிளப்புறதுக்கு வந்துட்டாங்க!!
7/26/2005 1:58:34 AM      Shreya    


வந்துட்டங்கப்பா..வந்துட்டாங்க..அங்க போஒனோம் இங்க போனோம் அந்த சிற்பம் பாத்தோம் இந்தக் கல்வெட்டுப் பாத்தோம் என்று வயித்தெரிச்சலைக் கிளப்புறதுக்கு வந்துட்டாங்க!!
7/26/2005 1:59:06 AM      Shreya    


நீங்க இந்த பாழா போற பெட்டிய மாத்துறவரைக்கும் இனிமெ கமெண்ட் போட போறதில்லெ. கண்ணாலம் எப்போன்னு கேட்டதுக்கு பதில காணுமே?

சனிகிழமை மாமல்லபுரம் பூட்டு வந்ததுக்கும் தாராசுரத்துக்கும் என்னாங்அ சம்பண்தம்?

8/3/2005 4:06:30 AM      Uma    


ஒரு சம்பந்தமும் இல்லை உமா. சும்மா, "ஷ்ரேயா"வோட காதுல இருந்து பொகை வரர்தைப் பார்க்கணுமே, அதான்.

கல்யாணம் நிச்சயதார்த்தம் முடிஞ்சதும்தான். அனேகமா அடுத்த வர்ஷம் ஃபிப்ரவரி மாசம். செப்டம்பர்-லதான் உறுதியா தெரியும்.

டாட்.நெட்-க்கு முழுசா மாத்திண்டு இருக்கேன், அப்படியே கமெண்ட் பெட்டியையும் மாத்திடறேன். சரியா...?

8/3/2005 5:41:40 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


"பொ.செ./வரலாறு குழுல நாங்க எல்லாரும் போன "
இந்த பொ.ச.வ.கு. பற்றி எங்கேயோ எப்பவோ படிச்சேனே; மறந்து போச்சு. இப்ப நான் அதுக்கு எங்கே போகணும்.
ஆமா,நீங்க அந்த ரொநிங் டெஅம் ஆளா?

8/3/2005 6:47:57 AM      தருமி     Email    Home Page


இப்பவும் அது பத்திரமாதான் இருக்கு. நீங்க அதுக்குப் போகணும்னா, யாஹூ க்ரூப்ஸ்க்குப் போகணும்.
ஆமாம், நான்(னும்) அந்த ரோவிங் டீம் ஆட்களில் ஒருவன்.

8/3/2005 7:29:31 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


http://groups.yahoo.com/group/ponniyinselvan
8/3/2005 7:30:11 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


//சும்மா, "ஷ்ரேயா"வோட காதுல இருந்து பொகை...//

நல்லாவே புகை வந்திச்சு அண்ணாச்சீ!!!

மறக்காம திருமண அழைப்பிதழ் அனுப்பிடுங்க!

8/16/2005 2:11:48 AM      Shreya    


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)