செருப்புப் பூனை சொல்றதைக் கேளுங்க!
"ஆங்கில வலைப்பதிவாளர்களெல்லாம் ஆண்டுக்கு இரண்டு முறையாவது சென்னையில் சந்திக்கிறார்கள்." என்றும் "நாம் வருடத்தில் ஒரு முறையாவது தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடத்தினால் என்ன" என்றும் நாமக்கல் ராƒ¡ ஒரு கேள்வி எழுப்பி உள்ளார். (http://valaippoo.yarl.net/archives/001035.html)
ஒரு வெப் டெக்னாலƒ¢Šட் (மனத்துக்கண்), ஓர் இலக்கியவாதி (இருக்கார், இல்லை), ஓர் எழுத்தாளர் (சிப்பி), ஒரு முŠதஃபா, முŠதஃபா (Chronicle நடத்துபவர்), ஓர் அரசியல்வாதி (வந்து... சும்மா விமர்சகர்), தமிழில் எண்ணும் ஒருவர், ஓர் உளவியல் வல்லுநர் (முத்தானவர்) என்று பல ரூபத்தில் இருக்கும் சென்னை வலைப்பதிவாளர்களும் சந்தித்துக் கொண்டு இருக்கிறோமே (சிலர்/பலர் விட்டுப் போய், தனித்து, அடிக்கடி).
என்ன ஒன்றே ஒன்று என்றால், அலைகளில் பதிப்பவரும் மற்றும் வலையரசி ஒருவரும் மட்டும் கண்ணில் படுவதே இல்லை எந்த சந்திப்பிலும். அவ்வளவுதான். என்னைப் பார்த்து அஞ்சும் அவர்களிருவரைத் தவிர எல்லோரும் சந்தித்துக் கொள்கிறோம்/கொள்கிறார்கள் அடிக்கடி!
மேலும் புதிதாக வலைப்பதிவில் இணைந்திருக்கும் ஓர் ஓவியர் மிச்சம் உள்ளார். அவருக்கு என்னைப் பார்த்து எல்லாம் பயம் இருக்காது என்று நினைக்கிறேன்.
ஆங்கிலப் பதிவாளர்களின் சந்திப்புகளில் எல்லாம் அவரவர்களுக்கு அவரவர்களேதான் விருந்து அளித்துக் கொள்ள வேண்டும். தமிழ் வலைப்பதிவாளர்கள் அப்படி இல்லை. சந்திக்குமுன் வீட்டிலேயே விருந்து முடித்துவிட்டோ அல்லது வீட்டிற்குப் போனதும்தான் விருந்து என்றோ உயர்ந்த கொள்கையுடன், ஒரு இலட்சிய சந்திப்பில்தான் ஈடுபடுகிறோம்.
ம்ம்ம்! யா†¥ சாட்டில் எல்லோரும் சந்தித்துக் கொள்வதும் நல்ல ஒரு யோசனை.
க்ருபா

4 dharma adigal
6/6/2004 9:27:23 AM
|
usha
|
Email
|
|