web counter

உதவாக்கரை
திரு. உமர் மரணம் ( வியா??, ???? 13, 2006 )


இன்று வலைப்பதிவாளர் மத்தியில் ப்ரபலமாக இருக்கும் எழுத்துருக்களில் 'தேனி'யும் ஒன்று. 95% தமிழ் வலைப்பதிவுகளில் பயன்படுத்தப்படுவது இதுதான் என்றே சொல்லலாம். இதர எழுத்துருக்கனின்றும் இது மேம்பட்ட வேறுபாடுள்ளது என்பதின் பின் அதில் அடைங்கியிருக்கும் உழைப்பினையும் அடைந்து கொள்ளலாம்.

இந்த எழுத்துருவை உருவாக்கியவர் திரு. உமர்.

செய்தியோடைகள் தமிழுலகுக்கு பரவிக்கொண்டிருந்த புதிதில், செய்தியோடை இவரின் அறிமுகக்கட்டுரைத்தொடர் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கூடவே ஒரு எளிமையான RSS generator மென்பொருளையும் இலவசமாக கொடுத்திருந்தார்.

முதன்முதலில் எந்த ஒரு மென்பொருளையும் கணினியில் நிறுவிக்கொள்ளாமல் இணையத்தில் இருந்தபடியே தமிழில் தட்டச்சடிக்க ஒரு வலைப்பக்க மென்பொருள் உருவாக்கியவரும் இவரே. சொற்பிழைத்திருத்தி ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.

'அன்புடன் உமர்' என்ற கையெழுத்து தாங்கி வரும் மின்னஞ்சல்களும், வலைக்குழும மடல்களும் நிச்சயம் ஏதோ ஒரு புதிய மென்பொருளுக்கான அறிமுகத்துக்காகவோ அல்லது ஐயப்பாட்டுக்கான தீர்வை உள்ளடக்கியோதான் இருக்கும். எதிர்ப்பார்ப்பைப் பொய்க்காது. கிட்டத்திட்ட நான்கு வருடங்களுக்கு முன்னாலிருந்தே இணையத்தமிழ் அகராதி முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அவர் உருவாக்கிய சில மென்பொருட்கள்:



விட்டுப்போனவை இன்னும் எத்தனையோ.

அந்த உமர் இன்று நம்மிடையே இல்லை. நேற்று மாலை அவரின் சொந்த ஊரான அதிராம்பட்டனத்தில் இறைவனடி சேர்ந்ததாக மரத்தடி மடலொன்றின் வாயிலாக அறிகிறேன்.

உண்மையிலேயே தமிழ்கணினி உலகுக்கு இவரின் மரணம் ஒரு பெரும் இழப்பு.

தொடர்ந்து ஆறு மாதங்கள் sign in பண்ணப்படாத கணக்குகள் brinksterல் இருந்து அழிக்கப்பட்டுவிடும். உமர் brinksterல் தமிழுக்காக அர்ப்பணித்துள்ள செயலிகளும் அதோடு அழிந்துவிடும். csd_one@yahoo.com மின்னஞ்சலுக்கு யார் அஞ்சலிட்டாலும் இனிமேல் பதில் வராது. என் கவலை அழியப்போகும் செயலிகள் மட்டும் அல்ல... உயிர் நீத்த உமரும் தான். மிகவும் கவலையாக இருக்கிறது.

க்ருபா



5 dharma adigal

தேனி எழுத்துரு உருவாக்கியவர் அவர்தான் என்பது எனக்கு இப்போதுதான் தெரியும். பலகாலம் பலர் பயனுறும் விதத்தில் சிறந்த சேவையைச் செய்திருக்கிறார். என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
7/13/2006 3:45:50 AM      நடராஜன் ஸ்ரீனிவாசன்     Home Page


//தொடர்ந்து ஆறு மாதங்கள் சிக்ன் இன் பண்ணப்படாத கணக்குகள் ப்ரின்க்ச்டெர்ல் இருந்து அழிக்கப்பட்டுவிடும். உமர் ப்ரின்க்ச்டெர்ல் தமிழுக்காக அர்ப்பணித்துள்ள செயலிகளும் அதோடு அழிந்துவிடும். ச்ச்ட்_ஒனெ@யஹோ.சொம் மின்னஞ்சலுக்கு யார் அஞ்சலிட்டாலும் இனிமேல் பதில் வராது. என் கவலை அழியப்போகும் செயலிகள் மட்டும் அல்ல... உயிர் நீத்த உமரும் தான். மிகவும் கவலையாக இருக்கிறது//

க்ருபா சார்,

உமர் தம்பி அவர்களின் மகனுடன் இன்னும் சில நாட்களில் தொடர்பு கொள்வேன். புலிக்கு பிறந்தது பூனையாகது என்பது மாதிரி அவரின் மகனும் கணினியில் வல்லுனர்தான். முக்கியமான இந்த விசயத்தை உமர்தம்பி அவர்களின் மகனிடம் சொல்லி, உமரின் சேவைகள் தொடர என்னால் முடிந்த வரையில் முன்வருவேன்.

7/13/2006 8:13:15 AM      அதிரைக்காரன்     Email    Home Page


//தொடர்ந்து ஆறு மாதங்கள் சிக்ன் இன் பண்ணப்படாத கணக்குகள் ப்ரின்க்ச்டெர்ல் இருந்து அழிக்கப்பட்டுவிடும். உமர் ப்ரின்க்ச்டெர்ல் தமிழுக்காக அர்ப்பணித்துள்ள செயலிகளும் அதோடு அழிந்துவிடும். ச்ச்ட்_ஒனெ@யஹோ.சொம் மின்னஞ்சலுக்கு யார் அஞ்சலிட்டாலும் இனிமேல் பதில் வராது. என் கவலை அழியப்போகும் செயலிகள் மட்டும் அல்ல... உயிர் நீத்த உமரும் தான். மிகவும் கவலையாக இருக்கிறது.//

கவலையை விடுங்க அவருடைய சேவை அவர் மகன் மூலம் தொடரும்....(இறைவன் நாடினால்.)

7/19/2006 4:13:12 PM      அதிரையார்    


அன்புள்ள அதிரைக்காரன் மற்றும் அதிரையார்,

உமரின் மகன் தொடர்ந்து இதுபோன்ற சேவையில் ஈடுபட்டால் மட்டற்ற மகிழ்ச்சிதான்.

நான் கவலைப்படுவது இன்னொரு காரணத்துக்காக. மகிழ்ச்சி, கொண்டாட்டங்களுடன் இருந்த ஒரு அரண்மனை வீடு குடும்ப உறுப்பினர்களை இழந்தால் சில ஆண்டுகள் கழித்து கேட்பாரற்று கிடக்கும்போது ஒரு உணர்வு தோன்றுமே... அது போன்று. உமரின் மின்னஞ்சலுக்கு யாரும் பதில் அனுப்பலாம், ஆனால் பதில் சொல்ல உமர் நம்மிடையே இல்லை. ப்ரின்க்ச்டெர் கணக்கு இன்னும் சிறிது நாட்களில் அழிந்துவிடும். உமருடன் அதுவும் முடிந்து விடும். அந்த மாதிரி...

7/20/2006 5:32:42 AM      Í. ìÕÀ¡ „í¸÷     Email    Home Page


உமர் எனும் மனிதரை இன்று தான் அறிந்தாலும், அவரின் அனேக படைப்புக்களை பயன்படுத்தியவன் என்றமுறையில் அவருக்கு என் அஞ்சலிகள்.

அவரின் சேவைகள் என்றும் வாழும்!!!

7/31/2006 4:27:11 AM      nimal     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)