web counter

உதவாக்கரை
டிஜிட்டல் சூரியன் ( ?????, ???? 29, 2005 )

புதுசா ஒரு டிஜிட்டல் கேமிரா வாங்கினேன். அப்படியே ஒரு படமும் எடுத்தேன். அந்தப் படத்தை இங்கே போட்டு நாலு வார்த்தை போடாட்டி என் ஜென்மம் சாபல்யம் அடையுமா? அடையாது. அதான் அப்படி ஒரு தலைப்பு வெச்சு இப்படி ஒரு எண்ட்ரி.என் புதிய டிஜிட்டல் கேமிராவில் கண்ட ஒரு பழைய சூரியன்
ஆழ்வார்ப்பேட்டை தேசிகாச்சாரித்தெரு பச்சை மரமொன்றினூடாகத் தெரியும் வெள்ளிக்காசாம் வெள்ளைச் சூரியனைப் பார்மின், பார்மின்!


இப்பதிவினை உங்களுக்கு வழங்குவோர்,
கரும்புக்கரை ஃபோட்டோ ஸ்டூடியோஸ்

வர்த்தகதாரர் விளம்பரம்:
இவ்விடம் தங்கள் இல்லத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களுக்கும் மற்றும் அனைத்து சுபகாரியங்களுக்கும் இலவசமாக புகைப்படம் எடுத்துத் தரப்படும். புகைப்பிடிப்பவர் வீட்டில் யாரும் இல்லாவிட்டாலும் புகைப்படம் எடுக்கப்படும், புகை மூட்டமாக இருந்தாலும் புகைப்படம் எடுக்கப்படும். நிழற்படம்தான் சரியான சொல் என்றபோதும் புகைப்படம் எடுத்துத் தரப்படும்.

இங்ஙனம்,
ஆன்சல் ஆடம்ஸ்...மன்னிக்கவும்
சு. க்ருபா ஷங்கர்10 dharma adigal

இடது பக்கத்தில் ஒரு "சிலுஎத்" இருந்திருந்தால் சூப்பராக இருக்கும்.
9/9/2005 3:46:40 AM      ரவியா    


சில்ஹௌட்டா? ம்ம்ம்ம்ம்! நல்ல ஐடியா. மறுபடியும் ட்ரை பண்ணறேன்.

மெத்யானம் எடுத்தேன். பாண்டிச்சேரில நீங்க ஆங்கிள்லாம் பாத்து ஃபோட்டோ எடுத்தப்பவே நெனச்சேன், ப்ரொஃபஷனலா யோசிப்பீங்கன்னு.

அடிக்கடி இது போன்று சொல்லித் தரவும். :-)

9/17/2005 12:48:35 PM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


க்ருபா

முதல் பட்மே பிரபஞ்ச விளக்கா

இனி நல்லகாலம் தான்

நம்ம பிரண்ட் காகனார் காகா ன்னு கூப்பிட்டு
காத்ஹ்டிருக்கிறாரு நான் வர்ற வரைக்கும்

ஜன்னல் வழியா நான் வைப்பதையும் தல சாய்ச்சி அவங்க சாப்பிடறதையும் படமா எடுத்துப் போடுங்க
க்ருபா10/9/2005 11:58:56 PM      மதுமிதா    


நல்லா இருக்கே நீங்க சொல்லற காட்சி! நானும் வாங்கின நாள்ல இருந்து முயற்சிக்கறேஎன், ஒரு காக்காவைக் கூட எடுக்கவே முடியலை. :-( காக்கா சாப்புடும்போது சொல்லுங்க, வந்து எடுக்கறேன்.
10/12/2005 6:13:41 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


//முதல் பட்மே பிரபஞ்ச விளக்கா//

க்ருபா,

மின்சார கம்பிகளை தவிர்த்திருக்கலாம். ஒருவேளை "சூரியனுக்கே பவர் கொடுப்பவர்கள் தமிழ்நாடு மின்சாரவாரியம்" என்று சொல்ல வருகிறீர்களோ?

மற்றபடி உங்களின் போட்டோவில் நடிகர் சூரியா சாயல் கொஞ்சம் தெரிகிறது ;-)

10/16/2005 11:57:11 PM      நல்லடியார்     Email    Home Page


it is bad idea taking sunlight at noon time. it will spoil the lense unless you use some filter for your camera. more detail .. speak to your prof. friends ( you know whome i am talking about ;) )11/3/2005 2:51:40 AM      krupashanker     Email   


Not just spoiling alone... you wont get clear " Sunlight" Picture. over exposure and other problems would occure. for more details visit sites like www.photo.net but be careful while you use it at home.
11/3/2005 2:55:18 AM      friend of krupashanker     Email   


நல்லடியார், நீங்கள் சொன்னதும்தான் புரிந்தது கம்பி கபடா எல்லாம் எவ்வளவு இடைஞ்சலாக இருக்கும் புகைப்படத்தில் என்று. நன்றி, இனிமேல் இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்வேன்.

உங்கள் பின்னூட்டத்தின் கடைசி வரியை அப்படியே ஃப்ரேம் போட்டு மாட்டிவைத்து என் ஜாதகத்துடன் இணைத்துப் பெண் தேடலாம் என்று இருகிறேன். ;-)

11/8/2005 7:18:14 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


க்ருபாஷங்கரின் நண்பரே, 'ப்ரொஃப் ஃப்ரெண்ட்ஸ்' யார்ன்னு நெஜம்ம்ம்ம்ம புரியவே இல்லை. ஆனா இனிமேல் கண்டிப்பா மெத்யானத்துல ஃபோட்டோவே எடுக்கமாட்டேன், நீங்க சொன்னதால. ஒன்னே ஒன்னு கண்ணேகண்ணுனு ஒரு காமிராதான் இருக்கு. :-)

ஃபோட்டோ.நெட் தளம் பார்த்தேன், அதுல டுடோரியல் பகுதி ரொம்ப நல்லா இருக்கே!

11/8/2005 7:20:58 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


எனக்கு ப்ரொஃபஷனலா எதுவும் சொல்ல தெரியாது..

ஆனா.. நீ எடுத்த புகைப்படம் உண்மையா ரசிக்கும்படி இருக்கு..

ப்ரமாதம்..

4/7/2006 2:42:49 AM      Anitha     Email   


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)