web counter

'முக'வரி

லேட்டஸ்ட் டிப்ஸ்
தொண்டை வறண்ட உணர்விருந்தாலோ அல்லது தாகம் எடுத்தாலோ, தண்ணீர்க் குடிக்கவும்...

லேட்டஸ்ட் பொன்மொழி
Blogல கேலண்டர் வைக்கலாம், ஆனா கேலண்டர்ல blog வைக்க முடியாது.

என் tech blog (தமிழில்)
தமிழில் .NET blog

இதுக்கு முன்னாடி...

 

Powered By...

மீட்டர் ஏறாம மேட்டர தெரிஞ்சுக்க...
Use RSS feeds to save your valuable time

ராகுகாலத்தில் ஆரம்பிச்ச உபுண்டு 7.04 அப்டேட்...
15-02-2008 21:34:31

வீட்டுக்கு வந்தோமா வேலயப்பாத்தோமான்னு இல்லாம, உபுண்டு குபுண்டுன்னு திரிஞ்சா நேரம்தான் வீணாகும் போலருக்கு.

ரெண்டு கணிப்பொறி வெச்சுருந்தேன், ஒன்னு முழுக்க முழுக்க லினக்சுக்கு (உபுண்டு 6.10). முதல் கணினில கொஞ்சம் பழுதுன்னு ரெண்டாவதுல மொதல் கணினியோட வன்தகட்டைப் பொருத்துப் பயன்படுத்திண்ட்ருந்தேன். ரெண்டாவது கணிப்பொறியோட வன்தகடு சமத்தா பரன்மேல தூங்கித்து.

அப்படியே விட்டுருக்கக்கூடாதா? புடிச்சுது சனி. இன்னிக்கு வெள்ளி நாளைக்கு சனி. ஆனாலும் எனக்கு வெள்ளியிலேயே சனி. அந்தரெண்டாவது உபுண்டு வன்தகட்டை எடுத்து 7.04க்கு அப்க்ரேட் பண்ணலாமேன்னு தோணிச்சு. சைத்தான், சாத்தான், சனின்னு ஏதோ ஒரு மதத்தோட என்னமோ ஒன்னுதான் என் மனசுக்குள்ள பூந்து அப்படி யோசிக்க வெச்சுருக்கணும். இல்லாட்டி இப்படி இருக்கற வேலையை எல்லாம் விட்டுட்டு இந்த மாதிரி காரியத்துல எறங்கி இருப்பேனா?

System->Administration->Update Manager க்குப் போய் அப்க்ரேட் பட்டனை அழுத்தினதும் "authentication error" வந்துது. அப்போவாவது பேசாம இருந்துருக்கலாம். இருக்கலையே... apptitude manager ஐப்புதுப்பிச்சு எப்படியும் விடறதில்லைப்பேர்விழின்னு shell promptக்குப்போய் "sudo aptitude update && sudo aptitude upgrade" ன்னு குடுத்தேன். அப்பறம் என்ன, "250 MB download பண்ணணூம், இன்னாபா, ஓக்கேயா?"ன்னு அப்பவும் ஒரு சாய்ஸ் குடுத்துது. என்னமோ என்னைப் பார்த்து உபுண்டு கம்யூனிட்டியே "எவ்வளோ தடுத்தாலும் அறிவில்லடா, இவன் ரெம்ப நல்லவண்டா"ன்னு சொல்ற மாதிரியே தோணிச்சு. ஜம்முனு சொல்லிட்டேன், மீட்டரப்போடு மேட்டர முடின்னு.

வீட்ல புதுசா BSNL இணைய இணைப்பு வந்துருக்கு. என்ன வேகம், என்ன சுறுசுறுப்பு. என் கண்ணே பட்டுடும் போலருக்கு. இதுக்கு முன்னாடி வெச்சுருந்த சிஃபி broadband க்கும் உபுன்டூவுக்கும் ஜாதகத்தில் ஒரு பொருத்தம் கூட இல்ல போலருக்கு. கல்யாணமே நடக்கலை. 6.06 வெச்சுருக்கும்போது நல்லாதான் இருந்துது. அப்பறம் சிஃபில என்னமோ dialer clientஐ அப்க்ரேட் பண்ணினாங்க. அதோட அதுங்க ரென்டுக்கும் விவாகரத்தும் நடந்து முடிஞ்சுது.

என்ன சொல்ல வந்தேன், ஆங்... முன்னொரு காலத்தில் உபுண்டு+சிஃபி இணைந்திருதபோது airtel broadband வேகத்தில் திருவோடு ஏந்தி பிச்சை வாங்காத குறைதான். ஆனால் இப்பொழுது பி.எஸ்.என்.எல். வேகத்தில் அதையும் மிஞ்சி விட்டது. 250 MB upgrade files டௌன்லோட் ஆக 45 நிமிடங்கள் கூட ஆகவில்லை.

அப்பறம் என்ன ஆச்சுன்னா, எல்லாம் டௌன்லோட் ஆனதும் நல்லபடியா இன்ஸ்டலே?ணும் முடிஞ்சுது. restart பண்ணச்சொல்லி யாரும் எதுவும் கேக்கலை. நானும் எல்லாம் நல்ல படியா முடிஞ்ச ஒரு கு??யில் shell promptஐ மூடிவிட்டேன். அப்பறம் பார்த்தா, gnome menu எலெல்லாம்disableஆகி அசையக்கூட இல்லை. இருந்த shell prompt ஐயும் யும் மூடிட்டேன். hardboot பண்றதுக்கும் பயமா இருந்துது, டௌன்லோட் பண்ணின 250 MB யும் அப்பறம் எள்ளுதண்ணிதான்!!! சரின்னு Ctrl+ALT+1 போட்டு வேற ஒரு செ?ன் ஆரம்பிச்சு ஒரு வழியா reboot பண்ணினேன்.

திருப்பி உள்ள வந்து பார்த்தா..... அதே 6.10 பதிப்பு. சரி, திரும்பியும் "sudo aptitude update && sudo aptitude upgrade" போட்டுப் பார்த்தா, "Need to get 0B of archives. After unpacking 0B will be used."ன்னுதான்? சொல்லுது. Upgrade Manager வேற என்னடான்னா, திரும்பி 250 MB டௌன்லோட் பண்ணுமாம். BSNL connection வந்து ரெண்டு நாள்லயே இவ்ளோ bandwidth வேற போய்ந்தே, போயே போச், its gone ன்னு இணைய வானில் அளவிடமுடியா நஷ்டம்.

பதிவிறங்கினது எல்லாம் காத்தோட காத்தா கலந்து மறஞ்சு போச்சா? மேலோட்டமா googleல தேடினதுல ஒன்னும் தேறல. இப்போதைக்கு பேசாம நம்ப வேலய ஒழுங்கா கவனிக்க வேண்டியதுதான்.

ஒரே உருப்படியான காரியம், ஏதோ கொஞ்சம் நேரம் harddisk head சுத்திச்சு. துருப்புடிக்காம இருந்தா சரி.
Next comment

இதே மாதிரி பிரச்சனை 7.04- 7.10 செய்து மாட்டிக்கிட்டு முழிச்சி பிறகு எல்லாவற்றையும் அழைத்து புதிதாக 7.10 போட்டேன்.பல லினக்ஸ் ஆட்கள் இந்த அப்டேட் மூலம் மேம்படுத்தாதே என்று எவ்வளவு தரம் சொன்னாலும் இப்படி ஏதாவது பண்ணி தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. :-)
வடுவூர் குமார்     15 பிப்ரவரி 2008
அழிச்சி (அழைத்து என்று தட்டச்சிட்டேன்)
வடுவூர் குமார்     15 பிப்ரவரி 2008
குமார், நீங்களும் இந்த விளையாட்டெல்லாம் விளையாடி இருக்கீங்களா? நான் என்னமோ கனியிருப்பக்காய் கவர்ந்தற்றுன்னு இப்படி பண்ணினேன். இதெல்லாம் கதைக்கே ஆகாது. ஒவ்வொரு புது ரிலீசுக்கும் மொதல்லேர்ந்து எல்லாத்தயும் ரெண்டு மூணு நாள் செலவு பண்ணி இன்ஸ்டால் பண்ணனும்னா நான் அதுக்கு bachelorஆ இருந்தாதான் முடியும். :-)) பேசாம 6.10வை வெச்சே கொஞ்ச நாளைக்கு காலத்தை ஓட்டலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
சு. க்ருபா ஷங்கர்     16 பிப்ரவரி 2008
test
    30 டிசம்பர் 2008





உங்கள் பெயர்/முகமூடிப் பெயர்
வலைப்பூ
மின்னஞ்சல்
தர்ம அடி