உலகின் எந்த மூலையில் இருப்பவர்களுடனும் இலவசமாக (காலிங் கார்ட் எல்லாம் எதுவும் இல்லாமல்) பேச ஜாக்ஸ்டர். உங்களைப்பற்றி வலைப்பதிந்து, அதனை உங்கள் வாசகர்ளின் செல்லிடப்பேசியில் அறிவிக்க, ட்விட்டர்.
இப்பொழுதைக்கு தாங்கள் ஒரு வலைப்பதிவை இட்டதும், தத்தமது ட்விட்டர் பக்கத்தில் அதை இற்றைப் படுத்த மட்டுமே ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர். வேறு நிறைய விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் என்று எனக்குத் தோனுறுகிறது:
1) ERP, CRM சார்ந்த மென்பொருள்
2) கணக்கியல் மென்பொருட்கள்
3) வங்கி இருப்பு விவரங்கள்
4) சுருக்கமான வலைப்பதிவுகள்
மற்றும் நிறைய... அனைத்து அப்டேட்டும் இலவசமாக பயனர்களுக்குச் சென்றடைய இது மிகவும் உதவும்.
நடக்கவிருக்கும் தமிழ் வலைப்பதிவர்ப்பட்டறைக்கு இதைப் பயன்படுத்தி, சுவாரஸ்யமான நிகழ்வுகளை உடனுக்குடன் உலகெங்கிலுமுள்ள வலைப்பதிவு ஆர்வலர்களின் செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைக்கலாம் என்று தோன்றுகிறது ( http://twitter.com/tamilblogger ).
ட்விட்டர் வலைத்தளம்: http://twitter.com/
என்னுடைய ட்விட்டர்: http://twitter.com/tamil
நிறைய ட்விட்டருக்கான plugin wordpressக்கு கிடைக்கிறது. இதை நிறுவியபின், வாசகர்கள் feedகளைக்கூடப் பயன்படுத்தத் தேவையில்லை, அவர்களுடைய செல்லிடப்பேசியைத் தேடி உங்களுடைய அப்டேட் செல்லும். என் வலைப்பதிவின் அடுத்த versionஇல் twitterஐ இணைக்கலாம் என்று இருக்கிறேன் (என்னமோ ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பத்தி ஆறு வாசகர்கள் நான் வலைப்பதியக் காத்திருப்பது போல...?)
ஜாக்ஸ்டரில் ஒரு கணக்கு துவங்கியதும், நம்முடைய தொலைபேசி எண்ணுக்கு உலகெங்கிலும் உள்ளவர் யார் அழைத்தாலும், அழைப்பவருக்கு உள்ளூர்க்கட்டணம் மட்டுமே ஆகும். மேலும், கணிணி உதவி எல்லாம் தேவையில்லை. நேரடியாகத் தொலைபேசியில் இருந்தே அழைக்கலாம். என்னை யாராவது இப்படி அழைக்க விரும்பினால்:
http://www.jaxtr.com/shankarkrupa
அங்கே சென்று, call me free என்ற பொத்தானை அழுத்தவும். இது ஒரே ஒரு முறைதான். பிறகு உங்களது தொலைபேசிக்கென்று ஒரு எண் தரப்படும். அந்த எண்ணைக் கொண்டு என்னை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம் (வந்து... ஒரு சின்ன விளம்பரம்).

0 Comments