web counter

உதவாக்கரை
புத்தகக் கண்காட்சி: புது வரவுகள் மற்றும் முழு விலைப்பட்டியல் ( ???ளி, ƒ??ரி 12, 2007 )


நுழைவாயில் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. சாலையில் இருந்து அனுமதிச்சீட்டு வாங்கும் இடம் வரைக்குமே ஒரு அரை கிலோமீட்டர் இருக்கும் போல. இந்த முறை(யும்) விற்பனையில் தள்ளுபடி எதுவும் கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு, நூல்கள் இருக்கும் இடத்திலேயே இல்லாமல் தனி வளாகத்தில் உணவகம் இருக்கிறது. மூன்று பிரிவுகளாகப் வகைப்படுத்தப்பட்டு படைப்புகள் அணிவகுத்திருக்கின்றன.

1) உணவு
2) நொறுக்குத்தீனி
3) சூப்/ஐஸ்க்ரீம்/அடுமணை (பிஸ்கட், bread, cake போன்றவை)

புதுவரவுகள்
ஜிகர்தண்டா: இந்த ஆண்டு புது வரவு என்று பார்த்தால் ஜிகர்த்தண்டாவும் மிகவும் முக்கியமானது. இந்த புத்தகக் கண்காட்சியில்தான் சென்னைக்கே அறிமுகமாகி இருக்கிறது. ரூ. 25 மற்றும் ரூ. 35 என்று இரண்டு அளவு வகைகளில் கிடைக்கிறது. இதன் சுவையைப் பற்றி ஒரு குத்துமதிப்பாக அறிய வேண்டுமென்றால், பாதாம் பாலில் கொஞ்சம் சேமியா கலந்து ஐஸ்க்ரீம் டாப்பிங் இருக்கும் ஒரு பதார்த்தத்தை கற்பனை செய்துகொள்ளவேண்டியதுதான்.

அருணா சூப்: விரும்பி உண்டு உள்ளம் கிளைத்து சுகபோகத்தில் சென்ற ஆண்டு திளைக்கச்செய்த மூலிகை சூப் இந்த ஆண்டு இல்லை. தென்சென்னையில் பரவலாகப் பரவியிருக்கும் 'அருணா சூப்'தான் இந்த ஆண்டு சபையினரின் சூப் தேவையை நிறைவேற்றி வைக்கும். 10 ரூபாய்க்கு விற்கப்படும் அருணா சூப், புத்தகக் கண்காட்சியில் வைத்திருப்பதால் கொம்பு முளைத்து 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வாழைத்தண்டு, காளான், தக்காளி சூப்கள் அதே 10 ரூபாய் சூப் சுவையுடன் இருக்கின்றன. இது தவிர காய்கறி சூப் இருக்கிறது, இன்னும் புத்தகக் கண்காட்சியில் குடித்துப்பார்க்கவில்லை. ஞாயிறும் செல்வதாக இருக்கிறேன், அப்பொழுது இதையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வேன்.

மசாலா சோடா: தயவுசெய்து என்னை உங்கள் சகோதரனாக நினைத்துக்கொண்டு நான் சொல்வதைக் கேளுங்கள். யாரும் தப்பித்தவறிக்கூட இதை வாங்கி விடாதீர்கள். சாதாரண உப்பு எலுமிச்சை சோடாவில் ஜலானி ஜில்ஜிரா பொடியைத் தூவி ஒரு கலக்கு கலக்கித் தருகிறார்கள். ஹாஜ்மோலா மாதிரி இருக்கிறது, 12 ரூபாய் கொடுத்து வாங்கியிருந்ததால் வேறு வழி இல்லாமல் முழுதும் குடித்துமுடித்தேன் ('எலும்பிச்சம்பழம் ஒடம்புக்கு நல்லதாக்கும்!'). சோடாவுக்கென்று தனி ஸ்டால் வைத்திருந்தாலும் எலுமிச்சை சோடாவைத் தவிர இதரவை ஒன்றும் சொல்லிக்கொள்வது போல் இல்லை.

நூடுல்ஸ் & கோபி மஞ்சூரியன்: மொத்தமாக அரைமணி நேரத்திற்கு மேல் செலவழிக்க முடியாததால், நூடுல்சையும் கோபி மஞ்சூரியனையும் சுவைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் சென்ற ஆண்டு இவை இரண்டும் இருந்ததாக நினைவில் இல்லை. எனவே இவை இரண்டுமே? புது வரவு.

முழு விலை விவரப் பட்டியல்


 1. பாப்கார்ன்: ரூ. 10 (விலை ரொம்ப அதிகம். திரையரங்குகளில் கூட இவ்வளவு ரூபாய் கிடையாது.)
 2. இட்லி: ரூ. 10 (இரண்டு)
 3. சமோசா: ரூ. 10 (இரண்டு)
 4. போண்டா: ரூ. 10 (இரண்டு)
 5. தக்காளிசாதம்: ரூ. 20
 6. தயிர் சாதம்: ரூ. 20
 7. சாம்பார் சாதம்: ரூ. 20
 8. மினி மீல்ஸ்: ரூ. 25
 9. நூடுல்ஸ்: ரூ. 25
 10. கோபி மஞ்சூரியன்: ரூ. 15
 11. பனீர் பட்டர் மசாலா: ரூ. 20
 12. மட்டர் பனீர் மசாலா: ரூ. 20
 13. பிரியாணி: ரூ. 25
 14. ஆரஞ்சு பழரசம்: ரூ. 8
 15. ஆப்பிள் பழரசம்: ரூ. 10
 16. சூப்: ரூ. 12 (அனைத்து வகை சூப்களுக்கும் ஒரே விலை!)
 17. சோடா: ரூ. 12 (உப்பு மசாலா சோடா, இனிப்பு மசாலா சோடா, உப்பு எலுமிச்சை சோடா, இனிப்பு லெமன் சோடா)உணவகம் வெளியில் இருப்பதால், உணவகத்துக்குள் நுழைய அனுமதிச்சீட்டு வாங்கத்தேவையில்லை.1 dharma adigal

Dஎஇ எதெல்லம் ரொம்ப ஒவெர் மகனெ, எண்த மடிரி எங்அல டமில் படிக வஷ, பதிஷ கொஞ நஞம் டமிலும் மரண்துடும் போல இர்ருகெ
7/18/2007 9:50:27 AM      Desikan     Email    Home Page


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)