web counter

உதவாக்கரை
USBஜிமெய்ல் ட்ரைவ் (எ) நிகழ்நிலைப் பிணையம் ( ?னி, ??????ரி 11, 2006 )

இந்த கலியுகத்திலே, கடவுள் கம்ப்யூட்டரா நின்னு பக்தாளுக்கு காட்சி தரான். இருந்தாலும் என்ன ப்ரயோஜனம். மனிஷ ஜென்மாக்கு த்ருப்திங்கறதே இல்லே. மெமரிய அதிகமாக்குங்கறா, ஹார்ட் டிஸ்க் கெப்பாசிட்டிய ஏத்துங்கறா. ஃப்ளாட் மானிட்டர் குடுங்கறா. யாரும் பகவானப் ப்ரார்த்தனப் பண்ணிண்டு ஆஃபிஸ் வொர்க் நன்னா முடிஞ்சதுன்னு த்ருப்திப் பட்டுக்கறது இல்லவே இல்ல.

கோப்புல ஜீவனம் மரணம், கோடிங்க்டா கோடிங்க்டா!
நம்ம பார்டிஷன் பாத்தியோ, அட அட அமர்க்களம்டா!

இப்படிப்பட்ட மனிஷா எல்லாம் பூலோகத்துல வாழ்ந்துண்ட்ருக்கர்ச்சே, தேவாள் GmailFS கண்டுபுடிச்ச கதயக் கேளுங்கோ...

அதாகப்பட்டது... ஆங்... ஜிமெய்ல் ஜிமெய்ல்ன்னு... ஆங்.. அடேய், சொல்லும் போது டிஸ்டர்ப் பண்ணப்டாது. ச்சமத்தாக் கேட்டுக்கணும்...சரீ...

அதாகப்பட்டது, ஜிமெய்ல் ஜிமெய்ல்னு ஒரு சர்வீசை இண்ட்ரொட்யூஸ் பண்ணினா கூக்ள்காரா. சும்மாவாப் பண்ணினா... நெறய ஃபெசிலிடியோட தந்தா.

ஒன்னில்லே ரெண்டில்லே
ஓராயிரம் ஃபெசிலிட்டி
அதனாலே வந்ததப்பா
யாஹூக்கே ட்ராஜிட்டி

ஆச்சா... எடமாது எடம்.. ரெண்டு ஜி.பி. எடம் குடுத்து... ஆங்... எந்த ப்ரோக்ராம்ல இருந்தும் மெய்ல் ஆக்ஸஸ் பண்ணிக்கலாம்னு சொன்னான் நம்ப ஜிமெய்ல் புள்ளாண்டான். எப்படி...எப்படியா...

ப்ரௌசர் வேண்டாம், ட்ரௌசர் வேண்டாம்
ஔட்லுக்கு போதுமே
வூட்டாண்டயோ ரூட்மேலயோ
பாஸ்வேர்டு செல்லுமே

ஒஹோ.. அப்படியா? அதுனால என்ன லாபம்?

தப்பா நெனச்சுக்காதேடா. நம்ப க்ருபாவோட வலைப்பதிவுல வரதோல்லியோ. அதான் பாகவதத்துல கூட பட்டணத்து பாஷை சேந்துடுத்து. சரி, சொல்றேன் கேளு. இப்படி எங்கேர்ந்து வேணும்னாலும், ஆங்...எப்படி வேணும்னாலும்..ஆங்க்... மெய்ல் பாக்கலாம்கறதாலே...ம்ம்ம்... ப்ரௌசரே இல்லாட்டிக் கூட மின்னஞ்சல் படிக்கலாம். யாஹூவும் ரெடிஃபும் அவாத்துக்கு வந்துதான் மெய்ல் பார்க்கணும்னு கண்டிஷன் போட்டுண்ட்ருந்தா. ஜிமெய்ல் என்ன சொன்னான் தெரியுமோ? நம்மாத்துல உன் சாமானெல்லாம் இருந்தா, அது உங்காத்து சாமான்னு பெருந்தன்மையா சொன்னான். சொல்றது மட்டுமா? எந்த ப்ரோக்ராம்ல இருந்தும் மெய்ல ஆக்ஸஸ் பண்ணவும் வசதியும் பண்ணிக் குடுத்தான்.

அடடா... நல்ல மனிஷனா இருக்கானே.

இல்லயா பின்னே. இங்கதான் GmailFS கதை ஆரம்பிக்கறது. இப்படி எடமும் வளமும் சேர்ந்த ஜிமெய்ல, C ட்ரைவாவும் D ட்ரைவாவும் பயன்படுத்திக்க வழி கண்டுபுடிச்சார் ஒரு ஷ்ரேஷ்டோத்தமர். பேரு ரிச்சர்ட் ஜோன்ஸ்.

என்ன சொல்றேள்? அந்த மாமாவும் ஒரு மெய்ல் க்ளைண்ட் எழுதினாளா?

இல்லேடா இல்லே. இவர் பண்ணின ஐடியாவே வேற. தன் கொழந்த இல்லேன்னாலும் ராமபிரானை கைகேயிப்ராட்டி வளர்த்தாளே, அதே மாதிரி நம்ப filesஐயும் ஜிமெய்ல்ல போட்டு வெச்சுடலாம். வேணுங்கறப்போ C driveலேர்ந்து Gmail Driveக்கும் Gmail Driveலேர்ந்து C Driveக்கும் மாத்திக்கலாம். D ட்ரைவ்க்கும் மாத்திக்கலாம்.

நன்னாருக்கே இந்த ஐடியா? ஆனா கைகேயி மாதிரி கூக்ளும் பின்னாடி நம்பகிட்ட ஏதாணும் வரம் கேக்குமோ?

ரொம்பப் பேசப்டாது. அதெல்லாம் பகவான் ஆக்ஞை. இன்னிக்கு இருக்கறவா நாளைக்கு இல்லே. அததுகள் சாமர்த்தியத்தால பொழச்சுக்கறது, அன்னன்னிக் காரியத்தப் பாத்துக்கறது. ஓப்பன்சோர்சையும் உப்புமாவையும் சந்தேகப்பட்டவா, படறவா, படப்போறவா நரகத்துக்குத்தான் போவா படவா.

சும்மா தெரிஞ்சுக்கக் கேட்டேன். யாஹூல கூட இதே மாதிரி சூட்கேஸ் குடுக்கறாளே?

எலக்ஷன் டயத்துல ஏதாவது மந்திரி காதுல விழுந்துத் தொலையப்போறதுடா அசடு அசடு. அது சூட்கேஸ் இல்லே, ப்ரீஃப்கேஸ். ஆனா அதுக்குள்ள லாகின் பண்ணனும், டௌன்லோட் பண்ணனும், அப்லோட் பண்ணனும். லோகத்துல மனிஷாள் இருக்கற பரபரப்புல ரெண்டு வா காப்பி சாப்பிடக்கூட நேரமில்ல. இப்போ போய் அதெல்லாம் பண்ண யாருக்குப் பொறுமை இருக்கு? Gmail Drive இருந்துதுன்னா ஒரு ஃபைல அப்படியே காப்பி, பேஸ்ட் பண்ணிடலாம். நம்பளோட பகவான் மாதிரி கம்ப்யூட்டரோடவே C, D ட்ரைவோட வ்யாபிச்சுருக்கும் Gmail Drive. My Computerலேர்ந்தே பார்க்கலாம்.இன்னும் கேளு. Gmail Driveவோட புகழைப் பாடாத பாரதம் இல்லே. Gmail Drive ட்ரைவ் இல்லாத எடமே இல்லேன்னு ஆக்கிக்கலாமாம். இதைத்தான் குரான்லயும் பாடிவெச்சா:

நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை

கஷ்டம் கஷ்டம். பாகவதத்தோட நெறுத்திக்கப்டாதா? அது குரான் இல்லை. சினிமாப்பாட்டு.

விடுடா. லோகமே அட்ஜெஸ்ட்மெண்ட்லதான் வாழறது. கண்டுக்காதே. இன்னும் கேளு. நாம நாலு ஸிஸ்டம்ல புழங்கறவாளா இருந்தா இந்த ஜிமெய்ல் ட்ரைவ் வராது வந்த மாmoney. USB drive, CD/VCD எல்லாம் இனிமேல் வேண்டவே வேண்டாம். இந்த ஸிஸ்டம்ல இருக்கறதை ஜிமெய்ல் ட்ரைவ்ல பேஸ்ட் பண்ணிட்டா, அடுத்த சிஸ்டம்ல போய் அங்க இருக்கற ஜிமெய்ல் ட்ரைவ்ல எடுத்துக்கலாம். ஆத்து கம்ப்யூட்டர்ல போயும் ஆஃபீஸ் வேலையைப் பாத்துக்கலாம்.

அசின் படமெல்லாம் இனிமேல் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்கறது ஈசியா இருக்கும் போலருக்கே...?

அபிஷ்டு அபிஷ்டு. புத்தி போறது பாரு. private virtual networkனு சொல்றாளே, இனிமேல் ஜிமெய்ல் ட்ரைவை வெச்சுண்டே வெர்ச்சுவலா நெட்வொர்க் பரிபாளிக்கலாம். பைசா செலவில்லே. கம்பனி ப்ராஞ்சுக்கெல்லாம் ஜிமெய்ல் பாஸ்வேர்டைக் குடுத்துட்டா போதும். அவா அவா அங்கேர்ந்தே ஒரே ஜிமெய்ல் அக்கவுண்ட்ல இருக்கற filesஐ உபயோகிச்சுப்பா.ஒரு pop3/smtp அக்கௌண்ட் freeயா கடச்சா என்னன்னெல்லாம் பண்ண முடியறது பாரு. அவ்வளவு ஏன், வெறும் ftp கணக்கு வெச்சுண்டே கூட இத மாதிரி இன்னும் பெருசா பண்ணலாம். யாராணும் இப்படியாப்பட்ட virtual network serviceஐ இன்னும் பெரிய அளவுல குடுத்தா அவாளுக்கு சகல ஐஷ்வர்யமும், பௌருஷமும் வ்ருத்தியாகும். லோகமும் க்ஷேமமா இருக்கும்.

சரி. காலட்சேபம் முடிஞ்சுடுத்தா? சுண்டல் தாங்கோ.

சுண்டல் எல்லாம் கடயாது. சுட்டி வேணும்னா தரேன். இந்தா:

விண்டோஸ்: http://www.viksoe.dk/code/gmail.htm
லினக்ஸ்: http://richard.jones.name/google-hacks/gmail-filesystem/gmail-filesystem.html

பதிவுக்கு எடம் குடுத்த க்ருபாக்கு மங்களம்
பதிவைப் பொறுமையாப் படிச்சவாளுக்கு மங்களம்
பின்னூட்டம் இட்ட பெரியவாக்கு மங்களம்
'போர்'ன்னு ஓடிப்போன மனிஷாளுக்கும் மங்களம்

இந்த GmailFS கதய கேட்டவாளும், இதப்பத்தி சொல்றவாளும் எழுதறவாளும் நீடூழி வாழ்ந்து வம்ச வ்ருத்தியோட, சகல சம்பத்தோட வாழ்வாங்கு வாழ நித்ய சுப மங்..க...ளம்ம்ம்ம்ம்...ம்ம்ம்....25 dharma adigal

சரி ஞானும் எப்படி க்மைல் ட்ரிவெ கிரியேட் செய்வது அதையும் விவரமா சொல்ரது.
2/11/2006 6:03:19 AM      என்னார்     Email    Home Page


நல்ல காலசேபம்.
//இன்னிக்கு இருக்கறவா நாளைக்கு இல்லே. அததுகள் சாமர்த்தியத்தால பொழச்சுக்கறது, அன்னன்னிக் காரியத்தப் பாத்துக்கறது. ஓப்பன்சோர்சையும் உப்புமாவையும் சந்தேகப்பட்டவா, படறவா, படப்போறவா நரகத்துக்குத்தான் போவா படவா.//
படாம இருக்க முடியலியே :( எல்லா தரவுகளையும் க்மைல்ட்ரிவெஇல் போட்டுவிட்டு, நாளையே சொந்தக்காரன் வீட்டையே காலிப் பண்ணச் சொன்னால் அம்பேல்தான்.

2/11/2006 6:14:54 AM      மணியன்     Email    Home Page


வாங்க என்னார். மேல இருக்கற சுட்டிக்குப் போய்ப் பார்த்தா, கீழ 'டௌன்லோட்' ஆப்ஷன் ஒன்னு இருக்கும். அதுல இருக்கறது ஒரு ஜிப் ஃபைல். அதை அன்-ஜிப் பண்ணினினதும் செட்டப்.ஈஎக்ஸ்.ஈ-ன்னு ஒரு ஃபைல் வரும். அதை டபுள் க்ளிக் பண்ணிட்டா அவ்வளவுதான். ஜிமெய்ல் ட்ரைவ் உங்க கணிப்பொறில வந்துருக்கும்.

அப்பறம் அதை க்ளிக் பண்ணினா லாகின், பாஸ்வேர்ட் கேக்கும். குடுத்துட்டா அவ்வளவுதான், முடிஞ்சது எல்லாம்.

2/11/2006 6:14:58 AM      S Krupa Shankar     Email    Home Page


மணியன், கூக்ளை நம்பித்தானே நிறைய வலைப்பதிவும் இருக்கு... அப்படியும் கூக்ள் ஏமாத்திட்டா கவலைப்படக்கூடாது. அந்த சிச்சுவேஷன்லதான் கோபிகாஜீவனஸ்மரனம்-னு சொல்லிட்டு அடுத்ததா வர நாமகரணத்தைச் சொல்லணும்.
2/11/2006 6:24:18 AM      S Krupa Shankar     Email    Home Page


அட சூப்பர் தகவல் தலை. தான்க்ஸு
2/11/2006 6:47:18 AM      Suresh     Email    Home Page


அன்பு நண்பரே,
தங்களின் அருமையான தகவலுக்கு நன்றி.
அழகாக வேலை செய்கிறது.

2/11/2006 8:24:18 AM      ஞானவெட்டியான்     Email    Home Page


Hஎல்லொ,

ஸ்ரீஅன் நெ ஹவெ மொரெ தன் ஒனெ Gமைல் Dரிவெச், fஒர் எக்ஷம்ப்லெ ஒனெ fஒர் ஒffஇசிஅல் அண்ட் ஒனெ fஒர் பெர்சொனல்?

2/11/2006 8:36:11 AM      Abiramam    


Hello,

Can we have more than one Gmail Drive, for example one for official and one for personal?

2/11/2006 8:37:22 AM      Abiramam    


க்மைல் மக்களின் பெர்சொனல் டடவை சேகரிப்பதாக பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. இப்பொழுது அதன் fரே டோல்ச் எல்லாவற்றின் மூலமாகவும் அது அந்த வேலையை செய்வதாக கூறப்படுகிறது எனவே இந்த விருடுஅல் ட்ரிவெவும் அதை செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம், உஷார் மக்களே உஷார்.
2/11/2006 9:47:26 AM      சந்தோஷ்     Home Page


உங்களிடம் எரி நரி இருந்தால் நறுக்கென்று ஒரு குட்டியூண்டு 42 கிலோ எக்ஸ்டென்ஷணை அடிச்சா வேலை முடிஞ்சுடும்.

டப்பாக்குளே தனியா நிரல் எதையும் செலுத்த வேண்டாம்.

உரல்:

ஹ்ட்ட்ப்://ரெலெஅசெச்.மொழில்ல.ஒர்க்/புப்/மொழில்ல.ஒர்க்/எக்ஷ்டென்சிஒன்ச்/க்மைல்_ச்பசெ/க்மைல்_ச்பசெ-0.2-fக்ஷ்.க்ஷ்பி

எஸ்.கே

2/11/2006 10:55:49 AM      eS.kE     Email    Home Page


Here it is:

http://releases.mozilla.org/pub/mozilla.org/extensions/gmail_space/gmail_space-0.2-fx.xpi

2/11/2006 10:56:36 AM      eS.kE     Email    Home Page


அபிராமம், விண்டோஸ் இயக்கச் சூழலில் தற்போதைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெய்ல் ட்ரைவ் வைத்துக்கொள்ள சாத்தியம் இல்லை. ஆனால் லினக்ஸ் ஜிமெய்ல் ட்ரைவ் ஆர்க்கிடெக்சரின் அடிப்படையில் எத்தனை ட்ரைவ்கள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

சந்தோஷ், இந்த டூல் அஃபீஷியலானது இல்லை. ஜிமெய்ல் ஏ.பி.ஐக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு தேர்ட்பார்ட்டி டூல்.

எஸ்.கே., ஃபைர்ஃபாக்ஸ் ப்ளக்கின் பற்றிய தகவலுக்கு நன்றி. ஆனால் இது மீண்டும் பதிவிறக்கம், பதிவேற்றச் சுழலில் கொண்டுபோய் விட்டுவிடும். ஒரு ட்ரைவாக இருப்பதனால் பல சாதகங்கள் கிடைக்கின்றன.

சுரேஷ், ஞானவெட்டியான்... படித்தமைக்கும் பயன்படுத்தியமைக்கும் நன்றி. :-)

2/11/2006 11:46:05 AM      S Krupa Shankar     Email    Home Page


ஆனால் இது மீண்டும் பதிவிறக்கம், பதிவேற்றச் சுழலில் கொண்டுபோய் விட்டுவிடும். ஒரு ட்ரைவாக இருப்பதனால் பல சாதகங்கள் கிடைக்கின்றன.

======================

பதிவிறக்கம் செய்யத்தான் வேBடும், நீங்கள் பரிந்துரைக்கும் நிரலை பாவித்தாலும். பொதிகள் உங்கள் வந்தகத்திலேயே தங்காது. கூகிள் தளத்துக்கு எப்படியும் செல்லத்தான் வேண்டும்.

இன்னொரு டிரைவாக ஒரு தோற்றம் கொடுத்து, Fத்P செய்வதுபோல் பல்லாங்உழி விளையாட முடிந்தாலும் சரக்கு கூகிளூருக்கு பொY உட்காரணுமில்ல?

என்ன நான் சொல்லறது?

எஸ்.கே

2/11/2006 12:18:41 PM      eS.kE     Home Page


தூஈக்ஷதூஈ¤தூஉஹதூஈ©தூஉதூஈ©தூஈŸதூஈத தூஈக்ஷதூஈ¤தூஉ "தூஈஙுதூஉதூஈஸதூஈஞூதூஈ© தூஈ©தூஈஈதூஉதூஈ•தூஉதூஈஞூதூஈ©"-தூஈ©தூஉதூஈ©தூஉ தூஈஓதூஈஊதூஈ¤தூஉ - தூஈ¤தூஈஙுதூஉதூஈ•தூஈஏதூஉ€தூஈஃதூஉதூஈஏ தூஈஸதூஈŸதூஈநதூஈஞுதூஉதூஈஞுதூஈத!
தூஈ¨தூஈஈதூஈ•தூஉதூஈ•தூஉ தூஈ•தூஉ€தூஈஈதூஉக்ஷதூஈ©தூஉ தூஈ¤தூஈததூஈ©தூஉ தூஈஏதூஈததூஈஉதூஈ•தூஉதூஈ•தூஉ.

"தூஈஓதூஈ¨தூஉதூஈ¤தூஈ•தூஈ¤தூஉதூஈ¤தூஈநதூஈஏதூஉக்ஷதூஈஉதூஉக்ஷ" = தூஈஓதூஈ©தூஉ தூஈ¤தூஈ•தூஈŸதூஉதூஈŸதூஈநதூஈஏதூஉக்ஷதூஈஉதூஉக்ஷ

தூஈŽதூஈகதூஉ.தூஈ•தூஉக்ஷ

2/11/2006 12:32:23 PM      எஸ்.கே     Home Page


த்ஹன்க்ச் fஒர் தெ இன்fஒ.
2/11/2006 1:22:13 PM      Chandrasekaran Krishnan     Email    Home Page


யதயகரஸர–ரஆரக்ஷ் யநரணரஜ்யி யகயிர•ர€யா.

2/11/2006 1:29:46 PM      Chandrasekaran Krishnan     Email    Home Page


கிருபா,
ஜிமெயில் டிரைவ் நல்ல வசதிதான். ஆனால் 10MB-க்கு மேலான ஒரு கோப்பை அதில் சேமிக்க இயலாது என்று கேள்விப்பட்டேன்.

2/11/2006 1:58:24 PM      muthu     Email    Home Page


காலட்ஷெபம் சுபெர் க்ருப.......!
2/13/2006 6:52:08 AM      R.Vijay     Home Page


எஸ்.கே, கூக்ள்க்குப் அனுப்புவது விஷயமே இல்லை. ட்ரைவாகப் பயன்படுத்த முடிவதுதான் மேட்டரே. இதை ஒரு ப்ளூ ப்ரிண்ட்டாக மட்டும் எடுத்துக்கொண்டு பெரிய அளவில் இது மாதிரி வெர்ச்சுவல் ட்ரைவ் வழங்கும் சேவை யாராவது கொடுத்தால் எவ்வளவு நன்றாக, பயனுள்ளதாக இருக்கும்!

சந்த்ரசேகரன், விஜை நன்றி.

முத்து, 10MB உச்சவரம்பு இருக்குதான். ஆனா அதுக்கு மேல எல்லாம் தேவைப்படாதுன்னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான். பாப்போம், இன்னும் அதிகமாக்காமலா போய்டுவாங்க.

2/13/2006 12:52:27 PM      S Krupa Shankar     Email    Home Page


சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிருப்பா.. தங்கிஸ்...
2/16/2006 11:13:30 PM      எஸ்.பாலபாரதி     Email    Home Page


அட! க்ருப பஷபப்பானு நினஷென், அடெயப்ப, ஒரு முக்கியமான விஷயத்தை உபன்னியசமா செய்து அசத்திடானெ! எல்லம் கல்யான மாலை செய்கிண்ட்ர வெலை! 16ம் பெட்ரு பெருவாழ்வு வாழ்டப்பா குழண்தெ!

ஷ்ய்லஜபாட்டி!

2/24/2006 6:39:47 PM      shylaja     Email   


ஊப்ஸ்! தப்பா முதல்ல டைப் பண்ணிட்டேனே! திருத்தமுடன் மறுபடி..
அட! க்ருபாவை பச்ச பாப்பான்னு நினச்சேன், ஒரு முக்கியமான விஷயத்தை உபந்நியாசமாய் செய்து அசத்திட்டாஅனே! எல்லாம் கல்யாண மாலை செய்கின்ற வேலையோ?:) 16ம் பெற்று பெரு வாழ்வு வாழுடாப்பா குழந்தே!

ஷைலஜாபாட்டி!

2/24/2006 6:44:26 PM      shylaja     Email   


ஆமாங்க ஆமாம். கல்யாண மாலை செய்கின்ற வேலைதான். நெகடிவ் மோட்டிவேஷன். ;-)
2/28/2006 9:43:23 AM      S Krupa Shankar     Email    Home Page


சோப்பர்...
4/6/2006 3:48:48 AM      Anitha     Email   


எழுத்து பிழை.. மன்னிக்கவும்.. சூப்பர்னு சொல்ல வந்தேன்..
4/6/2006 3:51:06 AM      Anitha     Email   


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)