web counter

உதவாக்கரை
கிருபா in... கஜினி ( ?னி, ?짼??? 6, 2007 )

கஷ்டப்பட்டு உழைக்கறதை விட, இஷ்டப்பட்டு உழைச்சா 'கப்' கிடைக்கும்...



சனிக்கிழமையாகப்பட்ட இன்று, தன் முயற்சியில் சற்று(மனம் தளர்ந்தாலு)ம் மனம் தளராத விக்ரமாதித்தன் க்ருபா தொடர்ந்து நான்காவது முறையாக பழகுநர் உரிமம் வாங்க கே.கே. நகர் RTO officeஐச் சென்றடைந்தான்.

கஜினி, விக்கிரமாதித்தன் எல்லாம் சும்மா வெத்த்துவேட்டுதான். இது வரை மூன்று முறை LLR வாங்கியும் லைசென்ஸ் வாங்க முடியவில்லை. ஏதாவது ஒரு தடை. தொடர்கதையின் அடுத்த அத்தியாயமாக இன்று மீண்டும் LLR எனப்படும் பழகுநர் உரிமம் வாங்கப் படையெடுத்தேன்.

இந்த முறை எல்லாமே கணிணி மயமாக்கப்பட்டுள்ளது, தேர்வு எழுதுவது உட்பட. Sun certification, brainbench கணக்காக ஒரே அமர்க்களமாகத்தான் இருக்கிறது சென்ற பிள்ளையார்ச்சதுர்த்தியில் இருந்து. தேர்வு எழுதவருபவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்குவது, தேர்வு முடிவுகளை உடனடியாகத் தெரிந்துகொள்வது போன்றவற்றிற்கு admin module என்பதில் தொடங்கி மிகவும் சுலபமாக தேர்வு எழுதும் முகப்பு வரை எல்லாம ப்ரமாதமாகத்தான் இருக்கிறது.

ஆனால் முன்பு தாளில் எழுதிய தேர்வை விட கணிணியில் எழுதி முடிக்க நேரம் நிரம்ப எடுக்கிறது. கணிப்பொறிகளின் எண்ணிக்கையால் தேர்வு எழுத வருபவர்களின் எண்ணிக்கைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

எல்லாமே விண்டோஸ் XP நிறுவப்பட்டுள்ள கணிணிகள். சம்பந்தப்பட்ட மென்பொருள் .NETஆ இல்லை ஜாவாவில் செய்ததா என்று சரிவர கணிக்க முடியவில்லை... exam fear :-)) வி??வல் பேசிக்காக இருந்திருக்க முடியாது. அந்த அப்ளிகே?னின் தலைப்பு டப்பாடப்பாவாகத் தெரிந்தது. யூனிகோடுதான் பயன்படுத்தி இருப்பார்கள் போல, குறிப்பிட்ட எழுத்துரு அந்த கணிணியில் இல்லாமல் போயிருக்கலாம்.

முன்பெல்லாம் 10 கேள்விகளில் மூன்றோ நான்கோ சரியாக விடையளித்திருந்தாலே போதும், இப்பொழுது 10க்கு 6 சரியாக இருக்கவேண்டுமாம். இந்த மென்பொருளில் ஒரு நல்ல வி?யம் என்னவென்றால், ஒவ்வொரு கேள்விக்கும் விடையளித்து முடித்ததும் சரியான விடையையும் அதுவே காண்பித்து விடுகிறது, பச்சை நிறத்தில். நாம் அளித்த விடை தவறென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்?ன் சிகப்பு நிறத்தில் மாறி சரியான விடை பச்சை நிறத்தில் ஹைலைட் ஆகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் விடை அளிக்க 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.

ஒருவாறாக 'இதெல்லாம் என்ன ஜுஜுபி மேட்டர்' என்று நினைத்துக்கொண்டு மூன்றாம் எண் இருக்கையில் அமர்ந்து தேர்வை எழுத ஆரம்பித்தேன். இந்த சின்னம் எதற்கு? இப்படி இருந்தால் என்ன செய்யவேண்டும்? பாதசாரிகள் வாகனங்கள் வரும் வளைவு ஒற்றையடிப் பாதையில் ஏன் கடக்கக்கூடாது? சரியான விடை அளித்து வந்துகொண்டிருந்தேன். அப்புறம் ஒரு கேள்வி... வாகனப் புகைக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்? 2 வருடம் என்று கொடுத்தேன். ஆறு மாதம்தான் சரியான விடையாம். அப்புறம் இன்னும் ஒரு கேள்வி, படத்துடன் வந்தது. அதிலும் காலி. இப்படியாக அடுத்த கேள்விக்கு விடை அளித்ததும் திடீரென்று ஒரு செய்திப்பெட்டி: Failed to update SARATHI table. அடக்கடவுளே, முதலில் இருந்து மீண்டும் எழுத ஆரம்பிக்க வேண்டுமா!!! என்று அதிர்ச்சியுடன் OK பட்டனை அழுத்தினேனா... பிறகுதான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அத்துடன் வேதாளம் மீண்டும் முருங்க மரம்... ச்சீ, அத்துடன் அந்த அப்ளிகே?ன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டு எனக்கும் டாட்டா சொல்லி விட்டது. அருகில் இருந்தவரிடம் (பணியாளர் போன்று இருந்தார்) வி?யத்தைச் சொன்னால், "அதெல்லாம் கவலைப்படாதீங்க, ஆறு சரியா இருந்தாப்போதும்" என்றார். ஆஹா, நான் எழுதினதே ஆறுதானே. தேர்வு நடத்துபவரிடம் வி?யத்தைச் சொன்னேன். அவர் மென்பொருளில் நான் passஆ ஃபெய்ல் என்று பார்த்து விட்டு என் விண்ணப்பத்தில் ஃபெய்ல் என்று எழுதி கையெழுத்தும் போட்டுக்கொடுத்து அனுப்பி விட்டார்.

இந்த மென்பொருளை வடிவமைத்து எழுதிய நிரலாளர்கள் வாழ்க. டெஸ்டிங் டீம் வாழ்க. இனிமேல் நான் என்ன செய்வேன். வெறும் வாயுடன் இருந்த மனைவிக்கு அவல் கிடங்கே கிடைத்துவிட்டதே!!! நல்லவேளை, பிறக்க இன்னும் நான்கு மாதங்கள் ஆகும் என்பதால் என் குழந்தையிடம் அவமானப்பட வேண்டியதில்லை. பிறப்பதற்குள், அடுத்த சனிக்கிழமை மீண்டும் படைதிரட்டிக்கொண்டு போய்விட வேண்டும்.

நான் இளங்நிலைப் பொறியியலில் 'கப்' வாங்கவில்லை (ஏனென்றால் இளங்நிலைப் பொறியியலே படிக்கவில்லை. ஹி ஹி ஹி). வெற்றிகரமாக LLR தேர்வில் 'கப்' வாங்கும் ஆசை நிறைவேறியது.



9 dharma adigal

ஹாஹாஹா...

செம காமெடி.

10/6/2007 4:41:37 AM      காத்து வாயன்     Email   


என்ன திடீர் விஜயம்..? ஏதும் முன்னோட்டமா..? எனிவே.. வருக.. வருக..

என் கதையையும் போடணும்னு நினைச்சு மறந்து போயிருந்தேன். ஞாபகப்படுத்திட்டீங்க.. நன்றி..

10/6/2007 4:51:27 AM      ¯ñ¨Áò¾Á¢Æý     Email    Home Page



காத்து வாயன், நல்ல பேரு. :-)

உண்மைத் தமிழன், அப்போ நீங்களும் சமீபத்துலதான் லைசன்ஸ் வாங்கினீங்களா? மத்தபடி நாந்தான் அடிக்கடி வர்ஷம் ரெண்டு மூணு பதிவு போட்டுண்டுதானே இருக்கேன். :-) இல்லாட்டி ப்ரின்க்ஸ்டர் அக்கௌண்ட் க்ளோஸ் பண்ணிடுவாங்க.

10/6/2007 5:00:36 AM      சு. க்ருபா ஷங்கர்     Email    Home Page


ஹ்க்fஹ்க்fஹ்க்fஹ்ஜ்ல்க்ஹ்ல்க்ஜ்
10/9/2007 9:48:11 AM      kjlkjl;kjhlkjh;l     Email    Home Page


ஹி க்ருப,

ரொம்ப நல்ல இருக்கு. வலர்ந்து வரும் எழ்ஹுதலருக்கு வழ்ஹ்துக்கல்.

ஸுப்ஜெச்ட்: எழவெடுத்த டி.வி சேனல்களும் இளிச்சவாய்த் தமிழனும்...
தொ:

தமிழை வளக்குறதுலயும், தமிழ்ச் சேவை செய்யறதுலயும் செயற்க்கைக் கோள் தொ(ல்)லைக் காட்சிகளோட பங்கு ரொம்ப... நான் நீன்னு போட்டி போட்டு ஒவ்வொரு சேனலும் கொடுக்குத ஒவ்வொரு நிகழ்ச்சியும் தமிழனோட அறிவு, ஆற்றல், இன்னு மத்த எல்லாத்தயும் என்னமா வளக்காங்க....

இந்த நிகழ்ச்சிகள்ல முதலிடம் சன் டிவில வர்ற திருவாளர் திருமதி. இதப் பத்தி ஏற்கனவே பாமரன் குமுதத்துல கிழிச்சிருந்தாலும் என் பங்குக்கு அதோட பெருமைகள சொல்ல வேண்டாமா.... இந்த நிகழ்ச்சி வர்ற மூதேவிங்க எல்லாம் உண்மையான் புருசன் பொண்டாட்டி தானா? கொஞ்சம் கூட மானம், வெக்கம், சூடு சொரனை இதெல்லாம் இந்த நிகழ்ச்சிய நடத்துற பொம்பளைக்கோ, இல்ல அதுல கலந்த்துக்கிடுத கழிசடைங்களுக்கோ இல்ல.

திருவாளரும் திருமதியும் சினிமாப் பாட்டுக்கு கையயும் காலயும் கெக்கே பெக்கேனு ஆட்டிட்டு திரு திருன்னு முழிக்கது கண் கொள்ளாக் காட்சி. புருசனுக்கு பொம்பள வேசமும், பொண்டாட்டிக்கு ஆண் வேசமும் போட்டு அதுங்க அடிக்குத கூத்து நாராசம். தொகுப்பாளினியோ அதுக்கும் மேல போய், முதல்ல சந்திச்சதுல இருந்து முதலிரவு வரைக்கும் துருவித் துருவிக் கேக்குத அழகென்ன... வடிவேலு காமெடிய விட இந்த நிகழ்ச்சி பயங்கர காமெடி...

அடுத்தால மானங்கெட்ட சின்னத்திரை மூதேவிகள் ஆடுற நிகழ்ச்சி. ஒரே நிகழ்ச்சிய வேற வேற பேர்கள்ல மானாட மயிலாட, கோலாட குயிலாடன்னு புத்திசாலித்தனமா ஒம்போது சேனல்கள்ல காட்றானுக. அதுல வர்ற சிம்பு, உயிர் சங்கீதா, சிம்ரன், நமீதா எல்லாம் பன்னுத அலம்பல்.... ஏதோ சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மாதிரி இந்தக் கழிசடைங்க நெனச்சுகிட்டு ஆடுத ஆட்டம்... வேல வெட்டி இல்லாம இருக்குத சிம்பு, சங்கீதாவோட திமிருக்கு அளவே இல்ல. இதுங்க பேசினாலே சப்புன்னு நாலு அப்பு அப்பனும் போல வெறி வருது....

சன் டிவி, விஜய் டிவிய காப்பியடிச்சு, கலைஞர் டிவி சன் டிவியக் காப்பியடிச்சு கொடுக்குத இந்த பயனுள்ள நிகழ்ச்சிகள பாத்து பொழுத போக்கதுக்கு தமிழனுக்கு 24 மணி நேரம் பத்தாது.

24 மணி நேர இசைச் சேனல் மூலமா கலாச்சார சீர்கேடே நடந்துகிட்டு இருக்கு. மிருகக்காச்சி சாலயில இருந்து தப்பி வந்து பிச்சக்கார வேசம் போட்டுட்டுப் போனா தான் இந்தச் சேனல்ல தொகுப்பாளாராக முடியும்னு நெனக்கேன். எல்லா வேலயயும் விட்டுட்டு சில தறுதலைங்க தொலைபேசில கூப்பிடறதும் அதுக்கு இந்த குரங்குகள் இளிச்சிகிட்டு பேசுறதும்......

ஜெயா டிவில எப்போ பாத்தாலும் திமுக, திரு. மு.க பத்தின நியூஸ் தான் ஒடிட்டு இருக்கு. மீதமுள்ள நேரங்கள்ல குஷ்பு தன் சொளவு முதுக காட்டிட்டு, பெரிய குவிஸ் மாஸ்டர் மாதிரி நடத்துத நிகழ்ச்சி ஓடுது. குஷ்புவோட முதுகயும், கிழிஞ்ச ஜாக்கட்டயும் பாக்கதுக்கே ஒரு கூட்டம் அலயுது...

மக்கள் டிவி, டி.டி, இமயம் டிவி இதுல கொஞ்சம் நல்ல நிகழ்ச்சிகள் வந்தாலும் பாக்குறவங்க ரொம்பக் குறைவு. இருக்குத இம்சை போதாதுன்னு இன்னும் புதுசா ஒரு டசன் சேனல்கள் தமிழனோட வாழ்க்கையில விளக்கேத்த வரப்போகுது... கலைஞர் டிவியோட 24 மணி நேர செய்தி மற்றும் இசைச் சேனல்கள், வசந்த் அண்ட் கோவின் வசந்த் சேனல், ஜெயா பிளஸ், பெயரிடப்படாத ராஜ் டிவியின் ரெண்டு சேன்ல்கள்னு வரப்போகுது....

வாரத்துக்கு ஒரு தடவ ஒலியும் ஒளியும், ஒரு சினிமா பாத்து ரசிச்ச அந்தக் காலம் பொற்காலம் தான்...


11/1/2007 3:23:28 AM      SARAVANAN     Email   


தலைவா, சனிக்கிழமை படை எடுக்கிறதை விட பெட்டர் ஐடியா ஒண்ணு இருக்கு.. பேசாம அந்தச் சாரதி யாருன்னு கண்டு பிடிங்க... சீக்கிரமா முடிச்சலாம்.. ;-)

நீங்க இன்னும் இந்திய லைசன்ஸே எடுக்கலியா!? ஹி ஹி..

11/1/2007 4:15:51 PM      ்பூர்ணா     Email    Home Page


அட அப்பாவா ஆகப் போறியா? பலே... வாழ்த்துக்கள்
11/2/2007 1:21:34 AM      prakash     Email    Home Page


ஹி க்ருப திச் இச் மில்டொன், பெட்டெர் லுச்க் நெக்ஷ்ட் டிமெ
1/29/2008 2:09:53 AM      king     Email    Home Page


ஹை
2/11/2008 11:06:54 PM      puppydoggi    


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)