web counter

உதவாக்கரை
ஆவணி விட்டம் 2006 ( ?????, ???? 28, 2006 )

ஆவணி அவிட்டமும் பிள்ளையார் சதுர்த்தியும் இந்த ஆண்டு ஒரே நாளில் வந்துவிட்டதால், வரலாற்றிலேயே முதல் முறையாக, நடுநிசி 5:30 மணிக்கே எழுந்திருக்கும்படி ஆகிவிட்டது (தீபாவளி என்றால் 4 மணிக்கே எழுந்திருப்பது இந்த கணக்கில் சேராது). 6:00 மணிக்கே பூனல் மாற்றிக்கொள்ளப் புறப்பட்டுவிட்டேன். சீக்கரம் வந்து கொழக்கட்ட சாப்படணுமே!

இந்த ஆண்டும் வளசரவாக்கம் பத்மநாப சாஸ்திரிகளிடம்தான் நான், என் தம்பி, சித்தப்பா, பெரியப்பா, பெரியப்பா மகன்கள் எல்லொரும் சென்றோம். வளசரவாக்கம் காமகோடி பக்த ஜன சபையில்தான் பூஜை புனஸ்காரங்கள் நடந்தன.

வழக்கம் போலவே சிலர் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தனர். மொத்தம் கிட்டத்திட்ட 75 நபர்கள் இருக்கும்.

என்னிடம் இரண்டு எருக்கம் இலைகள் இருந்தன. தேவரிஷி தர்ப்பணத்திற்கு இரண்டு எருக்கம் இலைகளே போதும்தான். ஆனால் பித்ரு தர்ப்பணம் பண்ணுவதற்கு மூன்றாவதாக ஒரு எருக்கம் இலையும் வேண்டும். பின் வரிசையில் இருப்பவர் பித்ரு தர்ப்பணம் பண்ணாததால் அவரது இலையை எனக்குத் தந்துவிட்டார். அடுத்த ஆண்டில் இருந்தாவது மறக்காமல் மூன்று இலைகளை முதலிலேயே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இதுவரை செய்த தவறுகளை நினைவு கூர்ந்து பாவங்களை விலக்கக் கேட்டுக்கொண்ட பிறகு, யக்ஞோபவீதம் ஆரம்பித்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டம் நடக்கும் இடத்தில் வேடிக்கைகளில் குறைவே இருக்காது. அதிலும் இந்த யக்ஞோபவீதத்தின் போதுதான் இன்னும் நகைச்சுவையாக இருக்கும். சுற்றிமுடிந்து வைத்திருக்கும் பூனூலைப் பிரிக்கும் போது ஆங்காங்கே சில பேரிடம் இருக்கும் பூனூல் மட்டும் சிக்கலாகிச் சொதப்பிவிடும். அவசர அவசரமாக சிக்கலை எடுக்க முனையும் போது இன்னமும் சிக்கிக்கொள்ளும். பிறகு சிக்கல் விலகிப் பிரித்தெடுக்கும் பொழுது பிரித்தவர் முகத்தில் ஒரு ஆனந்தம் தெரியுமே, அடா அடா அடா! என்னமோ வாழ்க்கையில் இனிமேல் எந்த ப்ரச்சனை வந்தாலும் தீர்த்துவிடலாம் போலத் தோன்றுவார்கள்.

இந்த ஆண்டு (இதுவும் வரலாற்றிலேயே முதல் முறையாக!!!) எனக்கு இரண்டு பூனல். என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரே ஒரு பூனுல் மட்டும் போட்டுக்கொள்ளும் என் தம்பியைப் பார்த்து ஒரு முறை நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டே (மனசுக்குள்ளதான்) இரண்டாவது பூனூலைப் போட்டுக்கொண்டேன். விரைவில் இவனுக்கும் இரண்டு பூனூல் போட்டுக்கொள்ளும் நிலை வரட்டும், திருமணமாகி!

கிராமங்களில் என்றால், ரிஷிகளுக்குப் பிண்டங்கள் வைத்து வெகு விமரிசையாக ஆவணி அவிட்டம் நடக்குமாம். சாம வேத ஆவணி அவிட்டத்தை சென்னைப் பட்டணத்தில் இரண்டு மணி நேரத்தில் முடித்து விடுகிறார்கள் அவசரம் அவசரமாக. இருந்தாலும் இந்த ஆண்டு ஆவணி அவிட்டம் முன்பெல்லாவற்றையும் விட த்ருப்திகரமாகவே இருந்தது.

இனிய சாமவேத ஆவணி அவிட்ட நல்வாழ்த்துகள்!



8 dharma adigal

//அதிலும் இந்த யக்ஞோபவீதத்தின் போதுதான் இன்னும் நகைச்சுவையாக இருக்கும். சுற்றிமுடிந்து வைத்திருக்கும் பூனூலைப் பிரிக்கும் போது ஆங்காங்கே சில பேரிடம் இருக்கும் பூனூல் மட்டும் சிக்கலாகிச் சொதப்பிவிடும். அவசர அவசரமாக சிக்கலை எடுக்க முனையும் போது இன்னமும் சிக்கிக்கொள்ளும். பிறகு சிக்கல் விலகிப் பிரித்தெடுக்கும் பொழுது பிரித்தவர் முகத்தில் ஒரு ஆனந்தம் தெரியுமே, அடா அடா அடா! என்னமோ வாழ்க்கையில் இனிமேல் எந்த ப்ரச்சனை வந்தாலும் தீர்த்துவிடலாம் போலத் தோன்றுவார்கள்.//

:)))))

8/28/2006 8:53:48 AM      seemavhu    


:-) மிஸ்ஸிங் :-(
8/28/2006 1:40:36 PM      பிரபு ராஜதுரை     Email    Home Page


நேத்து பொதிகையில் வந்தது நீங்கதானா?
9/1/2006 10:48:58 AM      வலைஞன்    


கிருபா சங்கர், நலமா? உங்கள் தமிழ் வலைப்பதிவுக்கு வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள். நானும் ஒன்று ஆரம்பித்திருக்கிறேன். ஹ்ட்ட்ப்://செந்திலபி.நொர்ட்ப்ரெச்ச்.சொம்/ போய் பாருங்கள். பின்னூட்டம் இடுங்கள்.
9/10/2006 7:09:31 AM      செ.ச.செந்தில்நாதன்     Email    Home Page


நன்றை இருக்கிரது.
த்ஹொடர வாழ்துக்கள்..
நன்றி

10/15/2006 8:08:13 AM      Anniyan     Email    Home Page


யுவரஜ்
12/8/2006 8:30:44 AM      203.199.214.70    




செண்ட் மெ சொமெதிங் அபொஉட் ஹிட்லெர் இன் டமில் (ந்ஹெஅதெர் ஹெ இச் அ fஐலுரெ ஒர் சுச்செச்செட் ஒனெ?)--

இ டிட் நொட் ரெஅட் யொஉர் பகெச்...பெசௌசெ இ ஹவெ நொ மொனெய் டொ ரெஅட் இட்(னெட் ஷர்கெச்...)

சொர்ர்ய் fஒர் தட்...

ஹவெ அ ப்ரவெ ஹெஅர்ட்,
யுவரஜ் ச்

12/8/2006 8:34:26 AM      yuvaraj     Email    Home Page


எவெர்ய் திங் இச் ஒக்... Bஉட் சன் உ ச்டடெ தெ ரெஅசொன் fஒர் நெஅரிங் இட்.(போனொஉல்).
ஈf சொ ந்ஹட் இச் தெ உசெ ஒf இட்.
இச் இட் கொஇங் டொ டொ அன்ய் ஷங்எ இன் சொசிஅல் ச்டடுச் ஒf சொ சல்லெட் லொந் சச்டெ பெஒப்லெ.
த்ஹிச் ஷொந்ச் யொஉர் தின்கிங் சல்லெட் டொ பெ "பார்பனிஅம்".

12/29/2006 11:20:39 AM      saravana     Email   


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)